அன்பார்ந்த திரு.ஜின்னா,காங்கிரசு காரியக் கமிட்டி சூலை, 9 ஆம் தேதி கூடியபோது முஸ்லீம் லீக் செயற்குழுவின் மூன்று தீர்மானங்களையும் ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலித்தது. தங்கள் முதல் தீர்மானம் முஸ்லீம் லீக்கின் அந்தஸ்தை நிர்ணயிக்கிறது. காங்கிரசு கட்சி, முஸ்லீம் மக்களின் ஏகப்பிரதிநிதியாக முஸ்லீம் லீக்கை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறது. முஸ்லீம் லீக் மட்டும்தான் முஸ்லீம் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று அங்கீகரிப்பதில் காங்கிரசு கட்சிக்குப் பல சிரமங்கள் உள்ளன. முஸ்லீம் லீக்குக்கு கட்டுப்படாத பல முஸ்லீம் ஸ்தாபனங்கள் இந்த நாட்டில் செயல்பட்டு வருகின்றன, முஸ்லீம் லீக்கை முஸ்லீம் மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று காங்கிரசு காரியக் கமிட்டியை அவை ஏற்கனவே எச்சரித்துள்ளன. மேலும் காங்கிரசு கட்சியிலேயே பல முஸ்லீம் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.
இந்த நாட்டில் அவர்களுக்குள்ள மதிப்பையும், செல்வாக்கையும் குறைத்து மதிப்பிட முடியாது, அடுத்து எல்லைப்புற மாகாணமும் உள்ளது, எல்லைப்புற மாகாணத்தில் முழுக்க முழுக்க முஸ்லீம் மக்களே வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் காங்கிரசையே ஆதரிக்கின்றனர். அனைவருக்கும் தெரிந்த இந்த உண்மைகளின் அடிப்படையில் பார்த்தால் முஸ்லீம்களின் ஏகப் பிரதிநிதியாக முஸ்லீம் லீக்கை அங்கீகரிக்க காங்கிரசால் முடியாது என்பது மட்டுமல்ல, அது பொருத்தமற்றதாகவும் இருக்கும் என்று காங்கிரசு காரியக்கமிட்டி கருதுகிறது. மேலும் ஒரு ஸ்தாபனத்தின் பலமோ, மதிப்போ அதை நாமே நிர்ணயிப்பதால் அதற்கு வருவதில்லை. ஆந்த ஸ்தாபனம் தன்னை எதற்காக அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்கிறதோ அதன் மூலம் தான் பெருமையையும், மதிப்பையும் பெற முடியும், ஆகவே லீக் செயற்குழு, காங்கிரசால் ஏற்க முடியாத ஒன்றை ஏற்கும்படி வற்புறுத்தாது என்று காங்கிரசு செயற்குழு நம்புகிறது.
காங்கிரசு கட்சியைப் பொறுத்தவரை இந்து-முஸ்லீம் பிரச்சினையைப் பேசித் தீர்க்க, முஸ்லீம் லீக்கோடு நட்பு பூர்வமான உறவை ஏற்படுத்தவும், வளர்க்கவும் விரும்புகின்றது. காங்கிரசு கட்சியின் கோரிக்கையையும் இந்த சமயத்தில் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது. காங்கிரசில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்துக்களாக இருந்தாலும் இந்த அமைப்பில் முஸ்லீம், கிருஸ்தவர், பார்ஸிகள், சீக்கியர்கள் முதலியவர்கள் உள்ளனர்கள் மற்றும் இவர்கள் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி இந்தியாவை தாயகமாகக் கொண்டு செயல்படுகிறவர்களைக் கொண்ட ஸ்தாபனமாகக் காங்கிரசு நடந்து வருவதுதான் காங்கிரசின் பாரம்பரியமாகும். மற்றும் இந்த காங்கிரசில் தொடக்க காலத்தில் பல முஸ்லீம், தலைவர்களாகவும் மற்றும் பிற முக்கிய பதவிகளிலும் இருந்து காங்கிரசு மற்றும் இந்த தேசத்தின் மக்களின் முழு நம்பிக்கையையும் பெற்று செயல்பட்டிருக்கின்றார்கள். காங்கிரசு மதச்சார்பற்று செயல்படுகிறது, இதில் எந்த மதத்தினரும் காங்கிரசில் நம்பிக்கை வைத்தவர்கள் உறுப்பினர்களாக சேரலாம், உயர் பதவிகளையும் அடையலாம். எனவே எந்த கோணத்தில் பார்த்தாலும் காங்கிரசு ஒரு வகுப்புவாத ஸ்தாபனமே அல்ல. மாறாக வேறு எந்த வகுப்புவாத ஸ்தாபனம் தேசத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயல்பாடுகளில் ஈடுபடும்போது அத்தகைய செயல்களில் தலையிட்டு அவற்றை தேசத்தின் நன்மைக்காக தடுத்து நிறுத்த காங்கிரசு போராடி வருகிறது. எனவே முஸ்லீம் லீக் அதன் பிடிவாதத்தை விட்டுவிட்டு காங்கிரசு கட்சியோடு ஒத்துழைத்து இந்து-முஸ்லீம் வகுப்புவாத பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். இவ்வாறு நடந்தால் காங்கிரசு மிகவும் மகிழ்ச்சி அடையும் என்றும் காரியக்கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது. முஸ்லீம் லீக்கின் இரண்டாவது தீர்மானத்தையும் காங்கிரசு ஏற்றுக் கொள்ள இயலாது என்று காரியக் கமிட்டி முடிவு செய்கிறது.
மூன்றாவது தீர்மானத்தின் மூலம் முஸ்லீம் லீக்கை காங்கிரசு செயற்குழுவால் அதைச் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லீம் லீக்கைப் பொறுத்தவரை அது ஒரு வகுப்புவாத ஸ்தாபனம் என்பது தெளிவாக அதன் நடவடிக்கைகளின் மூலம் தெரிகிறது. அது முஸ்லீம்களின் நலன்களுக்காக மட்டுமே சேவை செய்வதாகவும் முஸ்லீம் இனத்தவரை மட்டுமே தன் கட்சியில் சேர்த்துக் கொள்வதாகவும் தோன்றுகின்றது. எனவே இதுநாள்வரை முஸ்லீம் லீக், காங்கிரசு கட்சியோடு இந்து-முஸ்லீம் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசி ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது என்றுதான் கருதுகிறதே தவிர அனைத்துச் சிறுபான்மை சமூகங்களைப் பற்றியும் பேச விரும்புகிறது என்று கருதப்படவே இல்லை. எனவே காங்கிரசைப் பொறுத்தவரை இதர சிறுபான்மைச் சமூகங்கள் காங்கிரசால் பாதிக்கப்பட்டதாக நினைத்தால் உடனடியாக அந்தச் சமூகங்களின் பிரதி நிதிகளோடு பேசி அவற்றின் குறைகளைத் தீர்க்க உறுதி கொண்டுள்ளது என்பதை காங்கிரசு காரியக் கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது.
இதுவரை நான் குறிப்பிட்டதிலிருந்து எங்கள் நிலையை நீங்கள் புரிந்து கொண்டு பேச்சுவார்த்தையை மேலும் தொடரவும், பிரச்சினைக்கு முடிவு காணவும் முன்வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் நமக்கிடையே நடந்த முந்தைய கடிதப் போக்குவரத்தை ஏற்கனவே பத்திரிகைகளுக்குக் கொடுத்துப் பிரசுரிக்க ஏற்பாடு செய்தது போல இக்கடிதத்தையும் பத்திரிகைகளில் வெளியிட்டு பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவது அறிவுடைமையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். நீங்கள் ஒப்புக் கொண்டால் இக்கடிதத்தைப் பத்திரிக்கைகளுக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
தங்கள் அன்புள்ள
சுபாசு சந்திர போசு
இதுபோன்ற பல கடித பரிமாற்றம் நடத்திய காங்கிரசு கட்சி, எல்லா வழிகளிலும் ஜின்னாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைத்து வரும்படியும் வேண்டுகோள் விடுத்தும், ஜின்னாவின் முரண்பாடான கருத்துகளின் மூலம் இந்து-முஸ்லீம் பிரச்சினைகளில் காங்கிரசு கட்சிக்கும், முஸ்லீம் லீக் கட்சிக்கும் ஒரு சுமூகமான ஒப்பந்தம் ஏற்படவே இல்லை. காங்கிரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. ஜின்னாவின் பிடிவாதத்தினால் சுபாசு தொழில் கொள்கையிலும், பல திட்டங்களையும் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அதாவது தேசிய ஆராய்ச்சி கவுன்சில் ஒன்றை அமைத்து, ஒருங்கிணைக்கப்பட்ட தொழில் மயமாக்கும் முறையையும், திட்டத்தினையும் வகுக்கும். மற்றும் காங்கிரசு கட்சியானது சுதந்திரத்திற்கு மட்டும் போராடவில்லை இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு நமது நாட்டில் பல முன்னேற்றங்களுக்கும், சுதந்திர இந்தியாவில் அமையவிருக்கும் அரசாங்கம், மற்றும்பல துறைகளை முன்னேற்ற செயல்பட வேண்டும்.
நமக்கு விஞ்ஞானத்தின் உதவியும் விஞ்ஞானிகளின் உதவியும் கண்டிப்பாக தேவைப்படும். இது தொழில் புரட்சிக்காலம் எனவே, தொழில் புரட்சியிலிருந்து உலகில் எந்த நாடும் தப்பிவிட முடியாது. பிரிட்டனில் ஏற்பட்டது போலவே இந்தியாவிலும் தொழில்புரட்சி படிப்படியாக நமது நாட்டில் ஏற்பட வேண்டும். ஆனால் நமது நாட்டிற்கு சோவியத் ரசியாவைப் போன்று பாய்ந்து செல்லும் முன்னேற்றமே தேவைப்படும் என்று நான் கருதுகிறேன் மற்றும் தாய் தொழில்கள் என்று சொல்லக்கூடிய மின்சார சப்ளை உலோக உற்பத்தி, எந்திர சாதன உற்பத்தி, அத்தியாவசிய ரசாயன பொருள் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் செய்தித் தொடர்புச் சாதன உற்பத்தி, ஆகியவற்றுக்கு தேசிய அளவில் திட்டமிடுவதும், தேசிய ஆராய்ச்சி கவுன்சில் ஒன்றை அமைத்து விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சிகளை நடத்தி அதன் அடிப்படையில் தொழிற்புரட்சியை ஏற்படுத்துவதுதான் நமக்கு தேவை. மற்றும் தொழிற்புரட்சிக்கு அடிப்படைத் தேவைகளான தொழில்நுட்ப ஆராய்ச்சி, பொறியியல் நுட்பக் கல்வி ஆகியவற்றுக்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும். தொழில் நுட்பக் கல்வியைப் பெறுவதில் ஜப்பானிடம் நட்பு கொண்டு, பின்பற்றி ஆராய்ச்சியாளர்களின் உதவியோடு தொழிற்புரட்சியை நடத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்.
No comments:
Post a Comment