Sunday, August 31, 2014

தமிழன் டா...

'ஜெய்ஹிந்த்’ மந்திரத்தின் தந்தை வீரன் செண்பகராமன் பற்றி?

43 ஆண்டுகள் வாழ்ந்தவர் செண்பகராமன் பிள்ளை. அதில் 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர். தமிழகத்தின் தென்புறத்தில் பிறந்து ஜெர்மன் சென்று இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டியவர் இவர்.

'ஜெய்ஹிந்த்’ என்ற சொல்லை 1907-ம்
ஆண்டு வடிவமைத்தவர். ஜெர்மன் ஆதரவுடன் 'எம்டன்’ என்ற கப்பலில் இந்தியாவை நோக்கி வந்தவர்.
இன்றைய தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் எம்டன் கப்பல் வீசிய குண்டுகள் அன்று விழுந்தன.

பிரிட்டிஷ் அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்ட
ு திரும்பிய செண்பகராமன், இந்தியாவுக்கு வெளியில் சுதந்திர இந்திய அரசாங்கத்தை ஆரம்பித்து அதன் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

அவர் தொடங்கிய இந்திய தேசிய தொண்டர படையை முன்னோட்டமாகக் கொண்டுதான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவத்தை வடிவமைத்தார். ஜெய்ஹிந்த் என்ற சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தினார்.

'இந்தியர்களுக்கு சுதந்திரம் அடையத்
தகுதி இல்லை’ என்று இவரிடம் ஹிட்லர் சொல்ல, அதனை தனது வாதங்கள் மூலமாக வாபஸ் வாங்கவைத்த
போர்வீரன் செண்பகராமன்!

No comments:

Post a Comment