இந்திய விமானப்படையின் ‘சர்ச்சைக்குரிய’ ஏர்கிராஃப்ட் மெயின்டெனென்ஸக்கு
அடுத்த அடியாக, சுகோய் 30 ரக போர் விமானம் நேற்று தரையில் விழுந்து
நொறுங்கியது. விமானத்தை பைலட்கள் இருவரும் இஜெக்ட் பண்ணப்பட்ட நிலையில்
பாராசூட் மூலம் உயிர் தப்பிவிட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீர்
மாவட்டத்தில் உள்ள போக்ரான் பாலைவனப் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
இந்திய விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாவது, கடந்த மாதத்தில் இருந்து இரு இரண்டாவது தடவை. சுகோய் 30 ரக விமானத்தை எடுத்துக் கொண்டால், 1990களின் இறுதியில் இந்திய விமானப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, விபத்துக்குள்ளாவது இது நான்காவது தடவை.
இந்திய விமானப் படையின் விமானங்கள், நாளை மறுதினம் ‘Iron Fist’ என்ற பெயரில் இரவு-பகல் போர் பயிற்சியில் ஈடுபட இருந்தன. இந் நிலையில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம் திடீரென தரையில் பாய்ந்து வெடித்துச் சிதறியது. விமானம் கட்டுப்பாட்டை இழந்த வினாடியே இரு பைலட்களும் இஜெக்ட் பண்ணப்பட்டு, உயிர் தப்பினர்.
போர் விமானங்களை பொறுத்தவரை, விமானம், 4,000 அடியில் இருந்து 9,000 அடி உயரத்துக்குள் செயலிழந்தால், விமானிகள் உயிர் தப்ப வாய்ப்புகள் அதிகம். அதற்கு கீழே வந்து, தரையை நோக்கி செல்லும் விமானத்தில் இருந்து இஜெக்ட் பண்ணப்பட்டால், சில சமயங்களில் விமானிகளின் பராசூட் விரிவதற்கு போதிய நேரம் கிடைக்காது.
அப்படியான நேரத்தில், விமானி தரையில் வந்து மோதி உயிரிழக்க நேரிடும்.
ஒவ்வொரு சுகோய் விமானமும் சுமார் ரூ. 225 கோடி மதிப்பு கொண்டது. இதுவரை 160 சுகோய் போர் விமானங்களை ரஷ்யா இந்திய விமானப் படைக்கு வழங்கிவிட்டது. மேலும் 112 சுகோய் விமானங்கள் இந்திய விமானப் படையின் பென்டிங் ஆர்டரில் உள்ளன.
கடந்த டிசெம்பர் 2011-ம் ஆண்டு, அந்திய விமானப்படையின் இதே சுகோய் 30 ரக விமானம் வக்ஹோலி அருகே விபத்துக்குள்ளானபோது எடுக்கப்பட்ட போட்டோவை கீழே காணலாம்.

No comments:
Post a Comment