இந்திய தேசிய ராணுவம் என்பது இரண்டம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய ராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்த சென்றவர்கள் ஆகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.
1942 இல் சிங்கப்பூர் சப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், ராஷ் பிஹாரி போஸ் என்பவரால் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. இதன் படைத்தலைவர் மோகன் சிங் ஆவார். ஆனால் விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943 இல் நேதாஜி சுபாஷ் சந்திர போசினால் புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது. போசின் இந்திய இடைக்கால அரசின் படைத்துறையாக செயலாற்றியது. சப்பானியப் படைகளுக்குத் துணையாக மலேசியா மற்றும் பர்மா போர்த்தொடர்களில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது. சப்பானிய மற்றும் பிரித்தானியத் தரப்புகள் தங்களது தேவைகளுக்கு இப்படையினை பெரிய அளவில் பயன்படுத்துக்கொண்டன. சுமார் 43,000 உறுப்பினர்களைக் கொண்ட இப்படை போர்க்களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இதன் உறுப்பினர்கள் மீது பிரித்தானிய அரசு சாட்டிய குற்றங்களும், அது தொடர்பான வழக்குகளும் இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

No comments:
Post a Comment