Sunday, December 21, 2014

"Eelam genocide & Indian corruption" Jeyam Ravi - Nimirnthu Nil (MUST W...

Nimirnthu Nil!! sema dialogue!! Part 2

Nimirnthu Nil!! sema dialogue!! Part 1

Abolition of Caste system - Tamil Movie Mudhalvan

Arjun shoots Raghuvaran - Mudhalvan

INDIAN-kamal hassan-SUPERB SCENE

Citizen Court Scene 2 - Ajith

Unnaipol Oruvan Dialogue

Great Dialogue From Katrathu Tamil M.A (2007)

Economics explained in a simplified way - Great Scene from Peraanmai

Monday, November 10, 2014

Mahabharatham - JayaMohan

http://venmurasu.in/

அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.

இந்திய ரூபாய் வீழ்ச்சி பற்றி கவலைப்படும்
அனைவருக்கும் ஒரு ஆலோசனை ..
இந்திய நாடு முழுவதும் ஏழு நாட்களுக்கு அவசர
தேவை தவிர கார்கள், பைக்கள் பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள் (வெறும் 7 நாட்கள் மட்டும் ) நிச்சயமாக டாலர் வீதம் கீழே வரும். இது உண்மை தான். டாலரின் மதிப்பு பெட்ரோலால் நிர்ணயம் செய்ய படுகிறது.
அமெரிக்கா 70 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில்
டாலரை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டது.
அமெரிக்கர்கள் டாலர்கள் மூலம் பெட்ரோல் விற்க மத்திய
கிழக்கு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
அமெரிக்கர்கள் தங்கத்திற்கும் பெட்ரோலுக்கும்
இடையேயான பொருளாதார தொடர்பை நன்கு புரிந்துகொண்டனர். எனவே மத்திய கிழக்கு நாடுகளுடன் டாலரை பயன்படுத்தி பெட்ரோல் விற்பனை செய்யவேண்டும் என்ற ஒப்பந்தத்தை உருவாக்கி கொண்டனர்.
இதன்படி மத்திய கிழக்கு நாடுகளின் அரச குடும்பத்திற்கு அமெரிக்க பாதுகாப்பு அளிக்கும்.மத்திய கிழக்கு நாடுகளின்
வளர்ச்சிக்கு அமெரிக்க உதவும்... எனவே பெட்ரோல்
மட்டுமே அமெரிக்க டாலரின் மதிப்பை முடிவு செய்கிறது.
அமெரிக்க டாலரில் Dollar as legal tender for debts என்ற
வரிகள் உள்ளது இதன் பொருள் ... சட்ட பூர்வமான கடன்
வழங்கப்பட்டுள்ளது. அனால் நமது இந்திய பணத்தில் I
promise to pay the bearer என்ற வரி உள்ளது இதன் பொருள்
இந்திய பணம் வேண்டாம் என்றால் அதற்க்கு நிகரான
தங்கத்தை RBI வழங்கும்...
ஆனால் அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த
பொருளும் வழங்காது.. ..
At 2008 August month 1 US $ = INR Rs 39.40
At 2014 August now 1 $ = INR Rs 61
அமெரிக்க வளர்கிறதா...?
இல்லை இந்தியா கீழ்நோக்கி செல்கிறது.....காரணம்.....
அந்நிய முதலிடு... மற்றும் பெட்ரோல் இறக்குமதி..
இந்தியா
பெட்ரோல் இறக்குமதி செய்ய இந்தியா டாலரை நம்பி உள்ளது . இந்தியாவிடம் டாலர் கையிருப்பு குறையும் போது அமெரிக்காவிடம் தங்கத்தை கொடுத்து டாலர் வாங்குகிறது.... பின்பு டாலரை கொண்டு பெட்ரோல் வாங்குகிறது.
நம்மிடம் தங்கம் கையிருப்பு குறையும்
போது பணத்தின் மதிப்பு குறைகிறது.. # petrol
நமது நாடு முன்னேற நாம் தான் செயல்பட வேண்டும்.
முடிந்த அளவு பெட்ரோல், டீஸல் , காஸ்
பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவோம்..
இந்திய பொருளாதாரத்தை மீட்டு எடுப்போம் .......
முடிந்தால் இந்த பதிவை உங்கள் பக்கத்தில்
பகிர்ந்து கொள்ளுங்கள்..
உங்களின் இந்த சிறிய முயற்சி பலரை சிந்திக்க
வைக்கும்..

Thursday, November 6, 2014

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 20


bosu19-2போசு தனது வாழ்நாட்களில் தமிழ்நாட்டையும், சென்னையையும் மறக்கவே மாட்டார். 1927 டிசம்பர் மாதம் சென்னை மாநகரில் 42வது காங்கிரசு மகாசபைக் கூட்டம், டாக்டர் எம்.ஏ.அன்சாரி தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டிற்கு வங்க மாநில காங்கிரசு பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கி, சுபாசு சந்திரபோசு சென்னைக்கு வருகை தந்தார். மாண்டலே சிறையில் வாடி நிபந்தனையில்லாமல் விடுதலையாகி உடல்நலம் தேறி சென்னைக்கு வந்த சுபாசு சந்திரபோசுக்கு தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். காங்கிரசு மாநாட்டில், இளைஞர் கூட்டம் அவரை எந்தநேரமும் சூழ்ந்து கொண்டிருந்தது. அவர் மேடைக்கு வந்தபோதும், போனபோதும் இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த மாநாட்டில்தான் “இந்தியாவின் லட்சியம் பூரண சுதந்திரம்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் செயலாளர்களாக சுபாசு சந்திரபோசு, ஜவஹர்லால் நேரு, சாகிப்குர்ஷிஆகிய மூன்று இளம் தலைவர்களை நியமித்தது காங்கிரசு மகாசபை. அகில இந்திய காங்கிரசில் சுபாசு சந்திரபோசுக்குக் கிடைத்த முதல் பதவி அதுதான்.
bosu4இம்மாநாட்டில்தான் பிற்காலத்தில் தனது காங்கிரசு தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படும்பொழுது தனது வெற்றிக்கு உழைக்கவிருக்கும் தென்பாண்டி சிங்கம் என்று அறியாமல் அந்த வங்காளப் புலி போசும், தென்பாண்டி சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இருவரும் சந்தித்தனர். இந்த சந்திப்பை ஏற்படுத்தியவர் வழக்கறிஞர் சீனிவாச ஐயங்கார் ஆவார். முத்துராமலிங்கத்தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் ஊரில் பிறந்தார். இந்த பசும்பொன் கிராமமானது முற்காலத்தில் இது பழம்பது என்றும் பசும்பொன் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. தலையாலங் கானத்துச்செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி புலவர்கள் குறிப்பிடும் பொழுது பசும்பூன் பாண்டியன் என்றும்
“வில் கெழு தானைப் பசும் பூன் பாண்டியன்”என்று பாணர் அகநானூறு 162 வது பாடலிலும், “விசும்பு இவர் வெண்குடைப், பசும்பூன் பாண்டியன்” என்று ஈழத்து பதன் தேவனார் அகநானூற்றில் 231 வது பாடலிலும், “நாடு பல தந்த பசும்பூன் பாண்டியன்” என்ற நக்கீரர் அகநானூற்றில் 253-வது பாடலிலும், “பலர் புகழ்திருவிற் பசும்பூன் பாண்டியன்” என்று மதுரை கணக்காயனார் அகநானூற்றில் 338-ஆம் பாடலிலும் பாடியிருப்பதன் அடிப்படையில் மதுரையை ஆண்ட சங்ககால பாண்டியன் நெடுஞ்செழியன் இந்த மண்ணில் பிறந்தவன். இது போன்ற சிறப்பு மிக்க பசும்பொன் மண்ணில் மன்னர் குலத்தில் உக்கிரபாண்டியத்தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் முத்துராமலிங்கத் தேவர் 30.10.1908ல் மகனாகப் பிறந்தார். ஒரு முறை வழக்கு ஒன்றிற்காக எஸ்.சீனிவாச ஐயங்கார் அவர்களை தம் இளம் வயதில் சந்திக்கச் சென்றார் முத்துராமலிங்கத் தேவர். அந்த சந்திப்பில் சீனிவாச ஐயங்காரின் பேச்சில் கவரப்பட்டு காங்கிரசில் இணைந்து தனது 19-வது வயதில் சீனிவாச ஐயங்காருடன் சென்னை காங்கிரசு மாநாட்டில் கலந்துகொண்டார். அப்பொழுது முத்துராமலிங்கத் தேவரை தனது அறையில் தங்கவைத்துக் கொள்ளாமல் போசின் அறையில் தங்கவைத்து இருவருக்கும் நட்பு ஏற்பட காரணமாக இருந்தார் சீனிவாச ஐயங்கார். பின் போசின் பேச்சிலும் அவரின் விடுதலை போராட்ட உணர்விலும் கவரப்பட்ட தேவர் அன்று முதல் தனது அரசியல் தலைவர் நேதாஜி சுபாசு சந்திரபோசு என்று ஏற்றுக்கொண்டார். சீனிவாச ஐயங்காரை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார் தேவர்.
bosu1தேவருக்கும் போசுக்கும் விடுதலை போராட்டம் குறித்த சிந்தனை ஓட்டங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்தது. போசு இளம் வயதில் விவேகானந்தரின் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு ஆன்மீகத்தில் இருந்தது போலவே, முத்துராமலிங்கத் தேவரும் விவேகானந்தரின் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவராக திகழ்ந்தார். போசு எப்படி காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாரோ அது போன்று, முத்துராமலிங்கத் தேவரும் காந்தியின் அகிம்சையை நம்பவில்லை. ஆனால் காந்தியின் ஆன்மீகமும் அரசியலும் இணைந்த இயக்கத்தை தேவர் ஆதரித்தார். எனவேதான் தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்றார். தேசியம்- உடல், தெய்வீகம்- உயிர் எனப் போற்றினர் தேவர். இந்த “தேசியமும் தெய்வீகமும் உயிர்” என்ற இந்த வார்த்தையை இன்றைய அரசியல்வாதிகள் கடைபிடித்தால் புனிதமான அரசியலில் ஒரு குற்றமும் நடக்காது, நாடு சிறப்பாக இருக்கும். அனைத்தையும் அந்த ஒரு வரியில் கூறிய சிறப்பு தேவரையே சேரும். இது போன்ற சிறப்புமிக்க தேவரின் நட்பு, போசுக்கும் சிறப்பை தேடித் தந்தது. இருவருக்கும் உள்ள நட்பு வளர்ந்து வந்த பிறகுதான், 1939-ல் காங்கிரசு தலைவர் தேர்தலில் போசு போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்ற பட்டாபி சீத்தாராமையாவிற்கு ஆதரவாக காந்தியடிகளின் ஆதரவாளர்கள் பலர் மிகவும் கடுமையான பிரச்சாரம் செய்தனர். ஆனால் போசுக்கு தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் முத்துராமலிங்கத்தேவர்.
bosu21939 சனவரி 30-ம் தேதி நடைபெற்றத் தேர்தலில் போசு 1580-வாக்குகளும், பட்டாபி சீத்தாராமையா 1375-வாக்குகளும் பெற்றனர். போசு சிறப்பான வெற்றி பெற்றார். போசின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது, வங்காளமும் சென்னை மாகாணமுமேயாகும். தமிழகத்தின் சார்பில் 110-வாக்குகள் போசுக்கு கிடைத்தது. இந்த வெற்றியைக் கண்டு காந்தியடிகள், மௌலானா அபுல்கலாம் ஆசாத், தலைமைப் பதவிக்கான போட்டியிலிருந்து விலகிக் கொண்டபோது பட்டாபி சீத்தாராமையாவை போட்டியிடும்படி வற்புறுத்தியதில் நான் முக்கியமானவன், ஆகவே பட்டாபியின் தோல்வி என் தோல்வி என அறிக்கை வெளியிட்டார். காந்தியின் ஆதரவு பெற்ற ஒருவர் கட்சித் தேர்தலில் தோல்விக்கு உள்ளானது காங்கிரசின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். இந்தத் தேர்தலில் போசு பெற்ற வெற்றிக்குப் பின் காந்தியின் அறிக்கை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1927-ல் சென்னையில் கிடைத்த போசின் சந்திப்பில் இருந்து முத்துராமலிங்கத்தேவர் தனது இறுதிமூச்சுவரை போசின் சீடராகவே இருந்தார். வங்காளத்தில் பிறந்த விவேகானந்தரின் சிறப்பு எப்படி உலகறிந்தது. அன்று பாஸ்கர சேதுபதி அவர்களுக்கு உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வாய்ப்பை விவேகானந்தருக்கு வழங்கினார். எனவேதான் விவேகானந்தர் சிக்காகோ மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அதன்பின் உலகில் சிறப்பான புகழ் பெற்றார். இதற்கு எப்படி ஒரு தமிழன் உதவினானோ, அதே போன்று ஒரு வங்காளத்தில் ஒரு சிறப்பான தலைவரின் புகழ் வளர்வதற்கும் தமிழர்கள்தான் பெரும் உதவி செய்திருக்கிறார்கள்.
bosu3தென்னகத்தில் முத்துராமலிங்கத்தேவர் பெற்றிருந்த புகழ் எவ்வாறிருந்தது எனில், 1935ம் ஆண்டு இந்திய சட்டத்தின்படி, இந்திய வரலாற்றில் முதன் முறையாக விரிவுபடுத்தப்பட்ட சட்டமன்றத்திற்கான தேர்தல் 1937ல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை நீதிக்கட்சி, பெரிய பணக்காரர்கள் மற்றும் ஜமீன்தார்கள் ஆதரவு பெற்ற கட்சியாக இருந்ததால் அது காங்கிரசு கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கியது. இந்தத் தேர்தலில் இராமநாதபுர மன்னர் சண்முகராஜேஸ்வர நாகநாத சேதுபதி, இராமநாதபுர சட்டமன்ற நீதிக்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சர்தார் வல்லபாய் பட்டேலின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த காங்கிரசு கட்சியின் அட்ஹாக்(Adhoc) கமிட்டி, சேதுபதி மன்னருக்கு இணையான வேட்பாளரைத் தேடியது. முத்துராமலிங்கத்தேவர் தேர்தலில் போட்டியிட மனுசெய்யவுமில்லை, தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற எண்ணமும் அவருக்கில்லை. இருப்பினும் காங்கிரசு கட்சி மேலிடம், இராமநாதபுரம் மன்னரை எதிர்த்து நிற்க தேவரே சரியான வேட்பாளர் என்று முடிவு செய்து அதன்படி வேட்பாளருக்கான வைப்புத் தொகையை காங்கிரசு கட்சியே செலுத்தி தேர்தல் களத்தில் தேவரை போட்டியிடச் செய்தது. இதுதான் தேவரின் முதல் சட்டமன்றத் தேர்தல், இந்த தேர்தலில் தேவர் எதிர்த்தது மன்னரை மட்டும் இல்லை தன் தந்தையையும் கூட. மன்னருக்கு ஆதரவாக தேவரின் தந்தை தேர்தல் வேலை செய்தார். தேவரே அவரின் தொகுதியில் பிரச்சாரம் செய்யவில்லை.
காங்கிரசு தன் மீது வைத்த நம்பிக்கைக்கு உழைக்கும் பொருட்டு பிற காங்கிரசு வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிக்குத்தான் அதிக கவனம் செலுத்தினார். போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் இராஜாஜியுடன் இணைந்து மாடு பூட்டிய கூட்டுவண்டியை கட்டிக்கொண்டு இராஜாஜி அதில் அமர்ந்துகொள்ள தேவரே மாட்டுவண்டியை ஓட்ட ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்துள்ளார். இந்த செய்தியை ‘இதயநாதம்’ புத்தக வெளியீட்டு விழாவில் இராஜாஜியே நினைவு கூர்ந்துள்ளார். இந்தத் தேர்தலில் தொடங்கி தன் வாழ்நாளில் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி மட்டுமே கண்டவர் என்ற பெருமைக்குரியவர் தேவர்.

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 19

bosu19-2போசு, தலைவர் பதவியில் இருந்து செயல்பட நினைத்த செயல்கள் அனைத்தும் முடிக்கும் முன், அவரின் ஒர் ஆண்டு பதவிக்காலம் முடிந்து அடுத்த காங்கிரசு தலைவர் தேர்தல் வந்துவிட்டது. இந்தத் தேர்தலில் மீண்டும் போசை தலைவராகத் தேர்ந்தெடுக்க காந்தியின் ஆதரவாளர்கள் விரும்பவில்லை. காங்கிரசு தலைவர் பதவியில் போசு மீண்டும் வரக்கூடாது என்று காந்தியும் எண்ணினார். போசுக்கும் காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் காந்தியை போசு ஒரு தலைவர் என்ற மரியாதையுடனும் மதிப்புடனும் செயல்பட்டவர் போசு.காரணம் ஒருமுறை போசு ஜெர்மனியில் இருந்தபோது இந்தியாவைப் பற்றிய மிகக் கேவலமாக சித்தரித்த பல ஜெர்மானிய திரைப்படங்களை எதிர்த்து தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். அதில் முக்கியமான படம் Everybody loves music என்ற திரைப்படத்தில் மகாத்மாகாந்தி கோவணத்தைக் கட்டிக்கொண்டு ஒரு பிரிட்டிசு பெண்ணுடன் கூத்தாடுவது போல காட்சி இருந்தது. இந்தியத் தலைவர்கள் பலர் அந்த நேரத்தில் ஜரோப்பாவில் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருந்தாலும் அவர்களில் ஒருவருக்குக் கூட இத்திரைப்படத்தைக் கண்டிக்க வேண்டும் என்ற துணிவு வரவில்லை. ஆனால் போசு உடனடியாக ஆர்ச் பிஷப் கார்டினல் இன்டிசியா என்பவரை சந்தித்து இப்படத்திற்குத் தடை விதிக்கும்படி வற்புறுத்தினார். உடனடியாக ஜெர்மன் முழுவதும் இப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
bosu19-6இன்று காந்தியையும் அவரின் கொள்கையையும் கிண்டல் செய்யும் விதமாக இணையதளத்தில் காந்தியின் புகைப்படம் ஒன்று உள்ளது. அந்த புகைப்படத்தின் காட்சி இந்த படத்தின் ஒரு காட்சியாக இருந்ததிற்கு வாய்ப்புள்ளது. போசு, காந்தியை தலைவராகவே பார்த்தார். ஆனால் காந்தி, காங்கிரசு தலைவர் பதவியில் ஒருமுறை ஒருவர் வகித்தபின் மீண்டும் அப்பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றார். ஆனால் சில நெருக்கடியான தருணத்தில் மட்டும் காங்கிரசு தலைவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார். இருப்பினும் தற்பொழுது அதுபோன்ற சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்ற காரணத்தால் போசு மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என்றார். போசு, காங்கிரசு தலைவராக இரண்டு முறை நேரு இருந்ததை சுட்டி காட்டினார். மேலும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அல்லது யுகங்களுக்கு இவர் அகிம்சையைப் போதித்துக் கொண்டிருக்கப்போகிறார், இவர் சொல்வதைத் தட்டாமல் செய்வதுதான் காங்கிரசு பணி என்றால் பிறகு காங்கிரசுக்கு எதற்கு தனியாக ஒரு தலைவர் என்றார் போசு. மக்கள் மத்தியில் போசுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.
போசு மீண்டும் தலைவராக வேண்டும் என்று மக்களே விரும்பினார்கள் என்றுதான் கூறவேண்டும். போசின் அனுமதியின்றி, ஜல்பைகுரி என்ற நகரத்தில் கூடிய வங்க மாநில காங்கிரசு காரியகமிட்டி, 1939-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்தியபிரதேசத்தில் உள்ள திரிபுராவில், கூடவிருக்கும் காங்கிரசு மகாசபைக்கு சுபாசு சந்திரபோசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஜரோப்பாவில் இரண்டாம் உலகப்போரின் யுத்த மேகங்கள் குமுறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், உலகப்போரில் பிரிட்டனும் சிக்கிக் கொள்ளும் நெருக்கடியில் உள்ளது. இந்தத் தருணத்தில் காங்கிரசு கட்சியையும், மக்களையும் வழிநடத்த இடதுசாரிகொள்கை கொண்ட போசு ஒருவரால் மட்டுமே முடியும். பிரிட்டிசு ஆட்சியை வெளியேற வைக்கவும், இறுதிப் போராட்டத்தை நடத்தவும் போசின் தலைமை அவசியம் என்றனர். ஆனால் ஏற்கனவே டில்லியில் காங்கிரசு காரிய கமிட்டிக் கூட்டத்தில், பிரிட்டிசு உலகப்போரில் சிக்கியிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுதந்திரம் அடைவது, சத்தியாக்கிரக தர்மத்திற்கு முரண்பட்டதென்றும், அப்படி முயற்சி செய்பவர்களுக்கு தமது ஆதரவு கிடைக்காதென்றும் காந்தி கூறியிருந்தார். இது வங்காள காங்கிரசு காரிய கமிட்டி செயலுக்கு எதிராக அமையும் விதத்தில் இருந்தது.
காந்தியின் ஆதரவாளர்களான பட்டேலும், ராஜாஜி, காங்கிரசு காரியக்கமிட்டி உறுப்பினர்கள் சிலரும் சேர்த்து சுபாசு சந்திரபோசுக்கு எதிராக, மௌலானா அபுல் கலாம் ஆசாத்தை தலைவர் பதவிக்கு நிறுத்துவது என்று சிந்தித்தனர். ஆனால் காந்தி, போசுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு குறிப்பாக தென்மாநிலமான தமிழ்நாட்டில் போசுக்கு இருந்த ஆதரவை குறைப்பதற்காக, தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று சிந்தித்து, தென்மாநிலத்தைச் சேர்ந்த பட்டாபி சீத்தாராமையாவைப் போட்டியிடச் செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று கருதினார். அதை அறிந்ததும் அபுல்கலாம் ஆசாத், பட்டாபி சீத்தாராமையாவுக்கு ஆதரவாக தாம் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக ஓர் அறிக்கை விடுத்தார். இந்த அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபுல்கலாம் ஆசாத் விலகியபின் பட்டாபியை தேர்தலில், காந்தி நிறுத்துவை ஒரு தேர்தல் களமாகக் கண்டார் போசு. தன்னை சவாலுக்கு அழைப்பது போல் காந்திஜியின் செயல்பாடுகளைக் கண்ட போசு எமனுக்கும் அஞ்சாத அந்த மாவீரர் உடனடியாக அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு, பல்வேறு மாகாணக் காங்கிரசு கமிட்டிகள் தலைவர் தேர்தலுக்குத் தங்கள் வேட்பாளராக எனக்குத் தெரியாமலே என்னை நியமித்துள்ளனர், என் சம்மதத்தையும் கோரவில்லை.
சோஷலிஸ்ட் (சமதர்மம்) அல்லாதவர்களும் பல நாடுகளில் இருந்து என்னையே போட்டியிடுமாறு கூறுகிறார்கள். இதற்கும் மேலாக காங்கிரசு பிரதிநிதிகள் மத்தியில் தாமே மீண்டும் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு குறிப்பிட்ட பொறுப்பிலிருந்து நான் பணியாற்ற வேண்டும் என்று மக்கள் எனக்கு உத்தரவிடப்படும் போது அதை மறுக்க எனக்கு அதிகாரமில்லை. உண்மையில் அப்படி நான் மறுத்தால் பொறுப்பிலிருந்து நான் விலகி ஓடுவதாகவும் என் கடமையைச் செய்யத் தவறுவதாகவும் என்மீது குற்றம்சாட்ட வழி அமைப்பதாகவும் இருக்கும். எனவே நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார் போசு. இந்த அறிவிப்பை கண்ட வல்லபாய் பட்டேல் அதிர்ந்து போனார். உடனே போசின் அண்ணன் சரத் சந்திரபோசுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அதில் காங்கிரசு கொள்கைகள் தலைவரை நிர்ணயிப்பதில்லை, காரியக் கமிட்டியும் காங்கிரசும்தான் நிர்ணயிக்கின்றது. எங்கள் அறிக்கை டாக்டர் பட்டாபியின் சேவைகளைப் பாராட்டி ஆதரிக்கிறது. எனவே போசு கட்சியை பிளவு படுத்தாமல் தலைவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றார்.
bosu19-5இதற்கு சரத் சந்திரபோசு பதில்: “இன்று காலை தங்கள் தந்தி கிடைத்தது, மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் அறிக்கையும், போசின் அறிக்கையும் படித்தேன். என்னைப் பொறுத்தவரை அபுல்கலாம் ஆசாத் வாபஸ் பெற்ற பிறகு பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்துவது தவறு. பின் வரவிருக்கும் ஆண்டுகள் மிகவும் நாட்டு மக்களுக்கு முக்கியமானதாக இருக்கும். எனவே இந்தத் தருணத்தில் டாக்டர் பட்டாபி சீத்தாராமையாவின் தலைமையில் மக்களை ஒருங்கிணைத்து வரவிருக்கும் போராட்டகாலத்தில் மக்களை உற்சாகமூட்டி செயல்படுவது இயலாது.” என்று பட்டேலுக்கு தெரிவித்தார். போசின் அண்ணனும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று சிந்தித்து பதிலளிப்பதில் போசு போன்று செயல்படுபவர். போசு மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்த போதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஏன் அதிகமான செல்வாக்கு பெற்றிருந்தார் என்பதைக் காண்போம்.

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 18

காங்கிரசு கட்சியில் போசுக்கு இருந்த புகழை குறைக்கும் ஒரு திட்டத்தினை ஆங்கிலேய அரசு உருவாக்கியது. அதற்கு பிரிட்டிசு பத்திரிகைகளும் சூழ்ச்சிக்கு துணை நின்றதினால் காங்கிரசு தலைவர்களுக்கு இடையில் கருத்து வேற்றுமையை உருவாக்கி, அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றது. காரியக்கமிட்டியில் உள்ள காந்திஜியின் ஆதரவாளர்களான வல்லபாய்பட்டேல், ராஜாஜி, ஜம்னாலால் பஜாஜ், ஜே.பி.கிருபளானி, மௌலானா அபுல்கலாம் ஆசாத் முதியவர்களுக்கு சுபாசு சந்திரபோசின் தீவிரவாதத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று மக்கள் மத்தியில் பரவச்செய்தது. பின் ஆங்கிலேயர்களின் அரசியல் திட்டத்தினை ஏற்க கூடாது என்று ஹரிபுரா காங்கிரசு மகாசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் சில காங்கிரசு தலைவர்கள் செயல்படுகிறார்கள் என்றும் ஆங்கிலேயர்கள் அந்த அரசியல் திட்டத்தில் சில திருத்தங்கள் செய்தால் காங்கிரசு அதனை ஏற்றுக் கொள்ளும் என்றும் பிரிட்டிசு  ஊடகங்கள் செய்திகளையும் அறிக்கைகளும் வெளியிட்டன.
போசு கீழ்காணும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
காங்கிரசு தலைவர்கள் ஆங்கிலேயர்களின் அரசியல் திட்டத்தைப் பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியும், செய்திகள் மான்செஸ்டர் கார்டியன் என்ற பத்திரிகையில் நான் பார்த்தேன். இந்த செய்திகளுக்கு திட்டவட்டமான ஒரு அத்தாட்சி எதுவும் கிடைக்காத வரைக்கும் நாம் அதை நம்பக்கூடாது, கவலைப்படவும் கூடாது. ஆனால் நாட்டுமக்களும், காங்கிரசு தொண்டர்களும் இது போன்ற செய்திகளை பார்த்துக் குழப்பமடையக் கூடாது என்பதற்காகவே இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். காங்கிரசு சில மாகாணங்களில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளதால் ஆங்கிலேய அரசுடன் சுமூகமாக இணைந்து செயல்படும் என்று யாரும் எண்ண வேண்டாம். காங்கிரசில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநில சுயாட்சிக்கு எதிரான பிரிட்டிசு அரசியல் திட்டத்தை யாரும் புகுத்த முடியாது. அப்படி முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடியும். ஒருவேலை அந்த முயற்சி வெற்றி பெற்றால் காங்கிரசு பிளவுபட நேரிடும்.
இந்திய வரலாற்றில் நெருக்கடிமிக்க இந்த நேரத்தில் காங்கிரசு கட்சியிலோ அல்லது அதைச் சார்ந்த மக்களிடத்திலோ சிறிதளவு பலவீனத்தைக் காட்டினாலும் இந்திய சுதந்திரத்திற்கு அது மிகப்பெரிய துரோகமாகக் கருதப்படும். தற்பொழுது நடைபெறும் சூழலில், நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒன்றுபட்டுப் பேசினால் பிரிட்டிசு அரசாங்கம் நமது சுதந்திரத்தினைத் தடுத்து நிறுத்த முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் கனவிலும் ஏற்கமுடியாத ஆங்கிலேயர்களின் அரசியல் திட்டம் யாரோ ஒரு காங்கிரசு தலைவரின் சமரச மனப்பான்மையால் அல்லது முயற்சியினால் வெற்றி பெற்றால், நான் காங்கிரசின் தலைவர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறுவேன். அப்போதுதான் என்னால் எந்த சமரசத்துக்கும் இடமின்றி தேசநலன் கருதி போராட முடியும். போசின் இந்த அறிக்கை நாடெங்கும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியது.
Studio/31.10.49,A22b Sardar Vallabhbhai Patel photograph on October 31, 1949, his 74th birthday.காங்கிரசின் தலைவர் பதவியில் உள்ள ஒருவர் வதந்திகளின் அடிப்படையில் இவ்வளவு கடுமையான அறிக்கையை வெளியிடுவதா என்று சில காங்கிரசு தலைவர்கள், காந்தியின் ஆதரவாளர்கள் அறிக்கையை வெளியிட்டனர். அவர்களில் சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கியமானவர். இதனைத் தொடர்ந்து 1938 சூலை 15ம் தேதி போசு மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டார். நான் சூலை 9ம் தேதி வெளியிட்ட அறிக்கை பொதுவான அறிக்கையே தவிர பத்திரிகையில் விவாதத்தில் ஈடுபடுவதற்காக அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். காங்கிரசுக் காரர்களையும் நாட்டின் மக்களையும் குழப்பக் கூடிய சூழ்ச்சி செய்து செய்திகளை ஆங்கிலேயர்கள் வெளியிடும் பொழுது, அதனை எதிர்த்து மறுத்து அறிக்கை நான் விடாவிட்டால் தலைவர் கடமையிலிருந்து தவறியவனாவேன். அறிக்கையில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினேன் என்றால் அதற்குக் காரணம் ஆங்கிலேயர்களின் அரசியல் திட்டத்தினை நான் கடுமையாக எதிர்ப்பதினால் ஆகும்.
ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு தரும் செயல்களில் ஈடுபட்டு, காங்கிரசுக்காரர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளமாட்டார்கள் என்று நம்புகிறேன். எழுச்சி கொண்ட இந்தியாவில் ஒன்றுபட்ட தேசிய கோரிக்கையை இன்னும் நீண்ட காலத்திற்கு பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தால் புறக்கணிக்க முடியாது என்ற நம்பிக்கையைப் பெற்று தங்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை தவிர்த்து உறுதியோடு நிற்கும்படி அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறே அனைவரும் ஓரணியில் திரண்டு நிற்பார்கள் என்றும் நம்புகிறேன். ஆனால் தலைவர் போசின் இந்த இரண்டாவது அறிக்கைக்கு பின்னும் காந்தியின் ஆதரவாளர்கள் போசை குறைகூறுவதை நிறுத்தவில்லை.
subaash19-3தேசமக்களும் குறிப்பாக இளைஞர்கள் இளம் தலைமுறையினர், இளமையும் எழுச்சியும் கொண்டவர்கள் தலைவர் போசை ஆதரித்தனர். வங்காளத்திலும், அஸ்ஸாமிலும், ஒரிஸாவிலும் குறிப்பாக தென் மாநிலமான தமிழ்நாட்டில் அதிகமான ஆதரவாளர்கள் போசை உறுதியாக ஆதரித்து நின்றனர். காங்கிரசு சில மாகாணங்களில் அரசாக செயல்பட்டதினால் சில பிரச்சினைகளும் தலைத்தூக்கின. இந்தியாவுக்கு சுதந்திரம் அடைந்தது போன்று ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த ஆரம்பித்தனர். அதில் முக்கியமான ஒன்று மொழிவாரிய மாநிலக்கோரிக்கையும் ஒன்று. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் கவனிக்கப்படவேண்டிய கோரிக்கையை மக்கள் காங்கிரசு அமைச்சரவை பெற்றதால் கோரினர். வடக்கே பெரும்பாலனோர் இந்தி பேசியதனால் அங்கு மொழிவாரிய மாநில கோரிக்கை எழவில்லை. தென் பகுதியில் வெவ்வேறு மொழிபேசும் மக்கள் இருந்ததினால் இங்கு தான் மொழிவாரி மாநில கோரிக்கை அதிகமாக தலைதூக்க ஆரம்பித்தது. சட்ட சபையிலும் குழப்பம் ஏற்பட்டது இதனால் இந்த மொழிவாரிப் பிரச்சினையை சரிசெய்யும் பொருட்டு காங்கிரசின் தலைவர் போசு காங்கிரசு காரியக் கமிட்டியைக் கூட்டி பிற்காலத்தில் மொழிவாரிய மாநிலங்கள் அமைப்பது குறித்து காங்கிரசு திட்டம் வகுக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றி சகல மொழியினருக்கும் நம்பிக்கையூட்டினார்.
இதுபோன்ற நாட்டின் முக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்ள முற்போக்கு சிந்தனையுடன் காங்கிரசில் அன்று இருந்த தலைவர்கள் செயல்படவில்லை என்றே எண்ண வேண்டும். ஏனெனில் மொழிவாரி மாநில பிரச்சனைகள் தோன்றிய உடன் அதனைத் தடுப்பதற்கு என்ன தேவை என்று சிந்தித்து செயல்பட்டவர் போசு. 1920 லிருந்து ஆரம்பித்து வந்த இந்த மொழிவாரி மக்கள் பிரச்சினைக்கு அப்போது இருந்த காங்கிரசு கட்சியினால் தீர்வு காண இயலவில்லை. இப்பிரச்சினையை அறிந்த போசு, காங்கிரசு காரியகமிட்டியில் அது குறித்து சிந்தித்து தீர்மானம் ஒன்றை செயல்படுத்தினார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவான செயல்திட்டம்தான் இந்தியாவில் நேருவின் அரசாங்கத்தில் JVP குழுவாக அமைக்கப்பட்டது. அது J ஜவஹர்லால் நேரு, V வல்லபாய் பட்டேல், P பட்டாபி சீத்தாராமய்யா இக்குழுவின் மூலம் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது.

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 17


subash 16-2அன்பார்ந்த திரு.ஜின்னா,காங்கிரசு காரியக் கமிட்டி சூலை, 9 ஆம் தேதி கூடியபோது முஸ்லீம் லீக் செயற்குழுவின் மூன்று தீர்மானங்களையும் ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலித்தது. தங்கள் முதல் தீர்மானம் முஸ்லீம் லீக்கின் அந்தஸ்தை நிர்ணயிக்கிறது. காங்கிரசு கட்சி, முஸ்லீம் மக்களின் ஏகப்பிரதிநிதியாக முஸ்லீம் லீக்கை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறது. முஸ்லீம் லீக் மட்டும்தான் முஸ்லீம் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று அங்கீகரிப்பதில் காங்கிரசு கட்சிக்குப் பல சிரமங்கள் உள்ளன. முஸ்லீம் லீக்குக்கு கட்டுப்படாத பல முஸ்லீம் ஸ்தாபனங்கள் இந்த நாட்டில் செயல்பட்டு வருகின்றன, முஸ்லீம் லீக்கை முஸ்லீம் மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று காங்கிரசு காரியக் கமிட்டியை அவை ஏற்கனவே எச்சரித்துள்ளன. மேலும் காங்கிரசு கட்சியிலேயே பல முஸ்லீம் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.
இந்த நாட்டில் அவர்களுக்குள்ள மதிப்பையும், செல்வாக்கையும் குறைத்து மதிப்பிட முடியாது, அடுத்து எல்லைப்புற மாகாணமும் உள்ளது, எல்லைப்புற மாகாணத்தில் முழுக்க முழுக்க முஸ்லீம் மக்களே வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் காங்கிரசையே ஆதரிக்கின்றனர். அனைவருக்கும் தெரிந்த இந்த உண்மைகளின் அடிப்படையில் பார்த்தால் முஸ்லீம்களின் ஏகப் பிரதிநிதியாக முஸ்லீம் லீக்கை அங்கீகரிக்க காங்கிரசால் முடியாது என்பது மட்டுமல்ல, அது பொருத்தமற்றதாகவும் இருக்கும் என்று காங்கிரசு காரியக்கமிட்டி கருதுகிறது. மேலும் ஒரு ஸ்தாபனத்தின் பலமோ, மதிப்போ அதை நாமே நிர்ணயிப்பதால் அதற்கு வருவதில்லை. ஆந்த ஸ்தாபனம் தன்னை எதற்காக அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்கிறதோ அதன் மூலம் தான் பெருமையையும், மதிப்பையும் பெற முடியும், ஆகவே லீக் செயற்குழு, காங்கிரசால் ஏற்க முடியாத ஒன்றை ஏற்கும்படி வற்புறுத்தாது என்று காங்கிரசு செயற்குழு நம்புகிறது.
காங்கிரசு கட்சியைப் பொறுத்தவரை இந்து-முஸ்லீம் பிரச்சினையைப் பேசித் தீர்க்க, முஸ்லீம் லீக்கோடு நட்பு பூர்வமான உறவை ஏற்படுத்தவும், வளர்க்கவும் விரும்புகின்றது. காங்கிரசு கட்சியின் கோரிக்கையையும் இந்த சமயத்தில் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது. காங்கிரசில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்துக்களாக இருந்தாலும் இந்த அமைப்பில் முஸ்லீம், கிருஸ்தவர், பார்ஸிகள், சீக்கியர்கள் முதலியவர்கள் உள்ளனர்கள் மற்றும் இவர்கள் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி இந்தியாவை தாயகமாகக் கொண்டு செயல்படுகிறவர்களைக் கொண்ட ஸ்தாபனமாகக் காங்கிரசு நடந்து வருவதுதான் காங்கிரசின் பாரம்பரியமாகும். மற்றும் இந்த காங்கிரசில் தொடக்க காலத்தில் பல முஸ்லீம், தலைவர்களாகவும் மற்றும் பிற முக்கிய பதவிகளிலும் இருந்து காங்கிரசு மற்றும் இந்த தேசத்தின் மக்களின் முழு நம்பிக்கையையும் பெற்று செயல்பட்டிருக்கின்றார்கள். காங்கிரசு மதச்சார்பற்று செயல்படுகிறது, இதில் எந்த மதத்தினரும் காங்கிரசில் நம்பிக்கை வைத்தவர்கள் உறுப்பினர்களாக சேரலாம், உயர் பதவிகளையும் அடையலாம். எனவே எந்த கோணத்தில் பார்த்தாலும் காங்கிரசு ஒரு வகுப்புவாத ஸ்தாபனமே அல்ல. மாறாக வேறு எந்த வகுப்புவாத ஸ்தாபனம் தேசத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயல்பாடுகளில் ஈடுபடும்போது அத்தகைய செயல்களில் தலையிட்டு அவற்றை தேசத்தின் நன்மைக்காக தடுத்து நிறுத்த காங்கிரசு போராடி வருகிறது. எனவே முஸ்லீம் லீக் அதன் பிடிவாதத்தை விட்டுவிட்டு காங்கிரசு கட்சியோடு ஒத்துழைத்து இந்து-முஸ்லீம் வகுப்புவாத பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். இவ்வாறு நடந்தால் காங்கிரசு மிகவும் மகிழ்ச்சி அடையும் என்றும் காரியக்கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது. முஸ்லீம் லீக்கின் இரண்டாவது தீர்மானத்தையும் காங்கிரசு ஏற்றுக் கொள்ள இயலாது என்று காரியக் கமிட்டி முடிவு செய்கிறது.
மூன்றாவது தீர்மானத்தின் மூலம் முஸ்லீம் லீக்கை காங்கிரசு செயற்குழுவால் அதைச் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லீம் லீக்கைப் பொறுத்தவரை அது ஒரு வகுப்புவாத ஸ்தாபனம் என்பது தெளிவாக அதன் நடவடிக்கைகளின் மூலம் தெரிகிறது. அது முஸ்லீம்களின் நலன்களுக்காக மட்டுமே சேவை செய்வதாகவும் முஸ்லீம் இனத்தவரை மட்டுமே தன் கட்சியில் சேர்த்துக் கொள்வதாகவும் தோன்றுகின்றது. எனவே இதுநாள்வரை முஸ்லீம் லீக், காங்கிரசு கட்சியோடு இந்து-முஸ்லீம் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசி ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது என்றுதான் கருதுகிறதே தவிர அனைத்துச் சிறுபான்மை சமூகங்களைப் பற்றியும் பேச விரும்புகிறது என்று கருதப்படவே இல்லை. எனவே காங்கிரசைப் பொறுத்தவரை இதர சிறுபான்மைச் சமூகங்கள் காங்கிரசால் பாதிக்கப்பட்டதாக நினைத்தால் உடனடியாக அந்தச் சமூகங்களின் பிரதி நிதிகளோடு பேசி அவற்றின் குறைகளைத் தீர்க்க உறுதி கொண்டுள்ளது என்பதை காங்கிரசு காரியக் கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது.
இதுவரை நான் குறிப்பிட்டதிலிருந்து எங்கள் நிலையை நீங்கள் புரிந்து கொண்டு பேச்சுவார்த்தையை மேலும் தொடரவும், பிரச்சினைக்கு முடிவு காணவும் முன்வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் நமக்கிடையே நடந்த முந்தைய கடிதப் போக்குவரத்தை ஏற்கனவே பத்திரிகைகளுக்குக் கொடுத்துப் பிரசுரிக்க ஏற்பாடு செய்தது போல இக்கடிதத்தையும் பத்திரிகைகளில் வெளியிட்டு பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவது அறிவுடைமையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். நீங்கள் ஒப்புக் கொண்டால் இக்கடிதத்தைப் பத்திரிக்கைகளுக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
தங்கள் அன்புள்ள
சுபாசு சந்திர போசு
subash-14-2இதுபோன்ற பல கடித பரிமாற்றம் நடத்திய காங்கிரசு கட்சி, எல்லா வழிகளிலும் ஜின்னாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைத்து வரும்படியும் வேண்டுகோள் விடுத்தும், ஜின்னாவின் முரண்பாடான கருத்துகளின் மூலம் இந்து-முஸ்லீம் பிரச்சினைகளில் காங்கிரசு கட்சிக்கும், முஸ்லீம் லீக் கட்சிக்கும் ஒரு சுமூகமான ஒப்பந்தம் ஏற்படவே இல்லை. காங்கிரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. ஜின்னாவின் பிடிவாதத்தினால் சுபாசு தொழில் கொள்கையிலும், பல திட்டங்களையும் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அதாவது தேசிய ஆராய்ச்சி கவுன்சில் ஒன்றை அமைத்து, ஒருங்கிணைக்கப்பட்ட தொழில் மயமாக்கும் முறையையும், திட்டத்தினையும் வகுக்கும். மற்றும் காங்கிரசு கட்சியானது சுதந்திரத்திற்கு மட்டும் போராடவில்லை இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு நமது நாட்டில் பல முன்னேற்றங்களுக்கும், சுதந்திர இந்தியாவில் அமையவிருக்கும் அரசாங்கம், மற்றும்பல துறைகளை முன்னேற்ற செயல்பட வேண்டும்.
நமக்கு விஞ்ஞானத்தின் உதவியும் விஞ்ஞானிகளின் உதவியும் கண்டிப்பாக தேவைப்படும். இது தொழில் புரட்சிக்காலம் எனவே, தொழில் புரட்சியிலிருந்து உலகில் எந்த நாடும் தப்பிவிட முடியாது. பிரிட்டனில் ஏற்பட்டது போலவே இந்தியாவிலும் தொழில்புரட்சி படிப்படியாக நமது நாட்டில் ஏற்பட வேண்டும். ஆனால் நமது நாட்டிற்கு சோவியத் ரசியாவைப் போன்று பாய்ந்து செல்லும் முன்னேற்றமே தேவைப்படும் என்று நான் கருதுகிறேன் மற்றும் தாய் தொழில்கள் என்று சொல்லக்கூடிய மின்சார சப்ளை உலோக உற்பத்தி, எந்திர சாதன உற்பத்தி, அத்தியாவசிய ரசாயன பொருள் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் செய்தித் தொடர்புச் சாதன உற்பத்தி, ஆகியவற்றுக்கு தேசிய அளவில் திட்டமிடுவதும், தேசிய ஆராய்ச்சி கவுன்சில் ஒன்றை அமைத்து விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சிகளை நடத்தி அதன் அடிப்படையில் தொழிற்புரட்சியை ஏற்படுத்துவதுதான் நமக்கு தேவை. மற்றும் தொழிற்புரட்சிக்கு அடிப்படைத் தேவைகளான தொழில்நுட்ப ஆராய்ச்சி, பொறியியல் நுட்பக் கல்வி ஆகியவற்றுக்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும். தொழில் நுட்பக் கல்வியைப் பெறுவதில் ஜப்பானிடம் நட்பு கொண்டு, பின்பற்றி ஆராய்ச்சியாளர்களின் உதவியோடு தொழிற்புரட்சியை நடத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்.

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 16

போசு காங்கிரசு தலைமைப் பதவியில் எப்படிச் செயல்பட்டார் என்பதை பட்டாபி சீத்தாராமையா கூறியது:
Portrait of Dr. Pattabi Sitaramayya.காங்கிரசு தலைவர்கள் பெரும்பாலும் அதிகமாக பேச வேண்டியிருக்கும், அவர்கள் மௌனமாக இருக்கவே முடியாது, அவர்கள் பேச வேண்டிய அவசியம் இருந்து கொண்டிருக்கும், ஆனால் போசுக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் மனம் பெற்றிருந்த உறுதியினை உடல் பெறவில்லை. அவரால் பல தடவை காரிய கமிட்டிக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசமுடியவில்லை. அவர் பேசிய கூட்டங்களை எண்ணிக்கையில் கூறிவிடலாம். ஆனால் கூட போசு உடலை, வருத்திய நோயைப் பற்றிக் கவலையே இல்லாமல் பேசுவதையும், கூட்டங்களில் கலந்து கொள்வதையும், செய்து கொண்டு தன் பொறுப்புகளை திறம்படவே நிர்வகித்து வந்தார். இந்தியாவில் பல மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்தார். பலவற்றைப்பற்றியும் திறமையுடனும் தனக்கே உரிய வழியிலும் பேசினார்.
1938- செப்டம்பரில் டெல்லியில் நடக்க இருந்த அகில இந்திய காங்கிரசு கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு கிளம்பி வரும் வழியில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கான்பூரில் சற்றுத் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு பின் அகில இந்திய காங்கிரசு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்பொழுது பாதியில் வந்து கலந்து கொண்டார். மிகவும் பொறுமையாகவும் தமக்கு ஆதரவு தேடாமலும், தாம் நினைப்பதைச் சாமர்த்தியமாகச் சொல்வதில் வல்லவர் போசு. அவர் யாருடனும் விவாதத்தில் ஈடுபட்டதில்லை. தனக்கு பிடிக்காத கருத்துகளுக்கு கூட, மற்றவர்கள் பெருவாரியானவர்கள் கூறும் கருத்துக்கு மறுப்பேதும் கூறாமல் மதிப்புக்கொடுத்து நடந்து கொண்டார். போசு காங்கிரசு தலைவராக இருந்தபொழுது கட்டாக் நகரில் தம் தந்தையார் கட்டியிருந்த ஒரு பெரிய வீட்டைக் காங்கிரசு கட்சிக்கே அர்ப்பணித்தார். 1938 மே மாதம் 10ம் தேதி பம்பாய் மாநகராட்சி சார்பில் போசுக்கு ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பில் கலந்து கொண்டு பேசுகையில் தாம் ஒரு காங்கிரசு தலைவராக இதில் பங்குகொள்ளவில்லை.
ஒரு சாதாரணமான காங்கிரசு தொண்டனாகவே பங்கேற்பதாகவும் மற்றும் தாம் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் மேயராக இருந்தபோது கல்கத்தா மாநகராட்சி நிர்வாக அதிகாரியாகவும் பின்னர் மாநகராட்சி மேயராகவும் தாம் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி விவரித்து விட்டு, ஏழை எளிய மக்களுக்குத் தேவையான குடிதண்ணீர், சுகாதார வசதி, வீட்டு வசதி ஆகியவற்றை பூர்த்தி செய்வதே மாநகராட்சியின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்துவதாகவும் பேசினார். வியன்னாவில் தாம் இருந்தபோது வியன்னா நகர மாநகராட்சி செயல்படும் விதத்தை நகர மேயரோடு தொடர்பு கொண்டு அறிந்த விவரங்களையும் லண்டனில் உள்ள பர்மிங்காம் நகரசபை நகராட்சி வங்கி ஒன்றையே நடத்தி வருவதையும் அரசியலின் அரிச்சுவடியே நகர சபைகளில்தான் தொடங்குகிறது என்று பிரிஸ்ஹெரால்ட் லாஸ்கி முதலிய ஆங்கிலேய அறிஞர்கள் குறிப்பிட்டிருப்பதையும் பண்டைய இந்தியாவில் இருந்த மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நகரங்கள் அடைந்திருந்த முன்னேற்றத்தையும் ஒரு கல்லூரிப் பேராசிரியரைப் போல விளக்கமாக எடுத்துரைத்தார்.
subash 16-2அந்த வரவேற்பில் பங்குகொண்ட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முன்னர் மாநகராட்சி வரவேற்பில் கலந்துகொண்ட எந்த தலைவரும் இதுபோன்று உரையாற்றியது இல்லை என்றும், நகரசபைப் பணி என்பது எவ்வளவு உயர்ந்த பணி என்பதைப் புரிய வைத்ததற்காக போசுக்கு பம்பாய் மேயர் நன்றி தெரிவித்தார். போசு உடல் நலம் சரிவரத் தேறாத நிலையிலும் இரவும் பகலும் காங்கிரசு கட்சிப் பணிகளிலேயே தம் முழுகவனத்தையும் செலுத்தி வந்தார். போசு தலைவராக இருந்த சமயத்தில் இந்து முஸ்லீம் இனவேறுபாடு பிரச்சனைகள் அதிகமாக இருந்தது. எனவே இந்து முஸ்லீம் பிரச்சினையைப் பற்றி முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவுடன் பேசித் தீர்க்க முயன்றார் தலைவர் போசு.
அதில் போசுக்கும் ஜின்னாவுக்கும் இடையில் நடந்த பல கடிதம் பரிமாற்றங்களில் சில செய்திகள்.
அன்பார்ந்த திரு.போசு,
இத்துடன் அகில இந்திய முஸ்லீம் லீக் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஏகமனதான தீர்மானத்தின் நகல்களை அனுப்பியிருக்கிறேன். கட்சியின் சார்பில் மே14,15 தேதிகளில் நீங்கள் அனுப்பிய கடிதத்திற்கு இதுவே என் பதிலாகும்.
தங்கள் அன்புள்ள
எம்.ஏ.ஜின்னா
தீர்மானம் 1:
அகில இந்திய முஸ்லீம் லீக் செயற்குழு காங்கிரசு தலைவர் சுபாசு சந்திரபோசு, முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவிடம் கொடுத்த குறிப்புரையையும், கடிதத்ததையும் பரிசீலித்து, முஸ்லீம் லீக்கை இந்தியாவிலுள்ள முஸ்லீம்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்காதவரைக்கும் காங்கிரசு கட்சியோடு இந்து-முஸ்லீம் பிரச்சனை பற்றிப் பேசவே ஒப்பந்தம் செய்து கொள்ளவோ இயலாது என்று இந்த செயற்குழு கருதுகிறது.
தீர்மானம் 2:
இந்த செயற்குழு திரு.காந்தி மே மாதம் 22ம் தேதி எழுதிய கடிதத்தையும் பரிசீலித்தது. காங்கிரசு கட்சி, முஸ்லீம் லீக்கோடு பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நியமிக்கும் குழுவில் ஒரு முஸ்லீம் பிரதிநிதியைச் சேர்க்க விரும்புவதை ஏற்க இயலாது என்று கருதுகிறது.
தீர்மானம் 3:
இந்த செயற்குழு இந்தியாவிலுள்ள முஸ்லீம்களைத் தவிர, இதர சிறுபான்மை இனங்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கவும் அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை வழங்கவும், அவர்களது நலன்களைப் பேணவும், அவர்களது பிரதிநிதிகளோடு உரிய சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்தவும், தயாராக இருக்கிறது என்ற முஸ்லீம் லீக்கின் அறிவிக்கப்பட்ட கொள்கையை மீண்டும் தெளிவுபடுத்துகிறது.
subash 15-3ஜின்னா அனுப்பிய கடிதம் மற்றும் அத்துடன் இணைத்திருந்த தீர்மானங்களும் கிடைத்தது என்று ஜுன் மாதம் 21ம் தேதி ஜின்னாவுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். பின்னர் 27ம் தேதி அன்று போசு ஜின்னாவுக்கு அனுப்பிய கடிதத்தில்,
அன்பார்ந்த திரு.ஜின்னா
6ம் தேதியிட்ட கடிதமும், தீர்மான நகல்களும் கல்கத்தாவுக்கு குறிப்பிட்ட நாளில் வந்து சேர்ந்தன. ஆனால் நான் சுற்றுப் பயணத்தில் இருந்ததால் ஜூன் மாதம் 26ம் தேதி கல்கத்தா வந்து சேர்ந்த பின்னரே அவற்றைக் காண நேர்ந்தது. நான் கொடுத்த தந்தி உங்களுக்கு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். காங்கிரசு காரியக் கமிட்டி, ஜூலை மாதம் 9ம் தேதி கல்கத்தாவில் கூடுகிறது. உங்கள் கடிதமும் செயற்குழுத் தீர்மானங்களும் காங்கிரசு செயற்குழவில் பரிசீலிக்கப்படும். கூட்டம் முடிந்ததும் அதில் எடுக்கப்படும் முடிவுகளை உடனுக்குடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
தங்கள் அன்புள்ள
சுபாசு சந்திரபோசு
அதன் பின்னர் காங்கிரசு செயற்குழு முடிவை விளக்கி சுபாசு ஜின்னாவுக்கு அனுப்பிய கடிதம் வருமாறு.

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 15

இந்திய தேசிய காங்கிரசு தலைவராக 41 வயதில், இதற்கு முன் தலைவராக இருந்த நேருவிடம் இருந்து தலைமையை, குசராத் மாநிலத்தில் தபதி நதிக்கரையில் அமைந்திருந்த அரிபுரா மாநாட்டில் போசு ஆற்றிய தலைமை உரையினை சிறிது காண்போம்.
subash 15-3மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே! தோழர்களே இந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு மகாசபைக்கு என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நீங்கள் அளித்துள்ள பதவியை நான் நன்றியோடு ஏற்றுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் பெருமைக்குரிய தலைவர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தப் பதவியை, மிகுந்த அச்சத்தோடும், பொறுப்புணர்வோடும்தான் நான் பெற்றுக்கொள்கிறேன். மனித குல வரலாற்றை ஒரு முறை பார்த்தோமேயானால் ஏகாதிபத்தியர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் தான் முதலில் நம் கவனத்தைக் கவரும். கிழக்கிலும் மேற்கிலும் பல பேரரசுகள் வேகமாக விரிவுபடுத்தப்பட்டு, பின்னர் அதே வேகத்தில் சுருங்கியும், அழிந்தும் போயிருக்கின்றன. அதுதான் இயற்கையின் விதி. பண்டைக் காலத்தின் ரோம பேரரசாகட்டும், நவீன காலத்தின் துருக்கி, ஆஸ்டிரியா பேரரசு ஆகட்டும், இந்த இயற்கை விதியின் குறிப்பிடத்தக்க உதாரணங்களாகும். இந்திய தேசத்தின் மௌரிய பேரரசும், குப்த பேரரசும், மொகாலய பேரரசும் கூட அதற்கு விதி விலக்கல்ல. சரித்திரத்தின் தவிர்க்க முடியாத விதி காட்டுகிற இந்த உண்மைகளைப் பார்த்த பின்னரும், பிரிட்டிசு சாம்ராச்சியத்திற்கு மட்டும் வேறு வகையான முடிவு காத்திருப்பதாக யாராவது சொல்ல முடியுமா.
subash 15-2எதிர்காலத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இப்போதே விரிவாகச் சொல்வதும், தேசப் புனருத்தாரணத்தை சொல்லுவதும், சற்று அதிகப்பிரசங்கத்தனமாகக் கருதப்படலாம் என்றாலும் விடுதலைப்பெற்ற இந்தியாவின் புனர்நிர்மாணப் பணிகள் எந்த அடிப்படையில் நடைபெறும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது அவசியம் என்றே எனக்குத் தோன்றுகிறது. நம்மை எதிர்நோக்கியுள்ள முக்கியமான தேசியப்பிரச்சனைகளான வறுமையையும், கல்வியறிவின்மையையும், பிணிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கு உற்பத்தியையும், விநியோகத்தையும் விஞ்ஞான ரீதியில் நவீனப்படுத்தி சோசலிச வழியில் நெறிப்படுத்துவதுதான் மார்க்கம் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. நம்முடைய தேசிய அரசாங்கத்தின் முதல் பெரும் பணி ஒரு திட்டக்குழுவை நியமித்துப் புனர்நிர்மாணத்திற்குத் தேவையான ஒரு முழுமையான திட்டத்தை வகுக்கச் செய்வது தான். அந்தத் திட்டம் இரண்டு பகுதிகளாக இருக்க வேண்டும். முதல் பகுதி உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர காரியங்களையும், இரண்டாவது பகுதி தொடர்ச்சியாக நிறைவேற்ற வேண்டிய நீண்ட கால திட்டங்களையும் கொண்டதாக இருக்கும்.
subash 15-6பொதுவான ஒரு கல்வித் திட்டத்தின் மூலம் நாடு முழுவதையும் தேசிய உணர்ச்சியின் அடிப்படையில் நெருங்கிவரச் செய்ய வேண்டும். பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்க விவசாய முன்னேற்றம் மட்டும் போதாது ஒருங்கிணைக்கப்பட்டத் தொழில் வளர்ச்சித் திட்டங்களும் அவசியமாகும். புதிய தொழில் திட்டம் அரசாங்கத்திற்குச் சொந்தமாகவும், கட்டுப்பட்டதாகும் இருப்பது அவசியமாகும். கிராமத் தொழில்கள் ஏற்கனவே நலிந்து கிடக்கின்றன, அவற்றில் எதையெல்லாம் புதுப்பிக்க முடியும், நவீன தொழில் திட்டங்களை எங்கெல்லாம் புகுத்த முடியும் என்பதையும் தொழில் புரட்சிக்குப் பிந்திய கால வளர்ச்சியை நம் நாட்டிற்குப் பொருத்தமான முறையில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் நம்முடைய திட்டக்குழு மிகக் கவனமாக ஆராய்ந்து திட்டம் வகுக்க வேண்டும் என்று கூறினார் நேதாஜி.
நேதாஜியின் 1938ல் அரிபுரா மாநாட்டில், பிறகு மாநில காங்கிரசு, அன்றைய அரசுகள் சேர்ந்து தந்த 50,000 ரூபாயுடன் தேசியதிட்டக் குழு ஒன்று நேரு தலைமையில் அமைக்கப்பட்டது. 1940 மார்ச்சு மாதத்திற்குள் அக்குழு இந்திய தேசிய பொருளாதார நிலையை ஆராய்ந்து ஒரு திட்டத்தை வகுத்துத் தர வேண்டும் என்று அந்தக்குழு கோரப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டின் வளர்ச்சிக்காக 1950ம் ஆண்டில் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நேருவும், உறுப்பினர்களாக மாநில முதல்வர்களும் நியமிக்கப்பட்டனர். இது இன்று வரை வெற்றிகரமாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு 1938ல் ஹரிபுராவில் அடித்தளம் அமைத்தவர் நேதாஜி.
கல்வி, சுகாதாரம், சிறைச்சாலை சீர்திருத்தங்கள், தொழில், நீர்ப்பாசனம், தொழிலாளர் நலன், நிலச் சீர்திருத்தங்கள், மதுவிலக்கு போன்ற திட்டங்களை வகுத்து அமல்படுத்த முயற்சிக்க வேண்டும். முடிந்தவரை அந்தத் திட்டங்களை அனைத்தும் இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்வதும் அவசியமாகும் என்றார்.
தனிப்பட்ட மனிதர்களின் தொடர்புகளும், பத்திரிக்கை, திரைப்படங்கள், பொருட்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் செய்யும் பிரச்சாரங்களும் நமக்கு பெருமளவிற்கு உதவக்கூடும். அயல் நாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களும் இந்தப் பணிக்கு உதவக்கூடும். அவர்களோடு இந்திய தேசிய காங்கிரசு நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய மாணவர்களும், அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்தியாவின் அதிகாரப் பூர்வமற்ற தூதுவர்களாகச் செயல்பட முடியும். இன்றைய நிலைமையும் அப்படிப்பட்டதுதான். வெளிநாடுகளில் நம்பிக்கைக்கு உகந்த நண்பர்களை இந்திய தேசிய காங்கிரசு தன் பிரதிநிதிகளாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மூலம் சகல துறைகளிலும் ஒத்துழைப்பும், அனுதாபமும் திரள வழி வகுக்க வேண்டும். அயல்நாட்டு இந்தியர்களின் பிரச்சனைகளையும், சிரமங்களையும் தீர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது அண்டை நாடான ஈரான், ஆப்கானிஸ்தான், நேபாளம், சீனா, பர்மா, சயாம், மலேயா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றோடு நெருக்கமான கலாச்சாரத் தொடர்புகளை வகுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பர்மாவோடும், இலங்கையோடும் மிக நெருங்கிய தொடர்பையும், கலாச்சாரத்தையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
subash 15-1நேதாஜி போன்று ஒரு முற்போக்குத் தலைவர் இந்தியாவில் அவருக்குப் பின் தோன்றவில்லை, இனியும் தோன்றுவார்களா? என்பதும் சந்தேகமே?. அப்போதே நமது அண்டை நாடுகளுடன் நாம் இணக்கமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக இலங்கையுடன் உறவை நேதாஜி கூறியதைப்போல் அவருக்குப் பின் தோன்றிய தலைவர்கள் சிந்தித்திருந்தால் ஒரு சிறு நாடு சீனாவுடன் உறவு கொண்டு இன்று நம்மை மிரட்ட இயலாது. நம் இனம் அழிவைக் கண்டு நம் கையாலாகாதத்தனமாக ஐ.நாவின் தீர்மானத்தை ஆதரிக்காமல் வெட்கப்படும் நாடாக நாம் இன்று இருந்திருக்க மாட்டோம். மீனவர்கள் பிரச்சனையும் இருந்திருக்காது.
நம்முடைய போராட்டம் பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது மட்டும் அல்ல, உலக ஏகாதிபத்தியத்தையே எதிர்ப்பது ஆகும். உலக ஏகாதிபத்தியத்தின் அடிக்கல் பிரிட்டிசு ஏகாதிபத்தியம் ஆகவே நாம் இந்தியாவுக்காக மட்டும் போராடவில்லை, மனிதகுல முழுமைக்கும் சேர்த்தே போராடுகிறோம். இந்தியா விடுதலை பெற்றால், மனிதகுலம் முழுவதும் காப்பாற்றப்பட்டதாக அர்த்தம் வந்தே மாதரம்.

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 14


subash-14-21938 சனவரி இறுதியில் கல்கத்தா வந்து சேர்ந்தார் போசு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசியலில் நேரடியாகப் பங்கேற்க முடிவு எடுத்திருந்தார். இந்தமுறை அவருக்குப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்கத்தா மேயராக இருந்தபோது அவர் ஏற்படுத்திய ஆரோக்கியமான மாற்றங்களை யாரும் மறந்துவிடவில்லை. போசுவிற்குப் பிறகு, அப்படி ஒரு தலைவர் அவர்களுக்குக் கிடைக்கவும் இல்லை. சுறுசுறுப்புடன் தனது பணிகளை ஆரம்பித்தார் போசு. 51வது காங்கிரசு மகாசபை ஹரிபுராவில் கூடுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் வாசிப்பதற்கு ஒரு நீண்ட உரையைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறோம். அவற்றை எவ்வாறு செயல்படுத்தப்போகிறோம் உள்ளிட்ட முக்கிய சங்கதிகள் அனைத்தும் இந்த உரையில் இடம்பெற்றிருக்க வேண்டும். அதிகநேரம் பிடிக்கும் வேலை இது. ஒரு குழுவாக அமர்ந்து பேசி விவாதித்து, திட்டமிட்டு ஒவ்வொன்றாக பட்டியலிட்டால் கூட சில நாட்கள் பிடிக்கும் ஆனால் போசுவிற்கு அதற்கெல்லாம் அவகாசம் இல்லை, அவசியமும் இல்லை ஒவ்வொரு நிமிடமும் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தவர், காங்கிரசு     என்னசெய்ய வேண்டும், காங்கிரசு தலைமை என்ன செய்ய வேண்டும் போன்ற அத்தனை விடயங்களும் அவருக்கு அத்துப்படி.
படுக்கைஅறைக்குச் சென்று கதவைச் சாத்திவிட்டு ஒரு இரவில் பக்கம் பக்கமாக எழுதத்தொடங்கினார். மறுநாள் வீங்கிப்போன முகத்துடன் கதவைத் திறந்தார். உதவியாளர் ஓடிவந்தார். உடனடியாக சரத் சந்திராவிடம் ஒப்படையுங்கள் டைப் செய்து முடிந்தவுடன் நேராக ஹரிபுராவுக்குக் கொண்டு வந்துவிடுங்கள் என்றார் போசு.
உதவியாளர்: நீங்கள் ஒருமுறை பார்க்க வேண்டுமா?
போசு: அவசியமில்லை.
ஹரிபுராவில் போசுவிற்கு அமோகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 51வது மாநாடு என்பதைக் குறிக்கும் வகையில் 51 காளைகளைக் கொண்ட மாபெரும் ரதம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ரதத்தில்தான் போசை அமரவைத்து மேடைக்குக் கொண்டு சென்றனர்.
திரண்டிருந்த கூட்டத்தைக் கண்டார் போசு. எத்தனைப்பெரிய கூட்டம் எவ்வளவு உற்சாகம். இந்த சக்தியை மட்டும் சரியான முறையில் ஒன்றுதிரட்ட முடிந்தால் பிரிட்டன் எம்மாத்திரம்.
தனது உரையைத் தொடங்கினார் போசு. மனித குலத்தின் இருப்பை, உள்ளது உள்ளபடி படம் பிடிப்பதாக அமைந்தது அந்த உரை. எத்தனையோ பெரிய பெரிய அரசாங்கங்களும், நாகரீகங்களும் இருந்த இடம் தெரியாமல் சிதறிப்போனதைச் சாட்சியங்களோடு முன்வைத்தார்.
subash-14-1பிரிட்டனின் அசுரசக்திக்குக் காரணம் பல நாடுகளைப் பிரிட்டன் அடிமைப்படுத்தி வைத்திருந்ததுதான் என்று லெனின் கூறியிருப்பதை நினைவுபடுத்தினார். பிரிட்டன் ஒரு மாபெரும் சக்தி, அவர்களை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்னும் பழமைவாதக் கருத்தைத் தகர்த்து எறிந்தார். பிரிட்டன்தான் உலகத்தின் தலைமை என்பது பொய், பல இடங்களில் பிரிட்டன் விழி பிதுங்கி நிற்கிறது. அயர்லாந்தை எடுத்துக்கொள்ளுங்கள், பாலஸ்தீனத்தை எடுத்துக்கொள்ளுங்கள், எகிப்து, ஈராக் இரு நாடுகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். இத்தாலியும், ஜப்பானும் பிரிட்டனை மும்முரமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளையும் விட்டுவிடுங்கள். ரசியா ஒன்றே போதும் ரசியா என்ற பேரைக் கேட்டாலே ஏகாதிபத்திய நாடுகள் கலங்கி நிற்கின்றன. உலக நாடுகள் அனைத்தும் சுறுசுறுப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. தன் தொண்டையை செருமிக்கொண்டு இறுதி வாக்கியத்தைப் பேசி முடித்தார் போசு. பிரிட்டனை நாம் சிதறடிக்க வேண்டும், பிரிட்டன் பலத்தை வீழ்த்த வேண்டும் அப்போதுதான் இந்தியா விடுவிக்கப்படும். இந்தியா மட்டுமல்ல இந்தியாவைப் போலவே அடிமைப்பட்டிருக்கும் பலநாடுகளுக்கும் அப்போதுதான் விடுதலை கிடைக்கும். காங்கிரசு கட்சி உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் இவைதான் என்று பட்டியலிட்டார்.
  1. தன்னார்வலர்களை ஊக்குவிக்க வேண்டும், இவர்களது உதவிகொண்டு மக்கள் சக்தியை ஒன்றுபடுத்த வேண்டும்.
  2. சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை நிர்வகிப்பதற்குத் தேவையான பயிற்சிகளை இப்போதே ஆரம்பித்துவிட வேண்டும். பொறுப்புமிக்க இளைஞர்களை இப்போதே கண்டுபிடித்து அவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளித்து தலைமைப் பண்புகளை வளர்த்திட வேண்டும்.
  3. தொழிற்சங்கங்களும், விவசாயிகள் நல அமைப்புகளும் உருவாக்க வேண்டும்.
  4. கட்சிக்குள் உள்ள இடதுசாரி சிந்தனைவாதிகளை ஒரே அணியில் குவிக்க வேண்டும். அவர்கள் சோசலிசப் பாதையை ஏற்க வேண்டும்.
  5. பிரத்யேக வெளியுறவுத் துறையை அமைக்க வேண்டும்.
  6. பிற நாடுகளுடன் சுமூகமான தொடர்புகள் இருக்க வேண்டும். குறிப்பாக ஆப்கானிஸ்தான், நேபாளம், சீனா, பர்மா, சிலோன், சியாம், மலாய் பகுதிகள்.
போசு பேசி முடித்ததும் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அனைவருக்கும் வண்டி வண்டியாகச் சந்தேகங்கள்.
கேள்வி: பிரிட்டனை நிச்சயம் நாம் வீழ்த்திவிடுவோமா?
பதில்: நிச்சயமாக நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து அவர்களை விரட்டப்போகிறோம்.
கேள்வி: சோசலிசம் பற்றி பேசினீர்கள் அது நமக்குத் தேவையா?
பதில்: ஏழ்மை ஒழிய வேண்டும், படிப்பறிவு பெருக வேண்டும் என்றால் சோசலிசம் தேவை, சோசலிசம் இல்லாமல் சமூக பொருளாதார, அறிவியல் வளர்ச்சி இல்லை.
கேள்வி: காங்கிரசின் உடனடி நடவடிக்கை என்னவாக இருக்கும்?
பதில்: மக்கள் அனைவரையும் தயார்படுத்துவது.
கேள்வி: எதற்குத் தயார்படுத்துவது?
பதில்: மிகப்பெரிய தியாகங்களுக்கு.
கேள்வி: காங்கிரசின் வழிமுறைகள் எப்படி இருக்கும்?
போசிற்கு சிரிப்பு வந்தது.
(எல்லோரும் தீவிரவாதிகள் என்று சொல்கிறார்களே, இவரிடம் கட்சி போனால் பிறகு இவர் என்ன செய்வாரோ என்பதுதான் அந்தக் கேள்விக்குப்பின்னால் ஒளிந்திருந்த பயம்.)
பதில்: ஒத்துழையாமை, சத்தியாக்கிரகம், அகிம்சை எல்லா முறைகளையும் காங்கிரசு பின்பற்றும்.
கேள்வி: அப்படியென்றால் அகிம்சை வழிப்போராட்டம் மட்டும்தான் இருக்கும். இல்லையா?
பதில்: இருக்கலாம்?
காங்கிரசு தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மறு நிமிடமே தனது பணிகளை ஆரம்பித்தார் போசு.
இந்தியாவின் சந்துபொந்துகள் அனைத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். திட்டக்குழுக்களைக் கூட்டினார், நிறைய விவாதித்தார். இந்தியாவின் உடனடிப் பிரச்சனைகள் என்னென்ன?, உடனடி தேவைகள் என்னென்ன? என்று பட்டியலிட்டார். இந்து-முஸ்லீம் இருவருக்குமிடையே நல்லுறவு மலர என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். ஜின்னாவைப் பலமுறை சந்தித்துப் பேசினார். அப்போது முஸ்லீம் லீகின் தலைவராக ஜின்னா இருந்தார். அவர் மூலமாக ஏதாவது செய்ய முடியுமா என்று பார்த்தார், ஆனால் பயனில்லை.
subash-14-41938- மத்தியில் தேசிய திட்ட மாநாட்டைக் கூட்டினார். இந்த மாநாட்டுக்குத் தலைமை வகிக்குமாறு நேருவிடம் கேட்டுக்கொண்டார். முக்கிய அறிவியல் வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். பல அரசியல் தலைவர்களுக்குக் கூட போசு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. எதற்காக இந்த மாநாடு? அறிவியல் ஆட்களும், பொருளாதார ஆட்களும் என்ன செய்யப்போகிறார்கள். அரசியலுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கப்போகிறோம் அதற்கு இவர்களது உதவி நமக்குத் தேவை. இன்னமும் பிரிட்டன் நம்மைவிட்டு அகலவில்லையே, அதற்குள் எதற்கு இத்தனை முன்னேற்பாட்டுத் திட்டங்கள். இதுவே தாமதம் என்று நான் நினைக்கிறேன்.
முதல் மூன்று, நான்கு மாதங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. பிறகு ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் ஆகிற காரியம் இல்லை ஐயா?. இருக்கிற காலத்தை நல்லபடியாகக் கழித்துவிட்டுப் போய்விடுவோம். பிரிட்டனே பார்த்து ஏதாவது சமரசம் செய்துகொண்டால்தான் உண்டு. இவரது பிரச்சனை என்ன தெரியமா? இவர் நிறைய கனவு காண்பவராக இருக்கிறார், கனவு காண்பது சுலபமானது, ஆனால் அதை நிறைவேற்ற முடியாதே.
பல மூத்த தலைவர்கள் இப்படி ஏனோதானோ என்று இருப்பதைப் பார்க்கும்போது கோபம் வந்தது போசுவிற்கு. அவர்களுடைய புலம்பல்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல் தான் விரும்பிய பாதையில் சென்று கொண்டிருந்தார் போசு.
ஒருமுறை அவரது நண்பர் திலீப் ராயுடன் காங்கிரசு கட்சியுடன் ஏற்பட்ட உளைச்சலை விவாதித்துக் கொண்டிருந்தார். சுபாசு எதற்கு உனக்கு இத்தனை கஷ்டம், பேசாமல் இந்த அரசியல் களத்தை விட்டு வெளியேறிவிடலாமே? உனக்குச் சிறிது நிம்மதியாவது கிடைக்கும்.
எனக்கு நிம்மதி கிடைக்கும் இந்தியாவுக்கு?

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 13

subaash13-1ஆஸ்திரியா, அயர்லாந்து, பிரான்ஸ் என்று பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். செக்கஸ்லோவாக்கியா, போலந்து போன்ற புதிய நாடுகளை ஆர்வமுடன் கண்டு கொண்டார். புதிதாக மலர்ந்த ஒரு நாடு எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அயர்லாந்து மீது போசிற்குத் தனிப்பட்ட பிரியம் இருந்தது. பிரிட்டனை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற நாடு என்றால் சும்மாவா?. இன்னொரு அயர்லாந்தாக இந்தியாவால் மாறமுடிந்தால் எத்தனை சுகமாக இருந்திருக்கும்?. நான்கு நாடுகளை அவர் குறித்து வைத்துக்கொண்டார், சோவியத் ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான். இந்தியாவிற்கு உதவ ஏதாவதொரு அந்நிய சக்தி தேவை என்னும் பட்சத்தில் இந்த நான்கு நாடுகளில் ஒன்றால் மட்டுமே அது சாத்தியம் என்று அவருக்குத் தோன்றியது. போசு ஜெர்மனி வந்து சேர்வதற்கு முன்னால் அவரைப் பற்றிய ஒரு குறிப்பை கல்கத்தாவிலுள்ள ஜெர்மன் கவுன்சில் அனுப்பி வைத்திருந்தது. இவர் ஒரு மதிப்பு வாய்ந்த இந்தியத் தலைவர், மருத்துவ வசதி பெற வியன்னாவிலிருந்து ஜெர்மனி வர விரும்புகிறார். வார்சாவிலிருந்து பெர்லினுக்கு ரயிலில் வந்து சேர்ந்தார் போசு. ஜெர்மனி போராட்டக்களமாக காட்சியளித்தது.
subaash13-6ஹிட்லரைப் பற்றி போசு முழுவதுமாக அப்போது அறிந்திருக்கவில்லை. ஹிட்லரின் mein kampft புத்தகத்திலிருந்து அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை போசு உருவாக்கி வைத்திருந்தார். அந்த மதிப்பீடு நல்லபடியாகவே இருந்தது. ஐரோப்பாவில் இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களைப் பற்றியும் பிரிட்டன் பல தவறான கருத்துக்களை பரப்பி குறைகூறி வைத்திருக்கும், அவற்றைச் சரிசெய்து விடலாம் என்று போசு நம்பினார். முதன்முதலில் சனவரி 1935ல் ரோமில் வைத்து முசோலினியைச் சந்தித்தார் போசு. லோதர் பிராங் (lothar Frank) என்பவர் இந்தச் சந்திப்புப் பற்றி எழுதியிருக்கிறார்.
இந்தியா விரைவில் சுதந்திரம் அடையும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்றார் முசோலினி
subaash13-2போசு: நிச்சயமாக
முசோலினி: இந்திய சுதந்திரத்திற்கான போராட்டம் தொடங்கிவிட்டதா?
போசு: ஆமாம்
முசோலினி: நீங்கள் அறவழிப் போராட்டத்தைச் சார்ந்தவரா அல்லது புரட்சிகர இயக்கத்தைச் சார்ந்தவரா?
போசு: புரட்சிகர இயக்கத்தை நம்புபவன்.
முசோலினி: ஓ அப்படியானால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
போசு: நன்றி.
1936 தொடக்கத்தில் போசு பரிபூரணமாகக் குணம் அடைந்தார். உடனே இந்தியா திரும்பவேண்டும் என்பது அவருடைய விருப்பம். ஆனால் பிரிட்டன் அனுமதி அளிக்க மறுத்தது. மீறி இந்தியாவிற்குள் காலடி எடுத்துவைத்தால் சிறை உறுதி என்று ஒரு மிரட்டல் கடிதம் வேறு அனுப்பினர். பிரிட்டனின் எச்சரிக்கையை மீறி மார்ச் மாதம் பம்பாய் வந்து இறங்கினார் போசு. துறைமுகத்தில் கால் பதித்ததுதான் தாமதம், கையோடு பிடித்து சிறையில் அடைத்தனர். பிறகு அங்கிருந்து அவரை அழைத்துச் சென்று டார்ஜீலிங்கில் உள்ள குர்சியோங் (kurseong) என்னும் பகுதியில் உள்ள சரத் சந்திராவின் வீட்டில் காவல் வைத்தனர். முன்னரே விடுதலையாகியிருந்த சரத் சந்திரா அப்போது பெங்கால் காங்கிரசு தலைவராக இருந்தார். வீட்டுக்காவலிலிருக்கும் போசை உடனடியாக வெளியில் விடவேண்டும் என்று மக்கள் போராடத் தொடங்கினார்கள். மே மாதம் இந்தியா முழுவதும் முழுநேர வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். போசு விடுதலை செய்யப்பட்டார்.
1937 இறுதியில் அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டப்பட்டபோது போசுதான் அடுத்த காங்கிரசு தலைவர் என்று பலரும் பேசிக் கொண்டனர். இந்தியாவில் போசு இரண்டு தொல்லைகளை அவ்வப்போது எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒன்று ஆங்கில அரசு சற்று பலமாக மூச்சுவிட்டால் கூட தீவிரவாதி என்று சொல்லி உள்ளே வைத்து விடுகிறார்கள், நான்கு பேருடன் நின்று பேசினால் தீவிரவாதம் வளர்க்கிறாய் என்கிறார்கள். இரண்டாவது தொல்லை நோய், குணமடைந்தது போல் இருக்கும் ஒரு சில மாதங்களில் மீண்டும் சுருண்டு படுக்க வைத்துவிடும், எழுந்திருக்கவே முடியாது. மருத்துவர்கள் வருவார்கள், பார்ப்பார்கள், மாத்திரை கொடுப்பார்கள் ஆனால் பலன் இருக்காது.
subaash13-5அனைத்து பரிசோதனைகளையும் செய்து முடித்த பிறகு கடந்த முறை சொன்ன அதே அறிவுரையை மீண்டும் சொன்னது மருத்துவகுழு நீங்க திரும்பவும் வியன்னா போவதுதான் சரி, வேறு வழியே இல்லை. திரும்பவும் வியன்னா சென்றார், இந்த முறை வியன்னா அவருக்கு மிகவும் பரீட்சயமாகிப்போன இடமாக மாறியிருந்தது, சொல்லி வைத்ததைப்போல் உடல்நிலை தேறியது, மனதுக்கு இதமளிக்கும் ரம்மியமான இடம் படுக்கையில் சாய்ந்தபடியே பல மாதங்களை இனிமையாகக் கழிக்கலாம் ஆனால் போசால் முடியவில்லை. சற்று தேவலை என்று மருத்துவர்கள் சொல்லி முடிப்பதற்கு முன்னால் துள்ளி எழுந்துவிட்டார். புத்தகக் கட்டுக்களைப் பிரிக்கத் தொடங்கிவிட்டார். வாசிப்பது, பல நாடுகளுக்குச் சென்று பார்வையிடுவது, அந்த நாடுகளில் உள்ள இந்தியர்களைச் சந்தித்து பேசுவது, போராட்டத்திற்கு அவர்களை தயார்படுத்துவது இவைதான் அவர் தனக்குத்தானே இட்டுக்கொண்ட பணிகள். பரபரவென்று வேலையைத் தொடங்கினார். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி என்று வளைய வந்தார். ரோமாபுரியில் பாசிஸ வாலிபப் படையின் அணிவகுப்புகளைப் பார்வையிட்டார். Pilgrim என்னும் தலைப்பில் பத்து நாள்களில் தனது சுயசரிதையை (முழுமையானது அல்ல) எழுதி முடித்தார். சனவரி 1938ல் லண்டன் சென்றார், அயர்லாந்து சென்றார். அவரது ஆஸ்தான நாயகரான டிவலேராவைச் சந்தித்தார். இந்தியாவின் பிரதிநிதியைப் போல் ஐரோப்பா முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த இந்த இளைஞனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மான்செஸ்டர் கார்டியன் தனது வியப்பை இப்படிப் பதிவு செய்தது, தன்னை சந்திக்கும் ஒவ்வொருவரையும் போசு நிமிடத்தில் கவர்ந்துவிடுகிறார். இந்தியா, இந்தியா, இந்தியா, இந்தியாவைத் தவிர வேறு எது பற்றியும் அவர்பேசுவதில்லை. அடுத்த காங்கிரசு தலைவர் இவர்தான் என்று ஐரோப்பிய பத்திரிகைகளும் எழுதத் தொடங்கின. இவரைப் பேட்டிகாண பல பத்திரிக்கையாளர்கள் ஓடி வந்தனர். அடுத்த காங்கிரசு தலைவர் நீங்கள்தான் என்று பேசிக்கொள்கிறார்கள் பார்ப்போம். இது மகத்தான கௌரவம். இதைப்பெற எனக்கு யோக்யதை உண்டு என்று நான் எண்ண மாட்டேன், தேசம் எனக்கு மனமுவந்து பெருமை அளித்திருக்கிறது. இந்திய தேசியப் போராட்டத்தின் முன்னணியில் நின்று போராடிய இந்திய வாலிபர்களைக் கவுரவிக்கும் செயல் இது.
தலைவர் ஆன பிறகு என்ன செய்ய உத்தேசித்திருக்கறீர்கள்?
மக்களை ஒன்று திரட்டி அவர்களது பலத்தைக் கூட்ட வேண்டிய முக்கிய பணி காங்கிரசுக்கு இருக்கிறது. பிரிட்டனுக்கு எதிராக ஒரு மாபெரும் சக்தியை உருவாக்க வேண்டும், விரைவில் இது நடக்கும்.
உங்களது உடனடி திட்டம் என்னவாக இருக்கும்?
என்னால் இப்போது உடனடியாகக் கூறமுடியாது. ஆனால் ஒரு விடயம் நிச்சயம் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை முன்பைவிட அதிகமாகப் பலப்படுத்துவோம் என்பது நிச்சயம்.
பிரிட்டனை முறியடிக்க முடியும் என்று நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
சர்வ நிச்சயமாக.
சுதந்திரத்திற்குப் பிறகு?
சோசலிசத்தை நோக்கி தேசத்தை நகர்த்திச் செல்வோம்.