Saturday, October 3, 2015

இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி பற்றிய புரிதல்...

https://web.facebook.com/TN.ilayathalaimurai/videos/vb.476651372473564/598579363614097/?type=3&permPage=1

இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி பற்றிய புரிதல் நண்பர்களுக்கு மிகவும் குறைவாக உள்ளது... அனைவரும் தன்னையும், சுற்றி உள்ள நண்பர்களை வைத்து இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை எடுக்கின்றனர்... அது மட்டுமல்லாமல் மீடியாவும், சில அரசியல் சக்திகளும் இதற்கு உடந்தை வேறு... இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்...

நமது நண்பர்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள்... நமக்கே புரிதல் இல்லையேல் மிகவும் கடினம் தான்...

1. ஒருவர் செய்த வேலையை வைத்து மனிதனால் உருவாக்கப்பட்ட ஜாதியை நீங்கள் நினைப்பது போன்று உடனடியாக அழித்து அனைவரும் சமம் என்ற நிலையை உடனடியாக கொண்டு வர முடியுமா??

2. ஒரு சிலர் ஜாதியை ஒழிப்போம் என்று கூறுவர்.. பலர் ஜாதி வேண்டும் என்று கூறுவர்... நீங்க எந்த வகை.? ஜாதி என்பது அவரவர் கலாச்சாரம் என்றால், அதை வீட்டோடு வைத்து கொள்ளலாமே.. அதை ஏன் வேலை பெரும் போது சிபாரிசு பெற உபயோகபடுத்துகிறார்கள்... அல்லது நீர் எந்த ஜாதி என்ற அபத்தமான கேள்வியை நண்பர்களிடம் கேட்கிறார்கள்...

3. பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கினோம்... தந்தை பெயரை initial ஆக உபயோகபடுத்தினோம்.. இப்போது தாயின் பெயரையும் சேர்த்து உபயோகபடுத்துகிறோம்... பெயரில் ஜாதி தேவையா??

4. நாம் அனைவரும் நினைப்பது போல பிற்படுத்த அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் பொருளாதார நிலை உயரவில்லை... மிக சொற்ப அளவிலேயே உயர்ந்துள்ளனர்.. அதை நீங்களே தினமும் சந்திக்கும் கீழ்தட்டு மக்களை சந்தித்தாலே புரியும்...

5. Creamy Layer only in OBC: அரசியலமைப்பு செயலர்களான ஜனாதிபதி, உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசில் குறிப்பிட்ட நிலைக்கு மேல் பதவி வகிப்பவர்கள், படைபிரிவுகளில் கலோனல் பதவி வகிப்பார்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க கூடாது என அறிவித்தது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 6 இலட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உடையவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள் பிரிவின் கீழ் வகைபடுத்தப்படுகின்றனர். இது விக்கிபீடியாவில் இருந்து எடுத்தது... மக்கள் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் இருந்தால் தான் கிரிமிலேயர் சாத்தியம் ஆகும்... அல்லது அரசு நேர்மையாக இருந்து, தவறு செய்யும் மக்களை தண்டிக்க தயக்கம் காட்ட கூடாது... அத்தகைய மாற்றம் உருவானால் மட்டுமே, இது சாத்தியம்... ஏனெனில், டாக்டர், வக்கீல் போன்ற பலரும் முறையாக வருமானத்தை கணக்கு காட்டுவதில்லை...

6. ஜாதி சார்ந்த இட ஒதுக்கீடு வேண்டாம் என்றால்., பிற்படுத்தபட்ட ஏழைகள் வாழ்வாதாரம் உயர என்ன வழி என கூறுங்கள்... இருக்கபட்டவன் தனியார் பள்ளியில் படித்து, அனைத்து பாடங்களுக்கும் டியுஷன் சென்று 1100 மார்க் வாங்குகிறார்... வசதி இல்லாத ஏழை கூலி தொழிலாளி மகன், அரசு பள்ளிகளில் படித்து அவரால் முடிந்த 900 மார்க் வாங்குகிறார்... சென்னை போன்ற நகரங்களில் உள்ள மாணவர்கள் IIT சிறப்பு வகுப்பு செல்கின்றனர்... அது ஒரு ஏழை கூலி தொழிலாளியால் முடியுமா??? உங்கள் வீட்டில் வேலை செய்யும் சமயல்காரர், பூ விற்பவர், தெருவில் காய் விற்பவர், முடிதிருத்தம் செய்பவர்கள் என பலரும் என்ன செய்வார்கள் என கொஞ்சம் யோசியுங்கள்... வழியை கூறுங்கள்... முதலில் மதுவை ஒழித்து, கல்வியை அனைவருக்கும் சமமாக கொண்டு வந்து, ஏழைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றிய பின்பு, இட ஒதுக்கீடு நீக்குவதை பற்றி பேசலாம்... அரசு அதை செய்யவில்லையா, அரசை மாற்ற முயற்சி செய்யுங்கள்.. அதை விடுத்து அப்பாவி ஏழைகளின் இட ஒதுக்கீட்டில் கை வைக்காதீர்கள்...

7. உயர்ந்த ஜாதிகளில் உள்ள ஏழைகளை கண்டறிய மக்கள் மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியம்... ஜாதி அடிப்படை இல்லாமல், பொருளாதார அடிப்படையில் கண்டறிய திறமையான, நேர்மையான, ஜாதி மதம் பார்க்காத அரசாங்கம் அமையபெற்று மக்களும் அதே நேர்மையை பின்பற்ற வேண்டும்... ஏனென்றால் ஏழைகள் பயன்பெற உருவாக்கப்பட்ட, ரேஷன் அட்டையை அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.. பொருட்கள் வேண்டாம் என்ற ரேஷன்கார்டு பெற ஒரு சிலரே முன் வந்துள்ளனர்...

அனைத்து விழிப்புணர்வுப் பதிவுகளும் மின்னஞ்சலாக பெற, நமது Google குழுவில் இணைய இந்த link ஐ click செய்து apply membership மற்றும் apply to join this group என click செய்யவும்.
https://groups.google.com/d/forum/ilayathalaimurai

நன்றி,
இளையதலைமுறை

No comments:

Post a Comment