Tuesday, February 5, 2013

இந்திய உளவு விமான ஆபரேஷன்! வானில் இருந்து ஏவுகணை ஏவப்போகும் நாள்!! 02

இந்திய ராணுவத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம், இஸ்ரேலிய ‘ஹெரொன்’ ரக நடுத்த உயரத்தில் பறக்கும் உளவு விமானங்கள் என்றே தெரியவருகிறது. இந்தியாவின் பாகிஸ்தான், மற்றும் சீனா எல்லைகளில், இவை அட்டகாசமாக இலக்குகளை தாக்கக்கூடியவை. காரணம், எல்லைப் பகுதி புவியியல் அமைப்பு அப்படி. (எதிரி தாக்குதலில் இருந்து மறைவதற்கு, அதிக உயரம் பறக்க தேவையில்லை)
இந்தியா வெளிப்படையாக அறிவிக்காத திட்டம் இது. ஆனால், ராணுவ வட்டாரங்களில் இது குறித்த தகவல்கள் உள்ளன.
கீழேயுள்ள போட்டோவில் உள்ள ரக உளவு விமானங்களே, தற்போது இந்திய பாக். எல்லைகளில் உளவு பார்க்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் DRDO என்று எழுதப்பட்டிருப்பதன் விரிவாக்கம், The Defence Research and Development Organisation. இந்திய ராணுவத்துக்கான தொழில்நுட்ப ஆராய்ச்சி, மற்றும் தயாரிப்புகளில் ஈடுபடும் அரசு நிறுவனம். தலைமைச் செயலகம், டில்லியில் உள்ளது.
இந்த ரக உளவு விமானங்கள், உளவு பார்க்குமே தவிர, ஏவுகணைகளை ஏவும் அளவுக்கு திறன் கிடையாது. அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
indian-uav-20130206-2

No comments:

Post a Comment