Tuesday, February 5, 2013

சி.ஐ.ஏ. ரகசிய ‘ஆட்கடத்தல்’ ஆபரேஷன்களுக்கு மறைமுக உதவி செய்தது யார்?




சி.ஐ.ஏ. உபயோகித்த பிரத்தியேக தனி விமானங்கள்
சி.ஐ.ஏ. உபயோகித்த பிரத்தியேக தனி விமானங்கள்
“சி.ஐ.ஏ. உலக அளவில் நடத்திய ‘ஆட்கடத்தல்’ ஆபரேஷன்களுக்கு உலக அளவில் 54 நாடுகள் ரகசிய ஒத்துழைப்பு வழங்கின” என்ற தகவல் வெளியாகி அதிர வைத்திருக்கிறது. புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ‘தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் இந்த ஆட்கடத்தல்கள் அமோகமாக நடந்தன.
நியூயார்க்கை தளமாக கொண்டு இயங்கும் OSJI (Open Society Justice Initiative) என்ற மனித உரிமை அமைப்பு, இதுவரை பெற்ற தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 213 பக்க அறிக்கை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதிலேயே, சி.ஐ.ஏ. உலக அளவில் நடத்திய ‘ஆட்கடத்தல்’ ஆபரேஷன்களுக்கு உலக அளவில் 54 நாடுகள் ரகசிய ஒத்துழைப்பு வழங்கிய விபரம் உள்ளது.
அல்-காய்தா, மற்றும் இதர தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களாக சி.ஐ.ஏ. சந்தேகப்படும் நபர்கள், எந்த நாட்டில் இருந்தாலும், அவர்கள் கடத்தப் பட்டார்கள். சில நாடுகளில் அந்தந்த நாட்டு உளவுத்துறைகள் பிடித்துக் கொடுத்தன. சில நாடுகளில் சி.ஐ.ஏ. நேரடியாக கடத்தல் செய்தது. இதையடுத்து, சி.ஐ.ஏ. உபயோகித்த பிரத்தியேக தனி விமானங்களில் இவர்கள் நாடுகளுக்கு வெளியே சி.ஐ.ஏ. ரகசிய விசாரணை/சித்திரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சி.ஐ.ஏ.வின் இந்த ரகசிய ஆபரேஷன்களை தமது நாடுகளில் நடத்த 54 நாடுகள் ரகசிய ஒத்துழைப்பு வழங்கிய விபரம் தற்போது தெரிய வந்துள்ளது. பட்டியலில் உள்ள நாடுகளில் அவற்றில் இந்தியா இல்லை. பகிஸ்தான் உண்டு. அநேகமானவை, ஐரோப்பிய நாடுகள்.

No comments:

Post a Comment