Sunday, August 31, 2014

இரண்டாம் உலகப்போரின் சில தகவல்கள் . . .

* இரண்டாம் உலகப்போரின் போது ரஷிய நாடு தான் அதிக அளவிலான உயிர் இழப்பை சந்தித்தது. 1923 ஆம் வருடம் பிறந்த ஆண்களில் 80 சதவீத பேர்கள் இந்த போரில் உயிரிழந்தனர்.

* இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மன் நாட்டு பெண்களை கும்பல் கும்பலாக சிகப்பு ராணுவம் கற்பழித்தது. சிகப்பு ராணுவத்தினரால் இரக்கமே இல்லாமல் கிட்டத்தட்ட 25 லட்சம் ஜெர்மனிய பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

*ஜெர்மன் வீரர்களுடன் ரஷியா சண்டையிட்ட ஸ்டாலின்கிராட் போர் தான் வரலாற்றில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட போராக கருதப்படுகிறது. 8 மாதங்கள் நடைப்பெற்ற இந்த போரில் கிட்டத்தட்ட 120,000 மக்கள் உயிரிழந்தனர்.

* அட்லாண்டிக் போர் தான் இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற நீண்ட போராகும். 1936 ஆம் வருடம் ஆரம்பித்த இந்த போர் 9 வருடம் காலம் நீடித்து, 1945 வரை நடைபெற்றது.

* இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற பல்ஜ் போர் அமெரிக்கர்களுக்
கு மிகக்கொடுமையான துன்பத்தை உண்டாக்கிற்று. கிட்டத்தட்ட 40.000 அமெரிக்கர்கள் அந்த போரில் உயிரிழந்தனர்.

* யூதர்களின் மீது மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. உதாரணத்திற்கு, மலட்டுத்தன்மையின் தாக்கத்தை கான ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எக்ஸ்-ரேக்களால் தாக்கப்பட்டது. இந்த பரிசோதனைகள் கொடூரமான முறையில் நடைபெற்றது. மருத்தவ சோதனைகளுக்காக அவர்களின் தசைகளும் எலும்புகளும் வெட்டப்பட்டது. இப்படி மனிதநேயமற்ற பல சோதனைகளுக்கு யூதர்கள் பயன்படுத்தப்பட்
டார்கள்.

* முதல் போர் விமானங்களை உருவாக்கியது ஜெர்மன் நாடு. முதல் போர் விமானத்தை மெஸ்ஸர்ஷ்மிட் ME-262 என அழைத்தனர்.

* ஜெர்மன் அதிபர் அடால்ப் ஹிட்லரின் மருமகனான வில்லியம் ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்க கப்பல் படையில் பணி புரிந்து கொண்டிருந்தார்.

* இந்த போரில் கிட்டத்தட்ட 15 லட்சம் குழந்தைகள் உயிரிழந்தனர். பேரழிவை ஏற்படுத்திய இந்த போரில் இறந்த 12 லட்ச குழந்தைகள் யூதர்களாவார்கள்.

No comments:

Post a Comment