“ஷில்பாவை கண்குளிர பார்க்க ரூ.71.73 லட்சம் கொடுத்ததை ஊழல் என்கிறது சி.பி.ஐ!
நடிகை ஷில்பா ஷெட்டி திருமணம் ஆகி போவதற்குள், கடைசித் தடவையாக
ஒருமுறை அவரது ஆட்டத்தை கண்குளிர பார்க்க விரும்பிய கல்மாடி, ரூ. 71.73
லட்சம் பணத்தை வாரி வீசினார் என குற்றம்சாட்டியிருப்பது, ஷில்பா ஷெட்டியின்
கணவர் அல்ல… சி.பி.ஐ!
புனேயில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் இளைஞர் போட்டியின் நிறைவு விழாவின்போது நடிகை ஷில்பா ஷெட்டியின் ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டு இது. ஷில்பா போட்ட ஆட்டத்துக்கு ஆன செலவே, ரூ. 71.73 லட்சம்!
ஷில்பாவுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் இடையே திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, கடைசி முறையாக கண்குளிர அவரது ஆட்டத்தை பார்க்கத் துடித்தார் கல்மாடி. இதற்காகவே அவரது டான்ஸை ஒற்றைக் காலில் நின்று சேர்த்து விட்டார் என்பதே சி.பி.ஐ.-யின் குற்றச்சாட்டு.
கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டி பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நடந்து முடிந்தது. இதில் நடந்த மிகப் பெரிய ஊழல்கள் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் கல்மாடி. அதன்பின், கைது செய்யப்பட்டு திஹார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். இவர் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் கல்மாடி வழக்கை விசாரித்து வரும் கோர்ட்டில், அவர் தொடர்பான இந்த ஊழலையும் சி.பி.ஐ. அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் என்ன? 2008-ம் ஆண்டு புனே நகரில் இளைஞர்களுக்கான காமன்வெல்த் விளையாட்டு்ப போட்டி நடந்தது. அப்போது கல்மாடிதான் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும், போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும் இருந்தார். அப்போட்டியின் நிறைவு விழாவின்போது தேவையே இல்லாமல் திடீரென ஷில்பா ஷெட்டியின் டான்ஸைச் சேர்த்துள்ளனர்.
இது கல்மாடியின் வலியுறுத்தலின் பேரில் நடந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த நடனத்துக்காக ரூ. 71.73 லட்சம் பணம் செலவாகியுள்ளது. கல்மாடி ஷில்பா ஷெட்டியின் ஆட்டத்தை பார்த்து ரசிப்பதற்காக இப்படி பெரும் பணத்தை எடுத்து செலவிட்டு வீணடித்துள்ளதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.
என்ன கொடுமை சார் இது? இதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா? ஷில்பா ஷெட்டிக்கு நம்ம கல்மாடி, நான்கு மாடி கல்வீடு கட்டியா கொடுத்தார்? ஒத்தை டான்ஸ்தானே!
தவிர, ஷில்பாவும் இளைஞி தானே.. அவர் இளைஞர் காமன்வெல்த் போட்டியில் ஆடினால் என்னங்க தப்பு? பா.ம.க.-வில் நம்ம அன்புமணி இந்த வயலும் இளைஞர் அணி தலைவராக உள்ளார். யாராவது கேட்டீர்களா? ஷில்பா, நிஜமாகவே இளைஞி!

No comments:
Post a Comment