Tuesday, January 29, 2013

பின்லடனின் வீட்டைக் கண்காணித்த கண்கள்!

வாஷிங்டன், அமெரிக்கா: பின்லேடன் கொல்லப்பட்டபோது மறைந்திருந்த வீட்டுக்கு அருகேயே, மற்றொரு வீட்டில் சி.ஐ.ஏ.யின் உளவாளிகள் மாதக்கணக்கில் தங்கியிருந்த விஷயம் தற்போது வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்குள் சி.ஐ.ஏ. தனது மறைவிடமாக வைத்திருந்த இந்த வீடு பற்றிய தகவல் ஏதும் வெளியே கசிந்துவிடாதபடி, சி.ஐ.ஏ. வெற்றிகரமாகப் பார்த்துக் கொண்டது.
தமது நாட்டுக்குள் ரகசிய வீடு ஒன்றுக்குள் சி.ஐ.ஏ. உளவாளிகள் தங்கியுள்ள விஷயம், பாகிஸ்தானிய உளவுத்துறைக்கேகூடத் தெரிந்திருக்கவில்லை என்பதே இதிலுள்ள சுவாரசியம்.
பின்லேடன் மறைந்திருந்த வீட்டுக்கு அருகே கண்ணால் பார்க்கும் தொலைவில்தான் சி.ஐ.ஏ.யின் வீடும் இருந்திருக்கின்றது. அங்கிருந்து பின்லேடன் மறைந்திருந்த வீடு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டிருக்கின்றது.
“குறிப்பட்ட வீட்டில் மிகக் குறைவான எண்ணிக்கையிலான சி.ஐ.ஏ. உளவாளிகள்தான் தங்கியிருந்தனர். அவர்கள் சக்திவாய்ந்த டெலஸ்கோப் காமெராக்கள் முலம் பின்டன் மறைந்திருந்த வீட்டிலுள்ள நகர்வுகளையெல்லாம் படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருந்தனர்” என்று பெயர் தெரிவிக்க விரும்பாத சி.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.
“குறிப்பிட்ட வீட்டின் தோட்டத்தில் எப்போதாவது உயரமான நபர் ஒருவர் உலாவுவது எம்மால் படமெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த உயரமான நபர்தான் பின்லேடன் என்று எம்மால் உறுதிசெய்ய முடியவில்லை” எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த சி.ஐ.ஏ. உளவாளிகள் பின்லேடனின் வீட்டுக்கு அருகே இருந்தபோதிலும், பின்லேடனைக் கொல்ல அமெரிக்க அதிரடிப் படையினர் சென்றபோதுகூட, இவர்கள் வெளிப்படவில்லை. ஒப்பரேஷன் முடிந்து, பின்லேடனின் உடலும் அப்புறப்படுத்தப்பட்ட பின்,  சி.ஐ.ஏ.யின் ஆட்களும் ஓசைப்படாமல் அங்கிருந்து அகன்று விட்டனர்.

பின்லேடன் கொலை – எப்படி உதவினார் பாகிஸ்தான் டாக்டர்?

இஸ்லாமபாத், பாகிஸ்தான்: பின்லேடனின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ள சி.ஐ.ஏ.மேற்கொண்ட முறைகள் பற்றிய தகவல்கள், ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புதிதாக வெளியாகியுள்ள தகவல், ஒரு பாகிஸ்தானிய டாக்டர், எப்படி உதவினார் என்பது!
இந்த டாக்டர் (பெயர் வெளியிடப்படவில்லை) பாகிஸ்தான் அரசு சுகாதாரத் துறையில் சீனியர் பதவியில் இருப்பவர். சி.ஐ.ஏ.க்காக அவர், தனக்குக் கீழ் பணிபுரியும் சில நர்ஸ்களை உபயோகித்து தகவல் திரட்டிக் கொடுத்தார்.
சி.ஐ.ஏ., பின்லேடன் மறைந்து வாழ்ந்த வீட்டைக் கண்காணித்து வந்ததில், அங்கு பத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிப்பது தெரியவந்திருந்தது. இவர்களில், பின்லேடனின் மனைவிகளும், குழந்தைகளும் அடக்கம்.
அந்த வீட்டைத் தாக்குவதற்குமுன், அங்கிருப்பவர்களில் யார் யார், உண்மையிலேயே பின்லேடனின் குடும்பத்தினர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள சி.ஐ.ஏ. விரும்பியது. அதற்காகவே இந்த பாகிஸ்தானிய டாக்டரை ரகசியமாக அணுகியது சி.ஐ.ஏ. (பாகிஸ்தானிய அரசுக்குத் தெரியாமல்தான்!)
உதவ முடிவுசெய்த டாக்டரிடம், ஒரு திட்டத்தைப் போட்டுக் கொடுத்தது சி.ஐ.ஏ.
சி.ஐ.ஏ.யின் திட்டப்படி, சுகாதார ஊழியர்களை அந்த ஏரியாவுக்கு, இந்த டாக்டரால் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வீடுவீடாகச் சென்ற அவர்கள் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து ஊசி போட்டனர். அந்த வகையில் பின்லேடனின் வீட்டுக்குள்ளும் அவர்களால் நுழைய முடிந்திருந்தது.
பின்லேடனின் வீட்டிலிருந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட நர்ஸ்கள், ஊசிகளில் படிந்த குழந்தைகளின் ரத்தத்தை பத்திரமாக வெளியே கொண்டுவந்தனர். இந்த ரத்த சாம்பிள்களை வைத்து டி.என்.ஏ. சோதனைகள் செய்யப்பட்டன. (பின்லேடனின் டி.என்.ஏ. சாம்பிள் ஏற்கனவே சி.ஐ.ஏ.யிடம் இருந்தது.)
இரண்டையும் ஒப்பிட்டு, பின்லேடனின் குழந்தைகள் சி.ஐ.ஏ.யால் அடையாளம்  காணப்பட்டனர். அதன் பின்னரே, அந்த வீட்டின்மீது அதிரடித் தாக்குதல் நடாத்தப்பட்டது. பின்லேடன் கொல்லப்பட்டார்.
இப்போது, இந்தத் தகவல் எப்படி வெளிவந்தது என்று அறிய ஆவலாக இருக்கிறதா? சி.ஐ.ஏ.க்கு உதவிய டாக்டர்,  இப்போது பாகிஸ்தானிய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்!

Sunday, January 27, 2013

ஐயோ! இதையா உங்கள் உளவுத்துறை கவனிக்கவில்லை?

அமெரிக்க உளவுத்துறைகளுக்குள் பணியில் சேருவதென்றால், அது அவ்வளவு சுலபமல்ல. பணியில் சேர விண்ணப்பிக்கும் நபர் பற்றிய எத்தனையோ ஸ்கிரீனிங்குகள், பேக்ரவுண்ட் செக்குகள் என்று அந்த ஆளையே முழுமையாக உருவிப் பார்த்துவிட்டுத்தான் பணியில் சேர்த்துக் கொள்வார்கள். அந்தளவு கில்லாடிகள் அமெரிக்க உளவு அமைப்புகள்.
ஆனால், கில்லாடிக்குக் கில்லாடியாக, இந்த ஸ்கிரீனிங் எல்லாவற்றையும் கடந்து உளவுத்துறைக்குள் பணியில் சேர்ந்துவிடும் வெளியாட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களில் சிலர், ஏதோ ஒரு காலத்தில் உளவுத்துறையிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள். வேறு சிலரோ, கடைசிவரை அகப்பட்டுக் கொள்ளாமல் காலத்தை ஓட்டிவிடுகிறார்கள்.
ஓருசிலர், உளவுத்துறையின் பணியிலிருந்து பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர்தான், அவர்கள் வெளியாட்களுக்காக உளவு பார்த்த விஷயமே தெரியவந்திருக்கிறது. அதற்குள் அவர்கள் உள்ளேயிருந்து அனுப்பவேண்டிய தகவல்கள் அனைத்தையும் அனுப்பி முடித்திருப்பார்கள்.
இவையெல்லாம் உளவுத்துறைகளுக்கு உள்ளே நடக்கும் உள்விவகாரங்கள்.

சுவாரசிய விவகாரங்கள்!

பொதுவாகவே, உளவுத்துறைகளுக்கு உள்ளே நடப்பவை சுவாரசியமானவை. பல சமயங்களில் இவை வெளியே வருவதில்லை. குறிப்பிட்ட சில சம்பவங்கள் வேறு வழியில்லாமல் வெளியே வரவேண்டிய கட்டாயத்தில், வெளியாகும்.
அமெரிக்காவின் சக்திவாய்ந்த உளவுத்துறைகளுக்குள் வெளியாட்கள் ஊடுருவுவதும், அந்த விஷயம் வெளியே வருவதும், நாம் மேலே குறிப்பிட்ட சுவாரசிய சம்பவங்களில் அடக்கம்.
அமெரிக்க உளவுத்துறையில் வேலை எடுப்பது பல ஃபில்ட்டர்களைத் தாண்டித்தான் என்ற போதிலும்...
உலகம் முழுவதிலும் கண்களையும் காதுகளையும் வைத்திருக்கும் அமெரிக்க உளவுத்துறைகளுக்குள் வெளியாட்களால் வெளியாட்களால் ஊடுருவ முடியுமா? இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?
நடந்திருக்கிறதே!
ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த உளவாளி ஒருவர் அமெரிக்க உளவு அமைப்புகளான எஃப்.பி.ஐ. மற்றும் சி.ஐ.ஏ.யில் மிகவும் பொறுப்பான பதவிகளில் இடம்பிடித்துத் தீவிரவாதிகளுக்குத் தகவல் அனுப்பிவந்த விஷயமும்  அம்பலமாகியிருக்கிறது.
இதேபோல அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்காவின் பாதுகாப்பு உள் விஷயங்களை அறியக்கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் (இ.பி.ஏ.) பணியில் சேர முடிந்துமிருக்கிறது.

பூச்சுற்றியது ஒரு பெண்!

வஹீதா தஹ்ஸீன் என்ற  பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்தான் முதன் முறையாக, அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைக் கையாளும் இலாகா ஒன்றில் இருந்துகொண்டு ரகசியங்களை வெளியே கடத்தியிருந்தார் என்று தெரிவித்தது எஃப்.பி.ஐ. இந்த வஹீதா தஹ்ஸீன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கூட அல்ல என்பது அடுத்த ஆச்சரியம். அமெரிக்காவில் வசித்தாலும் குடியுரிமை பெறுவதற்கு முன்னரே வாஷிங்டனில் இருக்கும் இ.பி.ஏ.வில் முக்கியப் பொறுப்பான விஷங்களை ஆய்வு செய்யும் துறையில் இவர் பணியில் சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறார்.
இவர்மீது எப்படிச் சந்தேகம் ஏற்பட்டது? அதற்குக் காரணம் தஹ்ஸீனுடைய அமெரிக்கக் குடியுரிமை விண்ணப்பம்தான்.
1998ல் தஹ்ஸீன் இ.பி.ஏ.யில் வேலைகேட்டு விண்ணப்பித்தபோது, அவரது விண்ணப்பம் பல அடுக்கு வடிகட்டல்களின் பின்னரே ஏற்றுக்கொள்ளப்பட்டு வேலை கொடுக்கப்பட்டது. பொதுவாக இப்படியான சென்சிட்டிவ்வான வேலைகளுக்கான விண்ணப்பங்களில் விண்ணப்பதாரியின் கல்வித் தகுதி, மற்றும் வேலை அனுபவங்கள் மாத்திரம் பார்க்கப்படுவதில்லை. அதற்கும் ஒருபடி மேலேபோய், அவரது பின்னணி, குடும்பத்தினரின் பின்னணி, முன்னாள் தொடர்புகள் என்று பல விஷயங்களில் விண்ணப்பதாரியை வடிகட்டுவார்கள்.
ஆனால் இந்த வடிகட்டல்களிலும், இ.பி.ஏ. தஹ்ஸீனுடைய விண்ணப்பத்தில் முக்கியமான விடயம் ஒன்றைக் கவனிக்கத் தவறியிருக்கிறது. அது அவரது பின்னணி.

ஐயோ! இதையா கவனிக்கவில்லை?

அவரது கணவர் எங்கே பணியில் இருந்தவர் என்பது கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்தது. கணவர் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புகொண்டவர். பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுத்துறையில் (மிலிட்டரி இன்டலிஜன்ஸ்) முக்கிய பிரிவு ஒன்றில் பணிபுரிந்தவர்.
தீவிரவாத அமைப்புக்கு ஆயுதங்கள் கொடுத்த உளவுத்துறையின் ஆளையே அடையாளம் தெரியாமல் கோட்டை விட்டனர்!
பாகிஸ்தான் ராணுவ உளவுப்பிரிவின் இந்த முக்கிய பிரிவு செய்த பிரதான பணி என்ன தெரியுமா? பாகிஸ்தான் அரசுக்காக, அல்-காய்தா மற்றும் தலிபான் இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலமாகச் சில காரியங்களைச் செய்து முடிப்பது.
இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு ஒருகாலத்தில் ஆயுதங்களையும், சில ராணுவப் பயிற்சிகளையும் கொடுத்தது பாகிஸ்தானின் ராணுவ உளவுத்துறை. (இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், மேற்படி தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை ஆயுதங்களைச் சுயமாகவும் கொடுத்திருக்கிறது, அமெரிக்க உளவுத்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கவும் கொடுத்திருக்கிறது!)
தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்பட்டபோது அதை நடத்தி முடித்த உளவுத்துறைப் பிரிவில்தான் தஹ்ஸீனுடைய கணவர் பணியாற்றியிருந்தார். இதனால் அவருக்கு மேற்படி தீவிரவாத இயக்கங்களில் உயர்மட்டத் தலைவர்களுடன் நிச்சயம் தொடர்புகள் இருந்திருக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல.. வேறொரு பகீர் விவகாரமும் உண்டு!

அது ஒரு பின்னணி. மற்றய பின்னணி, தஹ்ஸீன் அமெரிக்காவில் குடியேறுமுன் பாகிஸ்தானில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்திருக்கிறார். குறிப்பிட்ட அந்தத் தொண்டு நிறுவனம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இயங்கிவந்தது. Help Orphans and Widows (சுருக்கமாக HOW)  என்ற பெயரில் இயங்கிய இந்தத் தொண்டு நிறுவனத்துக்கும் அல்காய்தாவுக்கும் தொடர்புகள் இருந்தன என்பது அமெரிக்க உளவுத்துறையின் கண்டுபிடிப்பு.
முஸ்லிம்களின் பாரம்பரிய உடை அணியும் தஹ்ஸீன், அமெரிக்காவில் குடியேறியபின் மிசோரியிலிருக்கும் இஸ்லாமிய- அமெரிக்கத் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கிறார். இந்தத் தொண்டு நிறுவனம் பல நாடுகளில் பின்லேடனின் பல திட்டங்களுக்கு நிதியுதவி செய்துள்ளது என்பதும் அமெரிக்க உளவுத்துறையின் கண்டுபிடிப்பு.
குறிப்பிட்ட மிசோரி தொண்டு நிறுவனம், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில், அமெரிக்க நிதித்துறையால் பிளாக்லிஸ்ட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த கட்டிடம், சில சமயங்களில் தீவிரவாதிகளின் மறைவிடமாகவும் செயல்பட்டிருக்கலாம் என்று எஃப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தஹ்ஸீன் அமெரிக்க அரசில் வேலைக்காக விண்ணப்பித்தபோது, தனது விண்ணப்பத்தில் தான் பாகிஸ்தானில் நடாத்திவந்த தொண்டு நிறுவனம்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். விதவைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்காகவும் நடாத்தப்பட்ட அமைப்பு அது எனவும் விளக்கம் கொடுத்திருந்தார்.
“தஹ்ஸீன் நடத்தி வந்த (HOW) அமைப்பு ஒரு சேவை மனப்பான்மை உடைய உண்மையான தொண்டு நிறுவனம் என்று நாங்கள் நம்பியே அவருக்கு வேலை கொடுத்தோம்” என்று, பின்னர் விசாரணையின்போது இ.பி.ஏ.யால் கூறப்பட்டது. இ.பி.ஏ.யில் அவருக்கு வருடத்துக்கு 90,000 டொலர் சம்பளத்துடன், 6 தடவைகள் போனஸ்கூட வழங்கப்பட்டிருக்கிறது.

பயணத்துக்குப் பணம் கொடுத்ததும் இவர்களே!

பலம்வாய்ந்த அமெரிக்க அமைப்பை ஒரு ஆசியப் பெண்ணாலேயே மிகச் சுலபமாக ஏமாற்ற முடிந்திருக்கிறது!
அமெரிக்காவில் குடியேறிய பின்னரும் இவர் பல தடவைகள் பாகிஸ்தான் சென்று திரும்பியிருக்கிறார். (அமெரிக்காவில் அவர் கடைசியில் கைது செய்யப்பட்டதும், பாகிஸ்தான் செல்லும் பயணம் ஒன்றை அவர் மேற்கொள்ளவிருந்த நிலையில்தான்) கைது செய்யப்படுவதற்குமுன் அவர் பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்றுவந்ததற்குக் காரணம் நோய்வாய்ப்பட்ட தனது உறவினர்கள் மற்றும் அநாதைகளைச் சந்திப்பதாக என்று கூறியதையும் இ.பி.ஏ. நம்பியிருக்கின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கான செலவுகளையும் இ.பி.ஏ. ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதாவது, அவர் அமெரிக்க அரசின் செலவிலேயே பாகிஸ்தாளுக்கு அவ்வப்போது பயணம் செய்திருக்கிறார்.
அவர்மீது சந்தேகம் ஏற்பட்டபின் எஃப்.பி.ஐ நடாத்திய ரகசிய விசாரணைகளில், அவர் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கு கூறிய காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று தெரியவந்ததாக பின்னர் விசாரணையில் கூறப்பட்டிருந்தது.
பாகிஸ்தானுக்கு விமானம் ஏறத் தயாராக இருந்த தஹ்ஸீனை எஃப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த உடனேயே அவரது வீடு எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் சோதனையிடப்பட்டிருந்தது. ஃபெயர்ஃபக்ஸில் அமைந்திருந்த அவரது வீட்டின் பெறுமதி, அரை மில்லியன் டொலர்கள். இங்கும் ஒரு சுவாரசியமான விஷயம், அவரது வீட்டைச் சோதனை செய்வதற்கான உத்தரவில் கையொப்பமிட்டிருந்த அமெரிக்க நீதிபதியின் வீடுகூட தஹ்ஸீனின் வீட்டிலிருந்து நான்கைந்து வீடுகள் தள்ளியே இருந்தது.

வீட்டுச் சோதனையில் அகப்பட்டவை

சில சமயங்களில் வீட்டுச் சோதனைகளில் உளவுத் துறையினருக்குப் புதையலே கிடைத்துவிடும்!
சோதனையின்போது அவரது வீட்டில் பேராபத்து விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் தஹ்ஸீன் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அவர்கள், அல்-காய்தாவின் திட்டமான அமெரிக்காவில் குடிநீரில் கிருமிகளைக் கலந்து, பேரழிவை ஏற்படுத்தும் திட்டத்துடன் ஒப்பிட்டனர்.
தஹ்ஸீனின் வீட்டிலிருந்து எஃப்.பி.ஐ. கைப்பற்றிய, அரபு மொழியிலிருந்த ஆவணங்களில் இருந்த விடயங்களை மொழி பெயர்த்த போது, அதில் அவர் அமெரிக்க ரகசியங்களை உளவு பார்க்கப் போட்டிருந்த திட்டங்கள் பற்றிய குறிப்புகள் இருந்தன.
“நாங்கள் வட அமெரிக்காவில் இருப்பதால் நிறைய விடயங்களை அறிந்து கூற முடியும்” என்றும் “நாங்கள் உளவுச் செய்திகளைப் பெற வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உளவு நிறுவனங்களையே குறி வைத்திருக்கிறோம்” என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
தீவிரவாதிகளின் ரகசிய உளவாளிகள் பற்றிய புத்தகம் ஒன்று போல் ஸ்பெர்ரியால் எழுதப்பட்டிருந்தது. “உளவு: எவ்வாறு தீவிரவாதிகளின் உளவாளிகள் வாஷிங்டனில் ஊடுருவுகிறார்கள்” என்ற இந்தப் புத்தகம் வெளியானபோது விற்பனையில் சக்கைபோடு போட்டது.

சுலபமாக ஊடுருவுகிறார்களே!

இந்தப் புத்தகத்தில் போல் ஸ்பெர்ரி, “தீவிரவாதிகளின் ரகசிய உளவாளிகள் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களை முன்னிறுத்தி, அதன் பின்னணியிலேயே இயங்குகின்றனர்” என்று கூறுகிறார். தொண்டு நிறுவனங்களைக் கண்காணிக்குமாறு, எஃப்.பி.ஐ. அதிகாரிகளுக்குத் தனது புத்தகத்தில் அறிவுரை கூறியிருக்கும் ஸ்பெர்ரி, “தொண்டு நிறுவனங்களின் பின்னணியில், தீவிரவாதிகளின் ரகசிய உளவாளிகள் இருக்கக்கூடும் என்று அமெரிக்க நீதித் துறை கடந்த ஓக்டோபர் 2004 வரை சிந்தித்தது இல்லை” என்றும் கூறுகிறார்.

ஓய்வு பெற்ற எஃப்.பி.ஐ. அதிகாரி ஜோன் கோல், “தீவிரவாத இயக்கத்தினர் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைகளையே குறி வைத்திருப்பது, அமெரிக்காவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறைகளுக்குள் ஊடுருவுவது தீவிரவாதிகளுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை. இவர்கள் அமெரிக்க உளவுத்துறைகளுக்குள் எங்கே, எப்படி ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை உளவுத்துறைகள் சீரியஸாகக் கண்காணிப்பதில்லை.
உதாரணமாக, எஃப்.பி.ஐ.ல் பல அரேபிய மொழிப் பெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்களது பின்னணிகள் முழுமையாக ஆராயப்பட்டே பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்று சொல்வதற்கில்லை” என்கிறார்.
செப்டெம்பர் 11ம் திகதிய தாக்குதலுக்குப் பின்னரே அமெரிக்க உளவுத்துறைகள் அமெரிக்காவுக்குள் இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் பற்றி உளவு பார்ப்பதில் மும்மரமாக இறங்கின. பல கைதுகள் நடந்தன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இப்படிக் கைப்பற்றப்பட்ட அநேக ஆவணங்கள் ஆங்கில மொழியில் இல்லை. அரபு அல்லது உருது மொழியில் இருந்தன.

டாக்ஸி டிரைவர்களுக்கும் உளவுத்துறை வேலை!

உடனே எஃப்.பி.ஐ. உட்பட மற்றய அமெரிக்க உளவுத்துறைகளுக்கும் அரபு மொழிபெயர்ப்பாளர்கள் அவசர அவசரமாகத் தேவைப்பட்டனர். இப்படியான நேரத்தில் அமெரிக்க உளவுத்துறைகள் அமெரிக்காவில் டாக்ஸி செலுத்தும் அரபு மற்றும் உருது பேசத்தெரிந்த டாக்ஸி டிரைவர்கள் பலரைத்தான் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியில் அமர்த்திக் கொண்டது. மொழிபெயர்ப்பாளர்கள் அவசரத் தேவையாக இருந்ததில் இதில் பலரது பின்னணிகள் சரியாக ஆராயப்படாமலேயே பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இதைத்தவிர மொழிபெயர்ப்பாளர்களைத் அவரசமாகத் தேடுவதற்காக உளவுத்துறைகள் தொடர்புகொண்ட ஒருவர் அப்துல் ரஹ்மான் அல்மொதி. இவர் யாரென்றால் அப்போது வாஷிங்டனில் வசித்த, இங்குள்ள முஸ்லிம் மக்களிடையே பிரபலமான ஒரு மதத் தலைவர். இவரைத் தொடர்புகொண்ட அமெரிக்க உளவுத்துறைகள் அரபு மற்றும் உருது மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்புச் செய்யக்கூடிய சிலரைத் தமக்கு அடையாளம் காட்டுமாறு கேட்டுக்கொண்டன.
சிலரது பின்னணியே தெரியாமல் அவசரப்பட்டு உளவு வேலைகளில் இணைத்துவிட்டுப் பின்னர் அவஸ்தை
அப்துல் ரஹ்மான் அல்மொதி கைகாட்டியவர்களுக்கு உளவுத்துறைகளில் வேலையும் கிடைத்தது. அதுவரைக்கும் சரி. எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பின்னாட்களில் இதே அப்துல் ரஹ்மான் அல்மொதி, எஃப்.பி.ஐ.யிடம் அகப்பட்டுக்கொண்டார். அல்காய்தா இயக்கத்துக்காக நிதிச்சேகரிப்பில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது.
அப்படியானால், அவரால் கைகாட்டப்பட்டு, உளவுத்துறைகளில் வேலையில் இணைக்கப்பட்டவர்கள், பணியில் இருந்தபோது என்னவெல்லாம் செய்திருப்பார்களோ? அவர்களில் எத்தனைபேர் இன்னமும் உளவுத்துறைப் பணிகளில் தொடர்கிறார்களோ?
இவையனைத்துக்கும் மேலாக, பல நாட்களாகத் தேங்கிக் கிடந்த அரபு மொழிப்பெயர்ப்பு வேலைகளை முடிக்க, எஃப்.பி.ஐயின் இயக்குனர் ரொபர்ட் முல்லர், சிலரை தானே நேரடியாகத் தொடர்பு கொண்டு பணியில் இணைத்துள்ளார். இவர்களில் பலரது பெயர்கள் தற்போது தொண்டு நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் பட்டியல்களிலும், அல்காய்தாவுக்கு பண உதவிகள் செய்து அகப்பட்டவர்கள் பட்டியலிலும் இருக்கின்றன!

ஒளிந்துகொள்ள அருமையான மறைவிடம்!

முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஸிபல் எட்மண்ட்ஸ், “கடுமையான சட்டதிட்டங்களைக் கடந்துதான் எஃப்.பி.ஐ.யில் பணிபுரிய தடையில்லாச் சான்றிதழைப் பெற முடியும். ஆனால், தற்போது எஃப்.பி.ஐ. அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒளிந்து கொள்வதற்கான பாதுகாப்பான மறைவிடம் போல ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார். தனக்குத் தெரிந்தே இரண்டு பெண் மொழிபெயர்ப்பாளர்கள் பணியில் இணைந்த பிறகு, எஃப்.பி.ஐ.யின் திட்டங்களைத் தீவிரவாதிகளுக்குத் தெரிவித்து வந்தனர் என்கிறார் இவர்.
வாஷிங்டனில் உள்ள வெளிநாட்டுத் தொடர்புகளுக்கு உள்ளே நடப்பது தெரிந்தால் வெளிநாட்டில் கொலைகூட விழும்!
அதில் அரபு மொழி பெயர்ப்பாளரான ஒருவர் அல்-காய்தாவுக்கும், ஃபார்ஸி மொழி பெயர்ப்பாளரான மற்றொருவர் ஈரானுக்கும் தகவல்கள் அனுப்பி வந்துள்ளனர் என்பது அவர் தெரிவிக்கும் தகவல்.
எஃப்.பி.ஐ.யில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்த மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒருவர், விடுமுறைக்காகத் தனது தாயகத்துக்குச் சென்றிருந்தார். விடுமுறைக்குச் சென்றிருந்த இடத்தில் அவரது தாயகமான அந்த அரபு நாட்டின் உளவுத்துறை, இந்த நபர் தமது எதிரி நாட்டிலிருந்து பரிசுகளைப் பெற்று வந்ததோடு, அதனை மறைத்த குற்றத்துக்காக, அவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது!
இந்த அரபு நாட்டின் எதிரி நாடு அமெரிக்கா அல்ல. அப்படியானால் அமெரிக்காவிலிருந்து ரகசியங்கள் அந்த நாட்டுக்குச் சென்றிருக்கலாம்.
நடா நதிம் பிரௌட்டி விஷயத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட அமெரிக்க உளவுத்துறைகள் கோட்டை விட்டிருந்தன.
இந்தப்பெண் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.யில் ஒரு மத்திய செயலதிகாரியாக வேலை செய்தவர். அந்த வேலை கிடைப்பதற்கான கல்வித் தகுதி அவருக்கு எப்படிக் கிடைத்தது என்றால், அவர் மற்றொரு உளவுத்துறையான எஃப்.பி.ஐ.யின் அகாடமியில் படித்துப் பட்டம் பெற்றவர். மொத்தத்தில் அமெரிக்காவின் இரு பிரதான உளவுத்துறைகளுக்கு ஊடாகவும் இவர் வந்திருக்கிறார்.

குடியுரிமை பெற்றதிலேயே தில்லுமுல்லு!

பின்னர் இந்தப் பெண் அகப்பட்டு விசாரணை வளையத்துக்குள் வந்தபோது, இவர் எஃப்.பி.ஐ.யின் அகாடமியில் சேர்வதற்கே ஏமாற்று வழியில்தான் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றிருந்தார் என்று தெரியவந்தது. தனது அகாடமியில் அவரைச் சேர்த்துக்கொண்டபோது எஃப்.பி.ஐ. இதைக் கவனிக்காமல் முதலில் கோட்டைவிட்டிருந்தது.
எஃப்.பி.ஐ. அகாடமியிலிருந்து பட்டம்பெற்று, அந்தத் தகுதியில் சி.ஐ.ஏ.யில் பணியில் சேர்ந்த இந்தப் பெண், சி.ஐ.ஏ.யில் மூன்று வருடங்கள் மத்திய செயலதிகாரியாகப் பணியாற்றியது சி.ஐ.ஏ.யில் தலைமையகமான லாங்க்லியில்! பணியில் இருந்தபோது இவர் என்ன செய்தார்? சி.ஐ.ஏ.யில் இருந்தபடியே, சி.ஐ.ஏ.யால் கிடைத்த உளவுபார்க்கும் வசதிகளை வைத்து எஃப்.பி.ஐ. மேற்கொண்ட விசாரணைகளை ரகசியமாகக் கவனித்து வந்த விஷயம் தெரியவந்தது.
தங்களது விவகாரங்களில் இவர் உளவுபார்ப்பதைத் தெரிந்துகொண்ட எஃப்.பி.ஐ. அதன் பின்னரே இவரது பின்னணி பற்றித் துருவியதில், அவர்களுக்கு அதிர்ச்சியான விபரங்கள் கிடைத்தன. கிடைத்த விபரங்களின்படி அவருக்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பில் குடும்ப உறவுகள் இருந்தன. அவர்களுடன் இவர் தொடர்பிலும் இருந்தார்.
விசாரணையின் முடிவில், நடா நதிம் பிரௌட்டி, தான் சி.ஐ.ஏ.யில் இருந்தபடி, எஃப்.பி.ஐ.யின் சில நடவடிக்கைகளை உளவு பார்த்ததை ஒப்புக்கொண்டார். அதேநேரத்தில் அவர் தான் பணியிலிருந்த சி.ஐ.ஏ.யில் இருந்தும் ஏதாவது தகவல்களை ஹிஸ்புல்லா அமைப்புக்குக் கொடுத்தாரா என்ற விஷயத்தை சி.ஐ.ஏ.யால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நடா நதிம் பிரௌட்டி சி.ஐ.ஏ.யின் லாங்க்லி தலைமையகத்தில் பணிபுரிந்த பிரிவு என்ன தெரியுமா? வெளிநாடுகளில் ரகசிய உளவு ஒப்பரேஷன்களைத் திட்டமிடும் இலாகா!
“ஒரு சாதாரண கடற்படையில் இருக்கும் பாதுகாப்புக்கூட தேசிய பாதுகாப்பு அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் உளவு அமைப்புகளிடம் இல்லை” என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக வாஷிட்டன் போஸ்ட் எழுதியிருக்கிறது.

இவருக்கு முன்பே கில்லாடிகள் இருந்தனர்!

சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து அலுவல் பார்ப்பதுபோல, சி.ஐ.ஏ.யின் தலைமையகத்துக்குள்ளேயே நுழைந்ததில் நடா நதிம் பிரௌட்டி ஒன்றும் முதல் நபர் அல்ல.
இவர்களில் சிலர், ஏதோ ஒரு காலத்தில் உளவுத்துறையிடம் வசமாக அகப்பட்டுக் கொள்கிறார்கள்
கமல் அப்துல் ஹஃபிஸ் எனும் சிறப்பு அதிகாரி ஒருவர், முஸ்லிம் தீவிரவாதிகள் பற்றி அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தமக்கிடையே விவாதித்துக்கொண்ட பேச்சுக்களைப் பதிவுசெய்து, சம்மந்தப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கே அனுப்பியிருக்கிறார்.
இதே போலத்தான், ஃப்ளோரிடாவில் பணியாற்றிய சமி அல்-அரியனும் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அகப்பட்டுக் கொண்டார்.
ஃப்ளோரிடா அலுவலகத்தில் அவருடன் கூடவே பணிபுரிந்த சக உளவு அதிகாரிகள் சமி அல்-அரியனை முட்டாள் என்று நினைத்திருந்தனர். ஆனால், அவர் அப்படியில்லை. மிகவும் புத்திசாலித்தனமாக செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்துள்ளார் என்பது பின்னர்தான் தெரியவந்தது.
அமெரிக்க உளவுத்துறைக்குள் வெளியாட்கள் ஊடுருவுவது அமெரிக்காவுக்குள் மாத்திரம்தான் நடந்தது என்றில்லை. அமெரிக்காவுக்கு வெளியே வெளிநாடுகளிலும் சில கில்லாடிகள் அமெரிக்க உளவுத்துறையினரின் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்கள்.

சவுதி அரேபியாவிலேகூட எதுவும் செய்ய முடியவில்லை!

இதற்குப் பல உதாரணங்கள் இருந்தாலும், ஒரு உதாரணம், சவுதி அரேபியாவில் அப்துல் ஹாபிஸ் என்பவர் ஊடுருவியது. ரியாத், சவுதி அரேபியாவில் எஃப்.பி.ஐ. ஒரு ரகசிய அலுவலகத்தை வைத்திருந்தது. அமெரிக்காவில் இயங்கும் அல்காய்தா ஆட்களின் சவுதித் தொடர்புகளை அறிவதற்காகத் திறக்கப்பட்ட அலுவலகம் அது. அதில்தான் அப்துல் ஹாபிஸ் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.
அரேபியப் பாணி தலையங்கி மற்றும் வௌ¢ளை நீளங்கி அணிந்தே அலுவலகம் வரும் இவர், ரகசிய உளவு வேலைகளுக்குச் செல்லும்போதுகூட இந்த உடையை மாற்றச் சம்மதிப்பதில்லை என்று இவரைப்பற்றிய முதலாவது குற்றச்சாட்டு அமெரிக்காவிலுள்ள எஃப்.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது.
அடுத்த குற்றச்சாட்டாக, இவர் உளவு பார்க்கப் போவதாகக் கூறிவிட்டு மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்றிருக்கிறார் என்று தகவல் வந்து சேரவே, அங்கே என்னதான் நடக்கிறது என்று பார்த்துவர அதிகாரி ஒருவரை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தது எஃப்.பி.ஐ.
அங்கு சென்ற அதிகாரி, அலுவலகத்தில் இவரது டேபிளில், அல்-காய்தா குறித்த ரகசியத் தகவல்கள் கொண்ட ஃபைல்கள் பரப்பப்பட்டுக் கிடப்பதைக் கண்டார். இதனால் அவரது பின்னணியில் சந்தேகம் ஏற்பட்டபோதும், அவர் வேலையில் தொடர அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட அஸைன்மென்ட் ஒன்றுதான் மாற்றப்பட்டது.

என்மீது கை வைத்தால்….

அப்போதைய காலகட்டத்தில் எஃப்.பி.ஐ.யில் அரேபியர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் இருந்ததால், இவர்மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் விரும்பவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் அரசு அமைப்புகளில், ஒருவர்மீது, அவர் குறிப்பிட்ட ஒரு இனத்தவர் என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்போனால், சம்மந்தப்பட்டவர் நீதிமன்றத்துக்குப் போய், நடவடிக்கை எடுத்த அதிகாரியைச் சிக்கலில் மாட்டிவிட முடியும்.
சில சமயங்களில் தமது சொந்த ஆட்களையே ஆயுத முனையில் கைது செய்ய வேண்டியிருக்கிறது.
பென்டகனின் முன்னாள் உளவு அதிகாரியான வில்லியம் காத்திராப் இதை ஒப்புக் கொள்கிறார். “இப்படி ஒருவரைப் பணியில் சேர்த்துவிட்டால், அதன்பின் அவரை வெளியேற்றுமுன் ஒருமுறைக்குப் பலமுறையாக யோசிக்க வேண்டியிருக்கிறது. இதனால் அமெரிக்காவில் குடியிருக்கும் அரபு முஸ்லிம்களைப் பணியில் அமர்த்தும் முன்பே, அவர்களது விஷயத்தில் பாதுகாப்பு அமைப்புகள் அவரைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் இவர்.
“அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாகவோ, அதிகாரிகளாகவோ நேரடிப் பொறுப்புக்களைக் கொடுப்பது, பிரச்சினைகளை நாமே வரவழைப்பது போன்றது. சமீபத்தில் முஸ்லிம் எஃப்.பி.ஐ. அதிகாரி ஒருவர், தன் இனத்தைச் சேர்ந்த குற்றவாளியை ஒருவரை விசாரிக்க மறுத்திருக்கிறார். இதுவே ஆபத்துக்கள் காத்திருப்பதற்கான ஒரு சிறந்த உதாரணம்” என்கிறார் வில்லியம் காத்திராப்.
இதைத்தான் யானையின் காதுக்குள் எறும்பு நுழைந்ததுபோல என்பார்களோ!




பின்லேடனைப் பிடித்த ‘சூப்பர் மேன்’ உளவாளியின் போட்டோ உள்ளே!



பின்லேடன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவர் கொல்லப்படக் காரணமாக இருந்தவர் பற்றிய சில விபரங்கள் வெளியிடப்படுவதை, சி.ஐ.ஏ. அனுமதித்திருக்கிறது. இவர், அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளருடன் ஒரு சந்திப்பை நடாத்தியிருக்கிறார் என்பது பற்றிய செய்தியை விறுவிறுப்பு.காம் வெளியிட்டிருந்தது. (அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்)
இவரை அடையாளப்படுத்த, ‘ஜோன்’ என்ற ஒற்றைப் பெயரை மாத்திரம் வெளியிட அசோசியேட்டட் பிரஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எழுதியிருந்தோம். அதைத் தவிர, இவரது வேறு அடையாளங்களையோ, உருவ அமைப்பைப் பற்றியோ வெளியே சொல்வதில்லை என உறுதிமொழி வாங்கப்பட்டுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்திருந்தது.
இவரது அடையாளம் வெளியானால், பின்லேடனின் மரணத்துக்குக் காரணமாக இருந்த இவர், அல்-காய்தாவினரால் இலக்கு வைக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டிருந்தது.
சி.ஐ.ஏ.யில் பின்லேடன் வேட்டை புரொஜெக்டில் ஜோன் ஈடுபட்டிருந்த 10 வருடங்களில் அவர், தனக்குக் கொடுக்கப்பட்ட பதவி உயர்வை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். பின்லேடனைப் பிடித்த பின்னர்தான் பதவி உயர்வு என்று பிடிவாதமாக, அதே பதவியில் தொடர்ந்திருக்கிறார்.
பின்லேடனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அங்கு இருப்பவர் அவர்தான் என்பதை உறுதிப்படுத்திய நபரும் இந்த ஜோன்தான்.
மஞ்சள் டை அணிந்து நிற்பவர்தான் ‘ஜோன்’
இவரது உறுதிப்படுத்தல் கிடைத்த பின்னரே, பின்லேடன் வேட்டைக்கான நாள் குறிக்கப்பட்டது. அமெரிக்க அதிரடிப் படையினர் ஹெலிகாப்டர்களில் சென்று அந்த ஒப்பரேஷனை நடாத்துவதை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவும் மற்றையவர்களும் பார்ப்பதற்கு வசதியாக லைவ் ஒளிபரப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஜனாதிபதியுடன் அதே அறையில் இருந்து அந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்கு இந்த ஜோனும் அழைக்கப்பட்டிருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில் ஒரு போட்டோ மாத்திரம் வெள்ளை மாளிகை அதிகாரிகளால் வெளியே ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட போட்டோவில் ஜோனின் முகம் தெரியாதபடி பார்த்துக் கொள்ளப்பட்டது.
இந்தக் கட்டம்வரை எல்லாமே சிறப்பாக நடந்தன.
“கொடுக்கப்பட்டுள்ள  போட்டோவில் பிரேமுக்கு வெளியே நிற்பவர்தான், ஜோன்” என்று கூறியிருந்தார்கள். அந்த போட்டோவின் பிரேமுக்கு வெளியே நின்றிருந்த அவரது உடல் பகுதி மாத்திரம் போட்டோவில் தெரிந்தது.
அது மாத்திரமா? அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற டை தெளிவாகத் தெரிந்தது. போட்டோவில் தெரிந்த அவரது ஒரு பகுதி உடலமைப்பிலிருந்து, சராசரியைவிட அதிக உயரமுடைய நபர் என்பதும் தெரிந்தது.
முதலாவது போட்டோ வெளியிடப்பட்ட இரு தினங்களின்பின், வெள்ளை மாளிகை வேறு சில போட்டோக்களையும் வெளியிட்டது. அந்த போட்டோக்கள் ஒன்றில், மஞ்சள் டை அணிந்த, சராசரியைவிட அதிக உயரம் உடைய நபர் ஒருவர் நின்றிருந்தார்.
ஜோன் யங் என்ற புலனாய்வு எழுத்தாளர், இந்த விபரங்களை வைத்துக் கொண்டு, மர்ம மனிதராக சி.ஐ.ஏ.யால் உருவகப்படுத்தப்பட்ட நிஜ ஜோன் யார் என்பதைக் கண்டுடித்ததாக, நியூயோர்க் ஆப்சேர்வர் பத்திரிகை விஷயத்தை வெளியே கொண்டு வந்திருக்கின்றது.
போட்டோ பிரேமுக்கு வெளியே அவர் நிற்கும்போது அணிந்திருந்த மஞ்சள் டையும், அவரது முகம் தெரியும் போட்டோவிலுள்ள மஞ்சள் டையும் ஒன்றுதான் என்பது ஆய்வில் நிருபிக்கப்பட்ட பின்னரே, இந்த விபரங்கள் அடங்கிய கட்டுரையை பிரசுரிக்க நியூயோர்க் ஆப்சேர்வர் பத்திரிகை தயாரானது.
கட்டுரையைப் பிரசுரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டவுடன் சி.ஐ.ஏ.யின் லாங்க்லி தலைமைச் செயலகத்தைத் தொடர்பு கொண்ட நியூயோர்க் ஆப்சேர்வர் பத்திரிகை, “நீங்கள் மர்ம மனிதராக வைத்திருக்கும் ஜோன் யார் என்பதை நாம் கண்டு பிடித்து விட்டோம். அது பற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா?” என்றும் கேட்டிருக்கின்றது.
இந்தக் கட்டுரை வெளியாகாமலிருக்க சி.ஐ.ஏ. கடும் முயற்சிகளைச் செய்தது. ஆனால், கட்டுரை வெளியாகி விட்டது.
சி.ஐ.ஏ.யின் துணை இயக்குனர் ஜோன் மெக்லோகிளின், “உங்களை எச்சரிக்கிறேன். அந்த மனிதரின் பெயரை வெளியிடாதீர்கள்” என்று கூறியது மாத்திரம், பத்திரிகையால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கட்டுரையையும் போட்டோவையும் வெளியிட்டுள்ள பத்திரிகை, அவரது பெயரை மாத்திரம் வெளியிடவில்லை.
அமெரிக்கர்களால், ‘சூப்பர் ஸ்பை’ என்று கொண்டாடப்பட்டும், மர்ம மனிதராக வைக்கப்பட்டிருந்த ஜோனின் முகம், இப்போது வெளியே தெரிந்து விட்டது.
 




பாகிஸ்தான் உளவுத்துறையின் புதிய தலைவர், அமெரிக்காவிடம் ஒரு விசித்திர கோரிக்கையை வைக்கப் போகிறார் என்று, கூறப்படுகிறது. “சி.ஐ.ஏ., இலக்குகளை காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளட்டும். காரியத்தை நாம் (ஐ.எஸ்.ஐ.) நடத்தி முடிக்கிறோம்” என்பதே அது.
பாகிஸ்தானுக்குள் சி.ஐ.ஏ., தமது உளவு விமானங்களை வைத்து சொல்லிச்சொல்லி அடித்து வீழ்த்தும் தீவிரவாத அமைப்புகளின் இலக்குகளையே ஐ.எஸ்.ஐ.-யின் புதிய தலைவர் தமது கைகளில் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்.
இப்போதெல்லாம், பாகிஸ்தானுக்கு உள்ளே எங்கே தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று சி.ஐ.ஏ. இவர்களிடம் மூச்சுகூட காட்டுவதில்லை. உளவு விமானத்தில் இருந்து ஏவுகணை வந்து வீழ்ந்த பின்னர்தான், ஐ.எஸ்.ஐ.க்கு விபரம் தெரியவரும் நிலை உள்ளது.
பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஐ.எஸ்.ஐ.-யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லெப். ஜெனரல் ஜகிருல் இஸ்லாம் (மேலே படத்தில் இருப்பவர்) வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி, அமெரிக்கா, லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ. தலைமையகத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். அப்போது இந்தக் கோரிக்கையை முன்வைக்கப் போகிறார் என்று, பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சி.ஐ.ஏ. தலைவர் டேவிட் பிட்ராயெஸ்ஸை சந்தித்து பேசவுள்ள ஜகிருல் இஸ்லாம், “எங்கே, யாரை தாக்க வேண்டும் என்ற இலக்குகளை நீங்கள் முடிவு செய்யுங்கள். இலக்குகளை அடித்து வீழ்த்தும் பொறுப்பை எம்மிடம் ஒப்படையுங்கள்” என்று தெரிவிப்பார் என்று கூறியுள்ள அந்த அதிகாரி கூறிய அடுத்த வாக்கியம்தான் இதன் ஹைலைட்!
“இதற்காக அமெரிக்கா, உளவு விமானங்களில் இருந்து ஏவுகணை வீசும் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டும் என்று ஜகிருல் இஸ்லாம் கேட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ளார்” என்பதே ஹைலைட் வாக்கியம்.
சி.ஐ.ஏ. பாகிஸ்தானில் நடத்தும் உளவு விமான தாக்குதல்கள், பாகிஸ்தானுக்குள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. மற்றொரு நாட்டுக்குள் நடத்தப்படும் இந்த தாக்குதல்கள், பாகிஸ்தானின் இறைமையை மீறும் செயல் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
பாகிஸ்தானுக்குள் நடக்கும் அமெரிக்க விமான தாக்குதல்களால், பாக். மக்களின் வெறுப்பும் உச்சத்தில் உள்ளது. எதிர்ப்பு போராட்டங்களும் நடக்கின்றன.
இந்த சூழ்நிலையில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டமிடுகிறார், பாகிஸ்தான் உளவுப் பிரிவின் புதிய தலைவர்.
அவரது கோரிக்கையை சி.ஐ.ஏ. ஏற்றுக் கொண்டால், நாட்டுக்குள் அமெரிக்க தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு விட்டன என மக்களையும் சமாதானப்படுத்தலாம் என்பது ஒரு மாங்காய். அமெரிக்கா வைத்திருக்கும் அட்டகாசமான உளவு விமானங்கள், பிளஸ் அவற்றின் தாக்குதல் தொழில்நுட்பம், இலவசமாக கிடைக்கும் என்பது அடுத்த மாங்காய்.
இதற்கு உடனே தலையாட்ட சி.ஐ.ஏ. தலைவர் டேவிட் பிட்ராயெஸ் என்ன, மாங்காய் மடையரா?

பிரிட்டிஷ் உளவுத்துறை அல்-காய்தா தளபதியை கொல்ல மறுத்தது! “எங்கள் வேலை அதுவல்ல”



 



டென்மார்க்கை சேர்ந்த உளவாளி ஒருவர், தாம் அல்-காய்தாவின் முக்கிய தளபதி ஒருவர் பற்றிய தகவல் கொடுத்த போதிலும், பிரிட்டிஷ் உளவுத்துறை அவரைக் கொல்ல மறுத்தது என்று கூறியிருக்கிறார். மோர்ட்டென் ஸ்ட்ரோம் என்ற இந்த உளவாளி, அல்-காய்தாவுக்குள் ஊடுருவ பிரிட்டிஷ் உளவுத்துறையால் அனுப்பி வைக்கப்பட்டவர்.
அல்-காய்தாவுக்குள் ஊடுருவி உளவுத் தகவல்களை அனுப்புவதற்காக, பிரிட்டிஷ் உளவுத்துறை MI6, அவரை பணியில் அமர்த்தியது. அதையடுத்து, இஸ்லாம் மதத்துக்கு மாறிய இவர், ஏமான் நாட்டில் குடியேறி, அங்கேயிருந்த அல்-காய்தா தளபதி அன்வர் அல்-அவ்லாகியுடன் நெருக்கமானார். அதன்பின், அல்-அவ்லாகியின் நடமாட்டங்கள், மற்றும் இருப்பிடம் பற்றிய உளவுத் தகவல்களை MI6க்கு கொடுத்துவந்தார்.
குறிப்பிட்ட தினம் ஒன்றில், அன்வர் அல்-அவ்லாகி எங்கே இருப்பார் என்ற தகவலை பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு கொடுத்து, அல்-அவ்லாகியை கொல்வதற்கு அதுவே சரியான தருணம் என்று கூறியிருக்கிறார், மோர்ட்டென் ஸ்ட்ரோம்.
அதற்கு பிரிட்டிஷ் உளவுத்துறை, “பிரிட்டனுக்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லாதவர்களை வெளிநாடு ஒன்றில் கொல்வது எங்களது வேலையல்ல” என்று கூறி, அல்-அவ்லாகியை கொல்வதற்கு மறுத்துவிட்டதாக கூறுகிறார் இவர்.
இங்குள்ள மற்றொரு தமாஷ் என்னவென்றால், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ, இந்த அன்வர் அல்-அவ்லாகிதான், லண்டனில் நடைபெற்ற பஸ் குண்டு வெடிப்புகளின் சூத்ரதாரி என்று கூறியது. அன்வர் அல்-அவ்லாகி, அமெரிக்க பிரஜையாக இருந்தவர் என்ற காரணத்தால், சி.ஐ.ஏ.வும் அவரை பின்தொடர்ந்து கொண்டிருந்தது.
இதற்கிடையே மற்றொரு திருப்பதாக, பிரிட்டிஷ் உளவுத்துறையால் பணியில் அமர்த்தப்பட்ட டென்மார்க் நபர் மோர்ட்டென் ஸ்ட்ரோம், இரட்டை உளவாளியானார். சி.ஐ.ஏ.வும் அவரை பணியில் அமர்த்திக் கொண்டது. அதையடுத்து, அன்வர் அல்-அவ்லாகி பற்றிய தகவல்களை சி.ஐ.ஏ.வுக்கும் வழங்கினார் இவர்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் 30-ம் தேதி, உளவு விமான ஏவுகணை ஒன்றின் மூலம், அன்வர் அல்-அவ்லாகியை கொன்றது சி.ஐ.ஏ.
தற்போது, இந்த டென்மார்க் உளவாளி பற்றிய தகவல்கள் வெளியானபின் சி.ஐ.ஏ. புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. “அவர் எமக்கு அன்வர் அல்-அவ்லாகி பற்றி தகவல் கொடுத்தது நிஜம். ஆனால், அந்த தகவலை வைத்தே அன்வர் அல்-அவ்லாகியை கொன்றோம் என்று சொல்ல முடியாது.
அன்வர் அல்-அவ்லாகியை கொல்வதற்கான மற்றொரு ஆபரேஷனிலும் நாம் ஈடுபட்டிருந்தோம். அதில் கிடைத்த தகவல்களும், இவர் கொடுத்த தகவல்களும் பொருந்தி வரவே, உளவு விமானத்தை ஏவுகணையுடன் அனுப்பி வைத்தோம்” என்கிறது சி.ஐ.ஏ.

357 நபர்கள் உளவு வலை பின்னல் சிக்கியது! ஹைகிளாஸ் விபசாரிகளை வைத்து ஆபரேஷன்!!


துருக்கியின் ராணுவ ராடார் சிஸ்டம்
துருக்கியின் ராணுவ ராடார் சிஸ்டம்

துருக்கி உளவுத்துறை, மொத்தம் 357 பேர் அடங்கிய உளவு வலைப் பின்னல் ஒன்றை கண்டுபிடித்து, அதில் சிலரை கைது செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த உளவு வலைப் பின்னலைச் சேர்ந்தவர்கள், ஹைகிளாஸ் விபசாரிகளை வைத்து, ராணுவ உயரதிகாரிகளிடம் ரகசியங்களை திருடி, வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வந்தனர் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
357 பேரில் வெறும் 88 பேர்தான் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பெண்கள். 50 பேர் ராணுவ அதிகாரிகள். உளவு வலைப்பின்னலின் தலைவர், ஒரு பல்கலைக்கழக மாணவர்!
இந்த உளவு வலைப் பின்னலைச் சேர்ந்தவர்கள், துருக்கியின் ராணுவ ராடார் சிஸ்டம் பற்றிய உளவுத் தகவல்களை சேகரித்தார்கள் என செய்தி வெளியிட்டுள்ளது, துருக்கியில் இருந்து வெளியாகும் பத்திரிகையான ‘ஹரியெட் டெயிலி’.
ஹைகிளாஸ் விபசாரிகளை ராணுவ உயரதிகாரிகளிடம் பழகவிட்டு, அதன்பின் பிளாக்மெயில் செய்து ராணுவ ரகசியங்கள் பெறப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் எந்த நாட்டுக்காக உளவு பார்த்தார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. 357 பேரில் வெறும் 88 பேர்தான் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதற்காக செய்தியை வெளியே விட்டார்கள் என்பதும் புரியவில்லை.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 13 of 13

பேச்சுவார்த்தைகள் எப்படிப் போனாலும், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை யார் மதித்தாலும், மதிக்காவிட்டாலும், இனியும் தமது மற்றொரு ராணுவ சகாவை இழக்க இந்திய ராணுவ வீரர்கள் தயாராக இல்லை என்பதே, அங்குள்ள நிலைமை!
indian-army-20130110-013

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 12 of 13

இப்போது, இந்தப் பகுதியில் துப்பாக்கிச் சத்தம் இல்லை. ஆனால், எதுவும் நடக்கலாம் என இந்திய ராணுவம் தயாராக உள்ளது. காரணம், பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள், 100 மீட்டர் தூரம் வரை ஊடுருவி, இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியபின் மீண்டும் வரமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையதது என்கிறார்கள் இந்திய ராணுவ வீரர்கள்.
indian-army-20130110-012A

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 11 of 13

தொடர்ந்து, அரை மணி நேரம், பீரங்கிகள் மூலமாகவும், ராக்கெட்டுகள் மூலமாகவும், பாக்கிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் என்று தெரியவருகிறது. வழமையாக இப்படியான தாக்குதல்கள் அந்தப் பக்கத்தில் இருந்து வந்தால், இந்திய ராணுவம் பீரங்கிகள் மூலமாகவும், ராக்கெட்டுகள் மூலமாகவும் பதிலடி கொடுப்பது வழக்கம்.
ஆனால், தற்போது இந்த விஷயம் சென்சிட்டிவ் நிலையில் உள்ளதால், நான்கிட்கிரி முகாம் மீதான தாக்குதலுக்கு இந்திய தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்படவில்லை என்று, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
indian-army-20130110-011

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 10 of 13

இரண்டு ராணுவ வீரர்களை கொல்லப்பட்ட பின்னரும், பாகிஸ்தான் ராணுவம், எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை என்றே அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில், மறுநாள் இரவு, காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள, நான்கிட்கிரி முகாம் மீது, பாகிஸ்தான் வீரர்கள் இரண்டு முறை தாக்குதல் நடத்தினர்.
indian-army-20130110-010

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 09 of 13

இந்த விவகாரம் குறித்து, ராணுவ அமைச்சர் அந்தோணி, “பாகிஸ்தான் ராணுவத்தினரின் செயல் ஆத்திரமூட்டக்கூடியது. போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்றும் இரக்கமில்லாமல், இந்திய ராணுவ வீரரின், தலையை துண்டித்துள்ளனர். இது, மனிதாபிமானமற்ற செயல். பாகிஸ்தான் ராணுவ தலைமையுடன், எமது ராணுவத் தலைமை இது தொடர்பாக பேசிவருகிறது” என்றார்.
indian-army-20130110-009

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 08 of 13

இதையடுத்து, டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீருக்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி, அவரை நேரில் வரவழைத்தது. அவரிடம், பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூர செயலுக்கு, கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் கண்டனத்தை தமது அரசுக்கு அனுப்பி வைப்பதாக அவர் தெரிவித்துவிட்டு செல்லும் காட்சி, கீழேயுள்ள போட்டோவில் உள்ளது.
indian-army-20130110-008

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 07 of 13

உடனடியாக மற்றைய நான்கு இந்திய வீரர்களும் கவர் எடுத்து சுடத் தொடங்கிய நேரத்தில், அதிக எண்ணிக்கையில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரால் முதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட இருவரில் ஒரு வீரரது தலையை வெட்ட முடிந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த இரக்கமற்ற நடவடிக்கை, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், எல்லை பகுதியில் இந்திய ராணுவத்தினர் மத்தியில் கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கீழேயுள்ள போட்டோ, கொல்லப்பட்ட இந்திய வீரர் ஹேம்ராஜின் உடலை அவரது ராணுவ சகாக்கள் தோளில் தூக்கிவரும் காட்சி.
indian-army-20130110-007

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 06 of 13

சம்பவ நேரத்தில், இந்திய ராணுவ தரப்பில் அந்தப் பகுதியில் ரோந்து சென்றவர்கள், 13-வது ராஜ்புத்தன ரைஃபிள் படைப்பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் 6 பேர் கொண்ட குழு ஒன்றுதான், ரோந்து சென்றிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் திடீரென சுட்டபோது, இவர்கள் திருப்பி சுடுவதற்குமுன் முன்னே சென்ற ஹேம்ராஜ், சுதாகர் சிங் என்ற இரண்டு இந்திய வீரர்கள் பலியாகினர்.
கீழேயுள்ள போட்டோ, கொல்லப்பட்ட இந்திய வீரர் சுதாகர் சிங்கின் உடலை அவரது ராணுவ சகாக்கள் தோளில் தூக்கிவரும் காட்சி.
indian-army-20130110-006

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 05 of 13

பாகிஸ்தான் இது பற்றி எதுவும் தெரியாது என்று கூறுவதை மறுக்கும் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை), “இந்திய எல்லைக்குள் சுமார் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவினர். உள்ளே வந்தவர்கள் எந்த படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பது எமக்கு தெரியும்.
அவர்கள், பாகிஸ்தானின் 29-வது பலோச் ரெஜிமென்டை சேர்ந்தவர்கள்.
இப்போது, தமது படைக்கும், இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்வது, வடிகட்டிய பொய். அந்தப் படைப்பிரிவின் தளபதியை அழைத்து சர்வதேச விசாரணை செய்தால், விஷயம் அம்பலமாகும்” என்கிறார், ஆத்திரத்துடன்.
indian-army-20130110-005

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 04 of 13

தாக்குதல் முடிந்தபின், பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர், “இந்திய வீரர்களை, நாம் தாக்கியதாக வெளியான தகவல் உண்மை அல்ல. பாகிஸ்தான் தரப்பில் இது போன்ற தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என, இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முறையாக விசாரித்து, உறுதி செய்யும்படியும், இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக, இந்திய அதிகாரிகள், பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்” என்றார்.
ஆனால், அங்கேயிருந்த இந்திய ராணுவத்தினர், தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய தகவல்களை வைத்திருக்கிறார்கள்.
கீழேயுள்ள போட்டோவில் உள்ளது, அந்தப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் காவலரண்.
indian-army-20130110-004

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 03 of 13

நேற்று முன்தினம், காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள, மெந்ஹார் செக்டர் எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
இந்திய ரோந்துப் படையில் இருந்த ஒருவர் பின்னர் அளித்த பேட்டியில், “அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்டோம். நாம் கவர் எடுத்துக் கொள்ளுமுன், அவர்கள் (பாகிஸ்தான் ராணுவம்) துப்பாக்கி ரேஞ்சுக்குள் வந்துவிட்டதை உணர்ந்தோம்” என்றார்.
பாகிஸ்தான் படையினர், இந்தியப் படையினரை நோக்கி சுடத் தொடங்கினர்.
கீழேயுள்ள போட்டோவில் உள்ளதுதான், இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைக்கோடு.
indian-army-20130110-003

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? 02 of 13

இந்த சம்பவம் நடந்தபோது, பூஞ்ச் பகுதியில் உள்ள மெந்ஹார் செக்டர் 8 காவல் அரண்களில், அதிகாலை 2 மணி வரை துப்பாக்கிச் சத்தம் கேட்டவண்ணம் இருந்தது.
இப்போது, துப்பாக்கிச் சத்தம் இல்லை. ஆனால், இரவு நேரங்களில் எதுவும் நடக்கலாம் என இரு தரப்பு ராணுவமும் தயாராக உள்ளது. காரணம், இரவில் எதிரே சில மீட்டருக்கு அப்பால் எதுவுமே தெரியாத அளவில் அங்கு மூடுபனி காணப்படுகிறது. இந்த மூடுபனி மறைவில்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள், 100 மீட்டர் தூரம் வரை ஊடுருவி, இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்கிறார்கள் அங்கிருந்த இந்திய ராணுவ வீரர்கள்.
கீழேயுள்ள போட்டோவில், பூஞ்ச் பகுதியில் உள்ள மெந்ஹார் செக்டர் காவல் அரண்கள், மூடுபனி நேரத்தில்.
indian-army-20130110-002

இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது? - 1


இந்திய பாகிஸ்தான் எல்லையில் யுத்தம்! அன்று இரவு அங்கே நிஜமாக என்ன நடந்தது?



பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, இரண்டு ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அதில் ஒருவரின் தலையை துண்டித்து சென்ற, சம்பவத்தை அடுத்து, எல்லை பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது.
எல்லையோர இந்திய ராணுவத்தினர், கொந்தளித்த வண்ணம் உள்ளார்கள்.
அடுத்த நடவடிக்கை என்ன என்று ஒரு பக்கமாக ராஜதந்திர வட்டாரங்களில் ஆலோசனை நடக்கிறது. மறு பக்கத்தில், ராணுவத் தலைமையகத்தில் ஆலோசனை நடக்கிறது. ஆனால், களத்தில் உள்ள இந்திய ராணுவ படையணியினர், “பதிலடி கொடுக்க வேண்டும்” என்ற துடிப்பில் உள்ளார்கள்.
தமது இரு சக ராணுவ வீரர்களும் கொல்லப்பட்ட விதம், இவர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
indian-army-20130110-001

சி.ஐ.ஏ.வுக்கு சினிமாவால் வந்த தலையிடி! சி.ஐ.ஏ. ரகசியங்களை நடிகை நடித்தாரா?



அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வுக்கு எதிர்பாராத இடம் ஒன்றில் இருந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபையின் உளவுத்துறை விவகாரங்களுக்கான கமிட்டி (Senate Intelligence Committee), தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள Zero Dark Thirty திரைப்பட விவகாரத்தில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
Zero Dark Thirty திரைப்படம், அல்-காய்தா தலைவராக இருந்த பின்-லேடனை அமெரிக்க அதிரடிப்படை சுட்டுக் கொன்ற ஆபரேஷனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
இந்தப் படத்தில் இடம்பெறும் சி.ஐ.ஏ. தொடர்பான காட்சிகளில் உண்மை உள்ளதா என ஆராயப்போவதாக அறிவித்துள்ளார், அமெரிக்க செனட் சபையின் உளவுத்துறை விவகாரங்களுக்கான கமிட்டியின் தலைவி செனட்டர் டயான் ஃபெயின்ஸ்டெயின். Zero Dark Thirty திரைப்படத்தின் கதாநாயகி கேரக்டர் ‘மாயா’, ஒரு சி.ஐ.ஏ. அதிகாரியாக படத்தில் சித்தரிக்கப்படுகிறது.
பின்-லேடன் வேட்டை ஆபரேஷன் தொடர்பான சி.ஐ.ஏ.வின் ‘ரகசிய விபரங்கள்’ Zero Dark Thirty படத்தின் டைரக்டர் (Kathryn Bigelow), மற்றும் படத்துக்கான திரைக்கதை எழுதியவர் (Mark Boal) ஆகியோருக்கு சி.ஐ.ஏ. அலுவலகத்தில் இருந்து லீக் செய்யப்பட்டதா என்று ஆராயப் போவதாக அறிவித்துள்ளது செனட் கமிட்டி.
இதற்காக சி.ஐ.ஏ.வின் ஆவணங்களை ஆராய்வதற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
Zero Dark Thirty படம் பற்றிய விபரங்களை கீழேயுள்ள லிங்க்கில் பார்க்கவும்

சி.ஐ.ஏ. உளவாளிக்கு சிறை! சக ரகசிய உளவாளியின் பெயரை வெளியிட்ட குற்றம்!!



சி.ஐ.ஏ. முன்னாள் உளவாளி ஜான் கிரியாகோ
சி.ஐ.ஏ. முன்னாள் உளவாளி ஜான் கிரியாகோ
சி.ஐ.ஏ. முன்னாள் உளவாளி ஒருவருக்கு நேற்று அமெரிக்க கோர்ட், இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இவர் செய்த குற்றம், சி.ஐ.ஏ.-வின் ரகசிய உளவாளி ஒருவரின் பெயரை வெளியிட்டார் என்பதே.
48 வயதான சி.ஐ.ஏ. உளவாளி ஜான் கிரியாகோ, ஃபிரீலான்ஸ் செய்தியாளர் ஒருவரிடம் சில தகவல்களை கொடுத்திருக்கிறார். அந்த தகவல்களை கொடுத்தபோது, அதில் தொடர்புடைய நபர் ஒருவரின் பெயர், மற்றும் அடையாளங்கள் பற்றியும் தெரிவித்திருக்கிறார். இவரால் பெயர் வெளியிடப்பட்ட நபர், சி.ஐ.ஏ.வில் பணிபுரியும் ஆள் என வெளியே தெரியாமல் (undercover spy) ரகசியம் காக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட நபரின் பெயர் வெளியானதையடுத்து, அவர் சி.ஐ.ஏ. உளவாளி என்ற விபரம் வெளியுலகுக்கு தெரியவந்து, அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாட்டு அசைன்மென்ட் ஒன்று கொடுக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு வெளியே அனுப்பப்பட்டார்.
பெயரை வெளியிட்ட ஜான் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர்மீது சி.ஐ.ஏ. தொடர்ந்த வழக்கில் நேற்று இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரகசிய கோப்புகளை பகிர்ந்துகொள்ள wetransfer.com

மிகச்சிறந்த சேவையை வழங்கிறது இத்தளம். உங்கள் கோப்புகளை (Files) தரவேற்றம் செய்து , அதை உங்கள் நண்பர்களுக்கு Email ஆகவோ, அல்லது லிங்க்(LINK) ஆகவோ அனுப்பும் வழிமுறையை நமக்கு இலவசமாக வழங்குகிறது இத்தளம்.


share your files without registration upto 2GB
 சாதாரணமாக இதை மின்னஞ்சலிலும் செய்ய முடியுமே என்கிறீர்களா? மின்னஞ்சலில் குறைந்த அளவுடைய கோப்புகளை மட்டுமே இணைத்து அனுப்ப முடியும். ஆனால்  இத்தளத்தில் 2GBவரைக்கும் உள்ள கோப்புகளை ஒரே நேரத்தில் தரவேற்றம் செய்து, அதை உங்கள் நண்பர்கள் தரவிறக்கம் செய்ய வழிவகை செய்ய முடியும்.

குறிப்பிட்டு சொல்வதெனில் உடனடியாக இணையத்தின் மூலம் கணக்கு எதுவும் தொடங்காமலேயே இத்தளத்தைப் பயன்படுத்த முடியும்.

இதில் நீங்கள் பகிரும் கோப்புகள் பாதுகாப்பாக இருக்கும். 15 நாட்களுக்கு நீங்கள் பகிரும் கோப்புகள் எவையும் அழியாமல், மற்றவர்களுக்கும் தெரியாமல் பாதுகாப்புடன் இருக்கும். இரண்டு GB கொள்ளவு வரைக்கும் நீங்கள் உங்கள் கோப்புகளை (documents-files) இத்தளத்தினூடாக பகிர்ந்துகொள்ளலாம். 

எப்படி பயன்படுத்துவது? 

இந்த தளத்தை திறந்தவுடன் ஒரு வட்டம் சுற்றிக்கொண்டிருக்கும். அதன் மீது மௌஸ் கர்சரை வைத்தால் ஒரு செய்தி தோன்றும். அதில் ok செய்தவுடன் அடுத்தப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

அப்பக்கத்தில் அவர்களுடைய விதிமுறைகளை(WeTransfer Terms of Service and Privacy Policy) ஏற்றுக்கொண்டு I agree என்பதை சொடுக்கியவுடன் அடுத்த பக்கம் தோன்றும்.

அதில் Add files என்பதைச் சொடுக்கி நீங்கள் பகிர நினைக்கும் கோப்புகளை தரவேற்றம் செய்துவிடலாம்.

அடுத்து தேவைப்பட்டால் add more files என்பதை கிளிக் செய்து மேலதிக கோப்புகளையும் செய்துகொள்ள முடியும். தரவேற்றம் முடிந்த பிறகு, கீழுள்ள பெட்டியில்  Friend's email என்பதை சொடுக்கி உங்களுடைய நண்பருடைய மின்னஞ்சல் முகவரியும், Your email என்பதைச் சொடுக்கி உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிடுங்கள்.

அடுத்து கீழிருக்கும் பெட்டியில் நீங்கள் உங்கள் நண்பருக்கும் கொடுக்கும் செய்தியை தட்டச்சிடுங்கள்.

இறுதியாக கீழுள்ள Transfer என்பதை சொடுக்குங்கள். இப்பொழுது Transferring நடக்கும். இறுதியாக Transfer complete என்ற செய்தி கிடைக்கும். கீழிருக்கும் Okay என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்.. உடனே உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு உறுதிபடுத்தும் மின்னஞ்சலும்(confirmation email with download link), உங்களுடைய நண்பருக்கு ஒரு மின்னஞ்சலும் சென்றுவிடும்.

அந்த மின்னஞ்சல்களில் நீங்கள் தரவேற்றம்(UPLOAD) செய்த கோப்புகளை தரவிறக்கம்(DOWNLOAD) செய்வதற்கான சுட்டி இருக்கும்.

உங்கள் நண்பர் அந்த சுட்டியை CLICK செய்தவுடன் WE TRANSFER தளம் திறக்கும். அத்தளத்தில் கோப்பைத் தரவிறக்க DOWNLOAD என்ற பட்டன் இருக்கும். அதைக் கிளிக் செய்து உங்கள் நண்பர் அந்த கோப்பை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கோப்பை தரவிறக்கம் செய்துகொண்ட பிறகு, அந்த கோப்பானது We Transer தளத்திலிருந்து நீக்கப்படும்.

உங்களுக்கு வந்த மின்னஞ்சலிலேயே அந்த கோப்பு எந்த தேதியில் அழிக்கப்படும் என்பதையும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வெகு தொலைவில் உள்ள நண்பர்களுக்கு இணையத்தின் மூலம் கோப்புகளை  உடனடியாக பரிமாற இத்தளம் ஏற்றது. இரண்டு GB வரையுள்ள கோப்புகளை எந்த ஒரு ரெஜிஸ்டரேசனும் இல்லாமல் ஒரே கிளிக்கில் அனுப்ப முடிவதே இத்தளத்தின் மிகப்பெரிய சிறப்பாக இருக்கிறது.

அவசரத் தேவைக்கு, உங்களிடம் உள்ள 2GB வரையுள்ள பெரிய கோப்புகளை உடனடியாக தரவேற்றம் செய்து, உங்கள் நண்பரை பாதுகாப்பாக Download செய்துகொள்ள வைக்கலாம்.

நீங்கள் உள்ளிடும் மின்னஞ்சலுக்குரியவரைத் தவிர மற்ற நபர்கள் யாரும் அந்த கோப்புகளை தரவிறக்கம் செய்ய முடியாது என்பதே இத்தளத்தின் சிறப்பம்சம்.

அதனால் மிக முக்கியமான கோப்புகள், தனிப்பட்ட ரகசிய கோப்புகள் ஆகியவை இத்தளத்தின் மூலம் உங்கள் நண்பர்கள், அலுவலர்கள், குடும்பத்தினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ள முடியும்.

தளத்திற்கான URL: https://www.wetransferbeta.com/

Nokia செல்பேசியில் சில பயன்மிக்க ரகசிய குறியீடுகள்..!!



Nokia செல்பேசியில் சில பயன்மிக்க ரகசிய குறியீடுகள்..!!
உங்கள் செல்பேசியின் IEMI எண்ணை அறிய
*#06#
உங்கள் செல்பேசியின்  Firmware Version ஐ அறிய
*#0000#
உங்கள் செல்பேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர (Factory Settings)
*#7780#
உங்கள் தகவல்களை அழித்து கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுருவதற்கு   
*#7370#
Bluetooth முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#2820#
WiFi MAC முகவரியை அறிய  (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#62209526#
Warrenty, Counter,Life Time தகவல்களை பெற   
*#92702689#
EFR activate செய்ய  (தரமான அலையை பெற.. பேட்டரி விரைவாக சக்தியை இழக்கும்).
*3370#
EFR Deactivate செய்ய (இதன் மூலம் சாதரண அலையை பெற முடியும். பேட்டரி சாதாரணமாக இயங்கும்.)
*3370#

Insight - Poland's investigation into secret CIA prisons loses steam

(Reuters) - Lawyers for two men who say they were held illegally in a secret CIA jail on Polish territory argue that a landmark criminal investigation into the "black site" is being stalled because a trial will embarrass the Polish state.
Polish prosecutors are investigating the country's role in a global operation run by U.S. secret services a decade ago to transport suspected al Qaeda members to facilities outside the United States where they could be held and interrogated without the safeguards set out under U.S. law.
FREE GUIDES AND REPORTS FROM DIANOMI
ADVERTISEMENT
Investing in Asia
How to invest in Asia – free magazine
Request Magazine
Poland is one of only two countries known to have opened a criminal investigation into the secret jails, and its case could set a precedent for prosecutions in other countries. If it languishes, it greatly reduces the chances that the global veil over "black sites" will be lifted.
What little information has emerged suggests the case could implicate some of Poland's most senior politicians in illegal detentions and upset the United States, a key ally.
Lawyers, human rights activists and other sources familiar with the case say that what started out as a robust investigation appears to have ground to a halt since the original investigators were taken off the case early last year.
"The image is of a complete lack of action," said Mikolaj Pietrzak, lawyer for Saudi national Abd al-Rahim al-Nashiri, who says he was detained in a CIA jail on Polish soil.
"The case is obviously, in my opinion, under political control ... The most convenient thing politically is for the case to drag on," said Pietrzak.
Polish officials say the prosecutors are independent, while the prosecutors say they are doing all they can to collect evidence, arguing that their work had been slowed in part because U.S. officials had not responded to requests for information.
A spokesman for the U.S. embassy in Warsaw declined comment on the case because, he said, it concerned intelligence issues.
Former U.S. President George W. Bush said in 2006 that the CIA operated detention facilities outside U.S. territory, but Washington has not detailed where they were or how they worked.
The Polish investigation, already in its fifth year, is due to end next month and prosecutors say they may apply to extend it. If they do not, the case would have to be brought to trial or closed, both politically risky options for Poland.
The problem, said Jozef Pinior, a Polish senator who has lobbied for a full investigation into what the CIA was doing in Poland, is that security officials from the time of the alleged CIA operations exert influence through an "old boys' network".
"They (the government) are in a sandwich between opening this issue up and the pressure from the hard core of the Polish state, the secret service, the prosecutor's office, who say: 'Let's keep this secret'," said Pinior.
The only other country to open a criminal investigation into allegations of CIA jails on its soil was ex-Soviet Lithuania, but that case is no longer open.
Poland's government, a centrist coalition with close ties to Washington, was not in office when the alleged CIA "black site" was in operation. It has said it wants a full investigation.
Prime Minister Donald Tusk's office, in response to Reuters questions about the case, said that prosecutors' independence was established by law. "No executive body can influence the prosecutor's actions," it said in a statement.
"VACATION SPOT"
According to documents filed by lawyers for the two men who say they were held by the CIA in Poland, detainees were flown to the tiny Szymany airport and then driven to a lakeside Polish intelligence academy in the village of Stare Kiejkuty, about 180 km (110 miles) north of Warsaw, where the CIA had a facility.
Polish officials have never publicly acknowledged the existence of CIA prisons in Poland.
One of the few Polish officials to ever comment on the CIA programme was Marek Dukaczewski, who was head of military intelligence when the alleged jail was in operation. Dukaczewski told a Polish television interviewer in 2010 that Poland did cooperate with the United States in the fight against violent militants.
But when asked about Stare Kiejkuty, he suggested only that U.S. agents returning from tours in Afghanistan might have used the site as a sort of combined vacation spot and training venue.
"This is a facility located in a beautiful location. Perhaps officers who landed there, after completing their assignments in other parts of the world, stopped to share their knowledge or their observations that are important for our services," Dukaczewski told Poland's TVN24 broadcaster.
Leaks by whistle-blowers to journalists and campaigners, the testimony of alleged detainees, and years of research by rights activists all point to Poland having played a role in the CIA's "extraordinary rendition" programme. The investigation is designed to assess the extent of that role.
There is evidence the CIA also set up secret jails in Romania, Lithuania and Thailand, and possibly elsewhere, according to reports by the Council of Europe and the United Nations. Human Rights groups and others say the CIA used the facilities to interrogate people using techniques that, they say, amount to illegal torture.
In Poland's case, detainees brought to the complex at Stare Kiejkuty were held without access to defence counsel, and with no rulings from judges to authorise their detention, the documents filed by their lawyers say.
An application to the European Court of Human Rights submitted by lawyers for al-Nashiri said he was often hooded, stripped naked or shackled during seven months at Stare Kiejkuty - techniques approved by the CIA interrogators' superiors.
He was also subjected to some non-authorised methods, the application states. In one instance, it said, an interrogator held a handgun close to al-Nashiri's head and simulated loading a bullet. Around the same time, an interrogator revved a power drill while al-Nashiri stood hooded and naked, according to the application. Lawyers for Abu Zubaydah, another man who says he was detained at the Polish site, point to similar treatment.
U.S. officials say both men are dangerous.
They say Abu Zubaydah ran a camp in Afghanistan which trained some of those who carried out the September 11, 2001 attacks on U.S. cities and accuse al-Nashiri of directing the attack on the U.S. warship Cole in the Yemeni port of Aden in 2000 that killed 17 sailors.
There has been no suggestion that Polish citizens were directly involved in the detentions at Stare Kiejkuty.
But lawyers and rights campaigners say that if jails existed, senior Polish officials must have known about them and therefore have a case to answer.
The International Convention against Torture establishes an obligation on states to prevent torture on their soil, arrest anyone carrying it out, carry out a "prompt and impartial investigation," and give victims proper redress.
"The abuses that occurred, occurred with authorisation at the highest political level and with some assistance provided by the intelligence services in Poland and other countries," said Nils Muiznieks, Human Rights Commissioner with the Council of Europe, a rights watchdog of which Poland is a member.
Under pressure from the Council of Europe and other human rights bodies, Poland opened a criminal investigation in the summer of 2008. Initially prosecutors in the capital Warsaw handled the case but early last year the prosecutor-general ordered that it be shifted to the southern city of Krakow.
Since then, the investigation had gone quiet, said Bartlomiej Jankowski, a lawyer for the second alleged ex-detainee, Abu Zubaydah.
"I am not receiving any information (from prosecutors) about new documents, nor am I informed about any new hearings. This is something that worries me," said Jankowski. He said he believed the Krakow prosecutors were committed to seeing justice done, but that they could not help but be affected by the political context.
An individual with close knowledge of the case, who spoke to Reuters on condition of anonymity, said the investigation had been nearing trial, with evidence from Polish intelligence services, when it was moved to Krakow without explanation.
The source said it was now important to see signs that the prosecutors in Krakow were actively bringing the case towards a trial. "I don't know why nothing is happening," said the source. "If nothing is happening, alarm bells should ring."
Muiznieks said Poland had done more to investigate than other European countries that hosted "black sites" and that the United States should take some of the blame for not being more forthcoming in helping the investigation.
But he told Reuters: "Five years is a long time and we would really like to see the Polish authorities bring this investigation to a conclusion and to make its findings public."
The office of Leszek Miller, who was prime minister at the time the alleged prisons were running, said he did not wish to comment. Aleksander Kwasniewski, president at the time, did not respond to a request for comment, and nor did Zbigniew Siemiatkowski, former head of domestic intelligence.
Asked by Reuters about the decision to transfer the case to Krakow, a spokesman for the prosecutor-general's office in Warsaw said only it was "for the good of the investigation".
Piotr Kozmaty, spokesman for the Appellate Prosecutor's office in Krakow, said his colleagues were working hard on the case but that it took time. "Undoubtedly, the subject of the investigation has a large political context, but the Polish prosecutor's office is independent and despite the difficulties with issues such as cooperation with the American side, it will do its utmost to collect a complete body of evidence."

http://uk.reuters.com/article/2013/01/27/uk-poland-cia-idUKBRE90Q03P20130127?feedType=RSS&feedName=GCA-GoogleNewsUK

Tuesday, January 22, 2013

மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கிறது இந்த கட்டுரை….  
                                         
18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்கு வதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே “விடுதலையைக்’ காணும்படி மக்களைப் பயிற்றுவிக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
உண்மையான ஆட்சியதிகாரத்தைத் தம் கையில் வைத்துக் கொண்டு மன்னராட்சிக்குரிய அடையாளங்களை மட்டும் நீடிக்க அனுமதித்ததன் மூலம் துரோகிகளைத் திருப்திப்படுத்திய பிரிட்டிஷார், அதே உத்தியை மக்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதன் விளைவாக 18,19ஆம் நூற்றாண்டுகளில் துரோகிகள் எனக் கருதப்பட்டோரின் வழித்தோன்றல்கள், 20ஆம் நூற்றாண்டில் சமரசவாதிகளாக அவதரித்தார்கள்.
இந்தியர்களுடைய மனக்குறைகளை மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரியணைக்கு மனுச் செய்து தெரிவிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் வெள்ளையர்களாலேயே உருவாக்கப்பட்டது. பாரம்பரியமிக்க பிரிட்டிஷ் அடிவருடிகளான நிலப்பிரபுக்களின் நலனை மட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ஆதாயமடைய விரும்பிய அனைத்திந்திய வர்க்கமான தரகு முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இத்தகையதொரு அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்தத் தரகுக் கும்பலின் முதலாளித்துவ வர்க்கப் பின்புலத்தையும், இவர்களுக்கிடையிலான உறவையும் புரிந்து கொள்ளாத எவரும் இந்திய விடுதலையின் மீது காங்கிரசும் காந்தியும் நிலைநாட்டி இருந்த ஏகபோகத்தை உடைக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது.
இந்திய விடுதலை இயக்கத்தினுள் காந்தி நுழைந்த பிறகு, அவருடைய அகிம்சை வழியிலான போராட்ட முறை மூலம்தான், இந்திய விடுதலை இயக்கம் உண்மையான மக்கள் திரள் இயக்கமாக மாறியது என்ற மிகப்பெரிய வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய லட்சோப லட்சம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம்.
“”வன்முறைப்பாதையா, அகிம்சைப் பாதையா” எனப் போராட்ட வழி முறைகளில்தான் விடுதலை இயக்கத்தில் வேறுபாடு நிலவியதைப் போலவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பொது நோக்கில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை நிலவியதைப் போலவும் ஒரு பொய்ச்சித்திரத்தைப் பதிய வைத்திருக்கிறது நமது அதிகாரபூர்வ வரலாறு. உண்மையில், ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்ட காங்கிரசு, முசுலீம் லீக் ஆகிய தரகு முதலாளித்துவ அரசியல் சக்திகள் எவ்விதச் சமரசத்துக்கும் இடமின்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை சமருக்கிழுத்த தேசியவாத சக்திகள் என இரு போக்குகள்தான் 20ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்க வரலாற்றில் களத்திலிருந்தன.
1921, 1930, 1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளிகளில் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், “வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் என மூன்று போராட்ட இயக்கங்கள் காந்தியின் சத்தியாக்கிரக முறையில் துவக்கி நடத்தப்பட்டன. போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் மக்கள் இயல்பாக போலீசின் தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதல் கொடுக்கத் துவங்கினால், அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால், மறுகணமே காந்தி போராட்டத்தை நிறுத்துவார். காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன், அரசு அவரைக் கைது செய்து விடும். பிறகு, “சென்டிமென்ட் அலை’ அடிக்கத் துவங்கி, இறுதியில் இந்திய விடுதலையை மறந்து காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகி விடும். இதுதான் தியாக வேடமணிந்த துரோகத்தின் சுருக்கமான வரலாறு.
இந்தத் துரோகத்துக்கு எதிராக, சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பையும், உண்மையான நாட்டு விடுதலையையும் முன்வைத்துப் போராடிய தியாகம், பகத்சிங் என்ற இளைஞனின் வடிவில் விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறது.
“…நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பத்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.”
சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய ஒரு கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. இத்தகையதொரு பதிலை 18,19ஆம் நூற்றாண்டுகளின் வீரர்கள் கூறியிருக்க முடியாது. முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய திப்பு முதல் மருது வரையிலான வீரர்களோ, பல்லாயிரக் கணக்கில் போராடி உயிர் நீத்த விவசாயிகளோ, சிப்பாய்களோ, தமது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்திருக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.
தனது வரலாற்றுக் கடமையை அடக்கத்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போராளியாக, ஆனால் தன்னை சமூகத்திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக் கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறான்.
பகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்குமேடையேறிய வீரராக மட்டும் சித்தரிப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியைச் சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞன்தான். உயிரை துறப்பதாலல்ல, உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும், லட்சியமும்தான் அவரது மரணத்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத்தது; இன்றளவும் கவர்ந்திழுக்கிறது.
பகத்சிங்கினுடைய காலத்தின் தேவைதான் என்ன?
1919ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய மக்களிடத்தில், குறிப்பாக பஞ்சாப் மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும், சுதந்திரக் கனலை மூட்டி விடுவதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனாயிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப்படுகொலை ஆழமான காயத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பழி வாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞர் 20 ஆண்டுகள் காத்திருந்து படுகொலைக்குப் பின்னணியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்னர் ஜெனரல் ஓ டயரைச் சுட்டுக் கொன்றார்.
1921ல் காந்தி “ஓராண்டிற்குள் சுயாட்சி’ என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
1922 பிப்.5ஆம் தேதி உ.பியில் உள்ள சௌரி சௌரா எனும் இடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகுண்டெழுந்த மக்கள் சௌரி சௌரா போலீசு நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஒத்துழையாமை இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங்கிரசுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு நம்பிக்கையின் மையும், சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின.
தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக்கைகளைத் தேடலாயினர். காந்தியத்தின் மீது துவக்கத்திலேயே விமரிசனம் கொண்டிருந்த பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பு கிடைக்கப் பெற்றனர். 1924ன் இறுதியில் சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தனர்.
இவ்வமைப்பின் அப்போதைய முன்னணியாளர்களான ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் போன்றோர், 1925 ஆகஸ்டு 9ந் தேதியன்று காக்கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அரசு கஜானாவிற்கான பணத்தைக் கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உணர்ந்த ஆங்கிலேய அரசு, கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இயக்கம் செயலற்று நின்றது.
இந்தத் தேக்க நிலையில், 1926இல் லாகூரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுகதேவ், யஷ்பால் முதலானோர் “நவஜவான் பாரத் சபா’ எனும் இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப்பினரால் நிகழ்த்தப்பட்டன.
1927 இறுதியில் ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். பலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்சூழ்நிலையில், தலைமறைவாயிருந்த ஆசாத்தோடு பகத்சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோளில் விழுந்தது.
1925லிருந்து 1927க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினூடாக, 1917ன் ரசியப் புரட்சியின் விளைவாக, இந்தியாவில் பரவத் தொடங்கிய சோசலிசக் கருத்துக்களையும், இதர ஐரோப்பியக் கருத்துக்களையும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் கற்கத் துவங்கினர். பகத்சிங் சோசலிசக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில் முன்ணணியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண்ணோட்டம்தான் அவருடைய வளர்ச்சி நிலைகளுக்கு அடிகோலியது. இச்சூழ்நிலையை “நான் நாத்திகன் ஏன்?’ எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார்.
“அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன். அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம். இப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத்திய மென்று தோன்றியது…. எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்றதென பிற்காலத்தில் உணரக் கூடிய ஒருநாள் வரக் கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கை யில் அது ஒரு திருப்புமுனையாகும். “கற்றுணர்” எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கணந்தோறும் எதிரொலித்தது”…
“நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்.”
“களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால், உலகப் புரட்சி குறித்த பல்வேறு கருத்துக்களைப் படிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைத்தது. அராஜகவாதத் தலைவர் பக்குனினது எழுத்துக்களையும், கம்யூனிசத் தந்தை மார்க்சினது சில படைப்புக்களையும், அதிகமாகத் தமது நாட்டில் வெற்றிகரமாகப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராட்ஸ்கி மற்றும் பிறரது கருத்துக்களையும் படித்தேன்.”
பகத்சிங்கிற்கு முந்தைய புரட்சிகர பயங்கரவாதிகள் ஆங்கிலேயர்களுக்கெதிராக வீரஞ்செறிந்த முறையில் போராடிய பொழுதிலும், அரசியல் ரீதியாகப் பின் தங்கியிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகான அரசமைப்பு குறித்தும் தெளிவற்றிருந்தனர். அதன் விளைவாக காந்தி, காங்கிரசின் செயல்பாடுகளை அரசியல்ரீதியில் முறியடிக்கவும், அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணராமலிருந்தனர். அவ்வகையில், ஒருபுறம் காந்தி, காங்கிரசின் அடிவருடித்தனத்திற்கும், மறுபுறம் புரட்சிகர பயங்கரவாதிகளின் ஆயுதவழிபாட்டு சாகசவாதத்திற்கு எதிராகவுமான ஒரு மாற்றை உருவாக்க பகத்சிங், பகவதிசரண் வோரா முதலான தோழர்கள் முயன்றனர்.
இதனடிப்படையில், 1928 செப்டம்பர் 9,10 தேதிகளில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அதுவரை இந்துஸ்தான் குடியரசுக் கழகமாக இருந்த அமைப்பின் பெயர், இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகமாக (இ.சோ.கு.க) மாற்றப்பட்டது.
காந்தி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னை புரட்சியாளர்களிடமிருந்து கவனமாகத் தூரப்படுத்திக் கொண்ட போதிலும், புரட்சியாளர்கள், காங்கிரசு நடத்திய மக்கள் போராட்டங்களிலிருந்து அவ்வாறு தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவில்லை. நாட்டு விடுதலைக்கான அனைத்து முயற்சிகளிலும் அவை பலாத்கார முறைகளிலானாலும் சரி, சாத்வீக முறைகளிலானாலும் சரி புரட்சியாளர்கள் உத்வேகத்தோடு ஈடுபட்டனர். இவ்வகையிலேயே, 1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.
லாகூரில், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிரதானமாக நவஜவான் பாரத் சபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசு விதித்த தடையை மீறி, அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது. “பஞ்சாப் சிங்கம்’ என்றழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் எனும் முதிய தலைவர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இரண்டு வாரங்களில் அவர் உயிர் நீத்த பொழுது, வடஇந்தியாவே கொந்தளித்தது. லஜபதிராயின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
மக்களிடம் எழுந்த ஆவேசத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க இ.சோ.கு.க தீர்மானித்தது. லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து டிச17 அன்று, அவர் மீது தடியடிப் பிரயோகம் நடத்திய சாண்டர்ஸ் எனும் போலீசு அதிகாரியை, போலீசு நிலைய வாசலிலேயே வைத்து ராஜகுருவும், பகத்சிங்கும் சுட்டுக் கொன்றனர். மறுநாள் லாகூர் முழுதும் சாண்டர்ஸை கொலை செய்ய நேர்ந்ததற்கான அவசியம் குறித்து இ.சோ.கு.க சுவரொட்டி ஒட்டியது. பகத்சிங்கும், இதர தோழர்களும் லாகூரை விட்டுத் தப்பிச் சென்றனர். இதற்கு முன்பு எத்தனையோ முறை ஆங்கிலேய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும், சாண்டர்ஸ் படுகொலையின் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, புரட்சியா ளர்கள் நாடு முழுதும் போற்றப்பட்டனர்.
தலைமறைவான சூழலில் நாட்டின் அரசியல் சூழலை புரட்சியாளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். பகத்சிங்குடன் நவஜவான் பாரத் சபாவில் இணைந்து செயல்பட்ட தொழிலாளர்விவசாயிகள் கட்சியின் தலைவர் சோகன் சிங் ஜோஷ், 1928 சாண்டர்ஸ் கொலைக்குப் பிறகு கல்கத்தாவில் பகத்சிங்கைச் சந்தித்த பொழுது “”நீங்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணையுங் கள். நாங்கள் ஆங்கில அரசின் ஒருங்கிணைவை உடைத்தெறிகிறோம். நாம் இப்படி ஒரு வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வோம்” என்று பகத்சிங் கூறியதாகப் பதிவு செய்துள்ளார். கம்யூனிசம் அவர்களை ஈர்த்த போதிலும், “மாபெரும் மக்கள் இயக்கத்தின் இராணுவமாக உருக் கொள்வதே’ இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகத்தின் இலக்காக இருந்தது. எனினும், மாபெரும் மக்கள் இயக்கம் குறித்த அவர்களது கருத்து கற்பனையிலிருந்து உதித்த ஒன்றல்ல.
அன்றைய சூழலில், தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தது. 1928இல் வட மாநிலங்களில் பரவலாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க் குணத்தோடு நடைபெறலாயின. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைக் கடுமையாக ஒடுக்கும் முகமாக “தொழிற் தகராறு மசோதா’வை டெல்லி மத்திய சபையில், ஆங்கில அரசு கொண்டு வந்தது.
“தொழிற் தகராறு மசோதா’ நிறைவேற்றப்படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்றும், தானாகவே கைதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் ஆங்கில அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவ தெனவுமான திட்டத்தை பகத்சிங் மத்தியக் கமிட்டியில் முன்வைத்தார். இவற்றை செய்து முடித்த பின்னால் ஒரு வேளை தப்ப முடியவில்லையென்றால், தூக்கு மேடை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென்றார் பகத்சிங். அவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
திட்டமிட்டபடி, 1929 ஏப்ரல் 8ஆம் தேதியன்று கேள்வி நேரத்தில் எதிர்பார்த்தபடியே வைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி “தொழிற் தகராறு மசோதா’ நிறைவேறியதை அறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார். உடனடியாக பார்வையாளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும், பி.கே.தத்தும் வெடிகுண்டு களை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள். “செவிடர்களை கேட்கச் செய்வதற்கு வெடிகுண்டு முழக்கங்கள் அவசியமானவை’ எனும் தலைப்பிலான சிவப்புத் துண்டறிக்கைகளை வீசியவாறு, “புரட்சி நீடுழி வாழ்க, ஏகாதிபத்தியம் ஒழிக, உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ ஆகிய முழக்கங்களை உத்வேகத்தோடு எழுப்பினார்கள். நெடு நேரம் அவர்களை நெருங்கவும் தயங்கியவாறு போலீசார் நின்றனர். பின்னர் பகத்சிங் அவர்களை நோக்கி தாங்கள் கைதுக்குத் தயாராக இருப்பதாகவும், தங்களிடம் ஆயுதங்கள் இல்லையெனவும் உறுதியளித்த பின்னரே அந்த சூரப்புலிகள் அவர்களை நெருங்கி கைது செய்தனர்.
1929 ஜீன் 6ஆம் தேதியன்று பகத்சிங்கும், பி.கே.தத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். வெடிகுண்டு வீசியதை ஏற்றுக்கொண்ட தோழர்கள், அதன் நோக்கம் உயிர்ப் பலியல்லவென்றும், அதன் அரசியல் நோக்கம் குறித்தும் வாதாடினர்.
“எங்களது ஒரே நோக்கம் “செவிடர்களைக் கேட்கச் செய்வதும்’, செவிமடுக்காதவர்களுக்குத் தக்க எச்சரிக்கை வழங்குவதுமேயாகும். மிகப்பலரும் எங்களைப் போன்றே செய்ய விரும்பினர். வெளித் தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இந்திய மக்கட் கடலிலிருந்து, ஒரு மாபெரும் சூறாவளி எழும்பவிருக்கிறது… கற்பனாவாத சாத்வீகத்தின் காலம் முடிந்து விட்டதைத் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி இளைய தலைமுறை ஏற்றுக் கொண்டு விட்டதை நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்.”
அன்று சர்வதேசப் பத்திரிக்கை களிலும், தேசபக்த உணர்வுமிக்க இந்தியப் பத்திரிக்கைகளிலும் விரிவாக வெளியிடப்பட்ட பகத்சிங்கின் அறிக்கைகள் மக்களால் பேரார்வத்தோடு வரவேற்கப்பட்டன. வழக்கை விரைந்து நடத்திய அரசு, 1929 ஜீன்12 அன்று பகத்சிங் மற்றும் பி.கே.தத் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அங்கேயும் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அன்றைய சூழலில் அரசியல் கைதிகள் கிரிமினல் கைதிகளைப் போல நடத்தப்படுவதைக் கண்டித்தும், வெள்ளை அரசியல் கைதிகளுக்கு காட்டப்பட்ட பாரபட்சத்தைக் கண்டித்தும், பகத்சிங் லாகூர் சிறையிலிருந்தும், பி.கே.தத் மியான்வாலி சிறையிலிருந்தும் ஜூலை13ம் தேதியன்று உண்ணா விரதத்தை துவங்கினார்கள். கைது செய்யப்பட்ட பிற புரட்சியாளர்களும், பகத்சிங், தத்துடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்ட முயன்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தனர். 63 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு ஜதின்தாஸ் செப்டம்பர் 13ஆம் தேதியன்று உயிர் நீத்தார். அவரது உடல் லாகூர் சிறையிலிருந்து கல்கத்தா எடுத்துச் செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
சாண்டர்ஸ் கொலை வழக்கு இரண்டாம் லாகூர் சதி வழக்காக ஜீலை 10 முதல் துவங்கியது. பகத்சிங் இவ்வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். பகத்சிங்கும் தோழர்களும் வழக்கு மேடையின் நியாய வேடத்தைக் கேள்விக்குள்ளாக் கினர். லெனின் தினம் மற்றும் காக்கோரி தினம் நீதிமன்றத்திலேயே தோழர்களால் கொண்டாடப்பட்டது. பகத்சிங், மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தங்களது வாழ்த்துத் தந்தியை அனுப்ப நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஒரு கட்டத்தில் இவ்வழக்கு விசாரணை, மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவதற்குப் பதிலாக புரட்சியாளர்களுக்குச் செல்வாக்கு உண்டாக்குவதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1930 மே 1 ஆம் தேதியன்று லாகூர் சதி வழக்கு சட்டவரைவின் மூலமாக வழக்கை விசேட நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதனடிப்படையில், அனைத்து நீதித்துறை விதிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டு, “குற்றம் சாட்டப்பட்டோர் இல்லாமலேயே விசாரணை நடைபெறலாம்” என அறிவித்தது. பிறகு “தடங்கலின்றி’ நடைபெற்ற விசாரணை நாடகம் அக்டோபர் 7ஆம் தேதியன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குத் தூக்கு தண்டனை விதித்தது.
1929 வரை பெயரளவு டொமினியன் அந்தஸ்தையே கோரி வந்த காங்கிரசுக் கட்சி, 1930ல் “பூரண சுதந்திர’ கோரிக்கைக்கு மாறியதும், சட்ட மறுப்பு இயக்கத்தைத் துவக்கியதும், பகத்சிங் ஏற்படுத்திய புரட்சி அலை காங்கிரசைப் புரட்டி எடுத்ததன் விளைவேயாகும். இதனை 29.1.1931ல் “குடி அரசு’ இதழில் பெரியார் குறிப்பிடுகின்றார்.
“..காந்தியவர்களே, இக்கிளர்ச்சி (சட்ட மறுப்பு இயக்கம்) ஆரம்பிப்பதற்கு முக்கியக் காரணம் பகத்சிங் போன்றவர்கள் செய்யும் காரியங்களைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்ற கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.”
சட்ட மறுப்பு இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில், வழக்கம் போல் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி மன்றாடினார். அதன் விளைவாக காந்தி இர்வின் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில், பகத்சிங்கையும், இதர தோழர்களையும் விடுதலை செய்யக் கோரும், குறைந்தபட்சம் அவர்கள் தண்டனையையேனும் குறைப்பதற்கான ஷரத்தைச் சேர்க்க வலியுறுத்தி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உடன்பட மறுத்த காந்தி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் என்ன செய்தார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து அரசுக்கு அன்றாடம் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டிருந்த இர்வின், பேச்சுவார்த்தைக் குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார்:
“முடிவில், அவர் (காந்தி) ….
பகத்சிங் வழக்கு குறித்து குறிப்பிட்டார். அவர் (மரண) தண்டனையை நீக்கக் கோரவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையைத் தள்ளி வைக்கக் கேட்டுக் கொண்டார்.”
(கோப்பு எண்: 545/19312, உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள அரசியல் பிரிவு)
“அவர் (காந்தி) வெளியேறும் பொழுது, மார்ச்24ல் பகத்சிங் தூக்கிலிடப்பட இருப்பதாக பத்திரிக்கை களில் செய்தி படித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக காங்கிரசின் புதிய தலைவர் கராச்சியில் வந்திறங்கும் நாளும் அதுவே எனக் குறிப்பிட்டு, அதனால், கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார். நான் இவ்வழக்கை மிகக் கவனத்தோடு பரிசீலித்திருப்பதாகவும், தண்டனையை குறைப்பதற்கான எனது மனசாட்சியை திருப்திப்படுத்தும் எந்த முகாந்திரத்தையும் காணவில்லையென்பதையும் தெரிவித்தேன்… அவர் இந்த வாதத்தின் வலிமையை அங்கீகத்தது போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.”
(கோப்பு, பிப்ரவரி 19 தேதியிட்டது 1970 ஆகஸ்டு 15 மெயின்ஸ்ட்ரீம் இதழில் டி.பி.தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து)
இதனிடையே, 1930 மே 28ஆம் தேதியன்று பகத்சிங்கைத் தப்புவிப்பதற் கான திட்டத்தின் அடிப்படையில், வெடிகுண்டைச் சோதித்த பொழுது ஏற்பட்ட விபத்தில் பகவதி சரண் வோரா வீரமரணம் அடைந்தார். பகத்சிங் சிறையிலிருந்த போது, காந்தியை அம்பலப்படுத்தியும், இளைஞர்களை உற்சாகமாக அணிதிரட்டியும் வந்த வோரா ஒரு விபத்தில் பலியானது துயரார்ந்ததே. மேலும், இ.சோ.கு.கவின் படைத்தலைவராக விளங்கிய ஆசாத் இறுதி வரை தமது பெயருக்கேற்றாற் போல் போலீசின் பிடிக்குள் அகப்படாமலிருந்து, 1931 பிப்ரவரி 27ல் போலீசாருடன் தன்னந்தனியாக நின்று வீரத்தோடு சண்டையிட்டு அலகாபாத் நகரிலிருந்த அன்றைய ஆல்ஃபிரெட் பூங்காவில் வீரமரணமடைந்தார்.
இந்தியச் சிறை வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி காலை நேரத்திற்குப் பதிலாக, மார்ச்23,1931 அன்று இரவோடிரவாக மாலை 7.33 மணியளவில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலானோர் தூக்கிலிடப்பட்டனர். சிறையிலிருந்த நேரடி சாட்சியங்களின்படி, பகத்சிங்கை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்த பொழுது அவர் லெனின் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.
“சிறிது நேரம் காத்திருங்கள், ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறான்’
என்றார். அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்றினால் தடுக்கப்பட்ட அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து புத்தகத்தை உயர வீசிய அவர், “வாருங்கள், போகலாம்’ எனக் கிளம்பினார். பின்னர், அவர், சுகதேவ், ராஜகுரு மூவரும், புரட்சிகரப் பாடல் வரிகளைப் பாடியவாறு தூக்குமேடைக்குச் சென்றனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டை நோக்கி, “இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வாறு மரணத்தை நோக்கி வீரநடை போட்டார்களென்பதைக் காணும் வாய்ப்பு பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்’ எனக் கூறினார். அவர்களது பிணங்களை மக்களிடம் அளிப்பது கூட பேரபாயமாக உணர்ந்த அரசு, அவசர அவசரமாக அவர்களது உடல்களை சட்லெஜ் நதிக்கரையோரம் எரித்துப் போட்டது.
ஆங்கிலேயர்களும், காந்தியும் ஓரணியில் நின்று பகத்சிங்கைப் பல வகைகளில் இருட்டடிப்பு செய்ய முயன்ற போதும், உண்மையான தேசபக்தர்களும், மக்களும் அதனை ஏற்க மறுத்து, பகத்சிங்கை ஆதரித்தார்கள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் 1931 கராச்சி காங்கிரஸ் மாநாடு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டவுடன் நாடே கொந்தளித்தது.
கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த காந்திக்கு இளைஞர்கள் வழியெங்கும் கறுப்புக் கொடி காட்டினர். காங்கிரசின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக, வங்காள காங்கிரஸ் கமிட்டி புரட்சியாளர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. “அந்த நேரத்தில் பகத்சிங்கின் பெயர் இந்தியா முழுவதும் பரவலாக தெரிந்திருந்ததுடன், காந்தியின் அளவிற்குச் செல்வாக்குடனும் இருந்தது என்று கூறுவது மிகையாகாது.” எனக் குறிப்பிடுகிறார் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீத்தாராமையா.
“புரட்சி என்றாலே பகத்சிங் என்று தான் பொருள்’ என்றார் சுபாஷ் சந்திர போஸ். உண்மைதான், நமது நாட்டின் அரசியல், வரலாற்றுப் பொருளில், பகத்சிங்தான் புரட்சியின் அடையாளம். இரண்டு நூற்றாண்டுக்காலமாக விடுதலை வீரர்கள் வென்றெடுக்க முயன்ற விடுதலையை, எதிரிகளிடம் யாசித்துப் பெற வேண்டிய பிச்சையாக மாற்றினார் காந்தி. அந்த விடுதலை வீரர்களின் மரபில் வந்த பகத்சிங்கோ, கம்யூனிசக் கருத்துக்கள் அளித்த ஒளியில் காந்தியக் காரிருளைக் கிழித்து புரட்சியை மீண்டும் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டுவந்தார்.
மைசூர், நெல்லை, வேலூர், மீரட், வங்காளம் என்று ஒவ்வொரு முறையும் எதிரிகள் புதைத்து நிமிர்ந்த மறுகணமே, இன்னொரு பகுதியில் வெடித்துக் கிளம்பிய விடுதலை வேட்கையைப் போல, சட்லெஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட அந்தப் புரட்சி, 1946ல் தெலிங்கானா விவசாயிகள் எழுச்சியாய் ஆந்திரத்தில் எழுந்து, மூன்றாவது சிப்பாய் எழுச்சியாய், மும்பையில் வெடித்தது. “இதனை உடனே நசுக்கவில்லை என்றால் மேடையில் புதிய பாத்திரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று 1857இல் பெஞ்சமின் டிஸ்ரேலி விடுத்த எச்சரிக்கை ஆங்கிலேயப் பேரரசின் காதில் ஒலித்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு நசுக்கினால் எழக்கூடிய கம்யூனிசப் பேரலை ஏகாதிபத்தியவாதிகளின் கண்ணில் தெரிந்தது. காந்தி எனும் கைப்பாவையின் அவதாரம் கலைந்து கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. துரோகிகளின் கைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பதுதான் பேரரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எஞ்சி இருக்கும் ஒரே வழி என்பது எதிரிகளுக்குப் புரிந்ததால் அதிகார மாற்றம் நிகழ்ந்தது.
தியாகத்தின் மரபுகள் அனைத்தையும் பூசையறைப் படங்கள் ஆக்கிவிட்டு துரோகம் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட போதிலும் விடுதலைப் போராட்டத்தின் வீரமரபு, 1967 நக்சல்பாரி எழுச்சியாய் வங்கத்தில் பிறப்பெடுத்தது. திப்பு முதல் பகத்சிங் வரையிலான விடுதலை மரபனைத்தையும் உட்செரித்துக் கொண்டு மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரில் களத்தில் நிற்கிறது.
இதோ, துணைப்படைத் திட்டத்தை அறிவிக்கிறார் ஜார்ஜ் வெல்லெஸ்லி புஷ். வாரிசிலிக் கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறைகளைக் கொடுத்துவிடச் சொல்கிறார் டல்ஹவுஸி ப.சிதம்பரம். “”மகனே குறைந்தபட்சத் திட்டத்துக்கு மேல் எதையும் ஒத்துக் கொள்ளாதே” என்று மரணப் படுக்கையில் முனகுகிறார் சீதாரம் எச்சூரி நவாப். “”மகா பிரபுவே, ஆங்கிலேயக் கம்பெனியை நம்பியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை” என்று ஆக்ஸ்ஃபோர்டில் உரையாற்றுகிறார் தொண்டைமான் மன்மோகன் சிங்.
கனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல், முந்நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும், எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி, தெளிவாகத் தெரிகிறது அந்த முகம். மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம். இந்தப் பேரிரைச்சலைக் கிழித்துக் கொண்டு தீர்மானமானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்:

“இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை.. ..”