Wednesday, February 20, 2013

ஹெலிகாப்டர் ஊழல்: போலி கம்பனி செட்டப் பண்ணி லஞ்சம் இந்திய ‘புள்ளிக்கு’ வந்தது!

Viruvirupu, Saturday 16 February 2013, 04:56 GMT
12 அதிநவீன ஹெலிகாப்டர்களை மத்திய அரசு வாங்கிய விவகாரத்தில் 362 கோடி கமிஷன் இந்தியாவில் ‘யாருக்கோ’ கைமாறியதாக இத்தாலிய விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, வேறு சில விபரங்களும் தற்போது தெரியவந்துள்ளது.
இத்தாலி நீதிமன்றத்தில் து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்த ஒரு தனவல் தெரியவந்துள்ளது. இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்ட 362 கோடி லஞ்ச பணத்தில் ஒரு பகுதி டுனிசியா நாட்டில் ஒரு போலி கம்பனி திறக்கப்பட்டதன் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்காக, ஐ.டி.எஸ். டுனிசியா என்ற பெயரில் அந்நாட்டில் ஒரு போலி கம்பெனி தொடங்கி, இந்தியாவிலும் ஐ.டி.எஸ். இந்தியா என்ற பெயரில் கம்பெனி தொடங்கி, அதற்கு போலி ரசீதுகள் மூலம் ரூ.140 கோடி அளவுக்கு பணம் அனுப்பப்பட்டு இந்தியர்களுக்கு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
உயர்ந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, இத்தாலி நாட்டை சேர்ந்த பின்மெக்கானிக்கா (Finmeccanica) நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் (Agusta Westland) நிறுவனத்துடன் மத்திய அரசு ரூ.3,546 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செய்து கொண்டது.
இதில், 362 கோடி கமிஷன் இந்தியாவில் ‘யாருக்கோ’ கைமாறியதாக இத்தாலிய விசாரணையில் தெரியவந்தது.
இந்த ஊழல் தொடர்பாக பின்மெக்கானிக்கா கம்பெனியின் துணை நிறுவனமான அகஸ்ட்டா வெஸ்ட்லேண்டிடம் இந்தியா முறைப்படி விளக்கம் கேட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
இத்தாலி நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், ஐ.டி.எஸ். இந்தியா என்ற பெயரில் நிஜயமாக ஒரு கம்பெனியே இல்லை என்றும், அது தொடங்கப்பட்டதற்கோ அல்லது மூடப்பட்டதற்கோ எந்த ஆவணங்களும் கம்பெனி விவகாரத் துறை அமைச்சகத்தில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இது ஒரு டம்மி கம்பனி. பணத்தை இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்காக யாரோ செட்டப் செய்த கம்பனி. அதற்கான ரிஜிஸ்ட்ரேஷன் செய்திருக்க மாட்டார்கள். ஆனால், போலி ரிஜிஸ்ட்ரேஷன் ஆவணம் ஒன்றை தயார் செய்து ஏதோ ஒரு வங்கியில் கணக்கு திறந்திருப்பார்கள்.

No comments:

Post a Comment