Tuesday, February 5, 2013

இந்திய உளவு விமான ஆபரேஷன்! வானில் இருந்து ஏவுகணை ஏவப்போகும் நாள்!! 03

ராணுவ வட்டாரங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், IAI என்ற இஸ்ரேலிய நிறுவனத்துடன் இந்தியா ரூ.1,200 கோடி ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. உளவு விமான தயாரிப்பில் IAI, நம்பகமான தயாரிப்பு நிறுவனமாக அறியப்பட்டது. IAI-ன் விரிவாக்கம், Israel Aerospace Industries. ‘ஹெரொன்’ ரக நடுத்த உயரத்தில் பறக்கும் உளவு விமானங்கள் தயாரிப்பு, இவர்கள் ஸ்பெஷாலிட்டி.
இந்தியாவின் தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் விக்ரம் சிங்கின் ‘அபிமான திட்டம்’ என்று கூறப்படுவது, அவர் இந்திய ராணுவத்தில் அமைக்கும் புதிய பிரிவான SATA. இந்த பிரிவு உருவாகுவதில் ஜெனரல் சிங் அதிக கவனம் செலுத்துகிறார். இந்திய ராணுவத்தில், SATA என்பது, surveillance and target acquisition என்பதன் சுருக்கம்.
இந்தப் பிரிவுதான், இந்திய ராணுவத்தின் உளவு விமானங்களை இயக்கி, ஏவுகணைகளால் எதிரி இலக்குகளை அடிக்க போகின்றன.
கீழேயுள்ள போட்டோ, Israel Aircraft Industries (IAI)ன், பெடாக் ஏவியேஷன் ஹாங்கரில் எடுக்கப்பட்டது. டெல்-அவிவ் பென்கூரியன் விமான நிலையத்துக்கு அருகே இந்த ஹாங்கர் உள்ளது. இவர்கள்தான் இந்தியாவுக்கு உளவு விமானங்கள் தயாரித்து கொடுக்க போகிறார்கள். அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
indian-uav-20130206-3

No comments:

Post a Comment