Tuesday, February 5, 2013

இந்திய உளவு விமான ஆபரேஷன்! வானில் இருந்து ஏவுகணை ஏவப்போகும் நாள்!!


தற்போது அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. அதிகம் பயன்படுத்தும் ‘ஏவுகணை ஏவக்கூடிய’ உளவு விமானங்களை, இந்திய ராணுவமும், இந்திய கடற்படையும் விரைவில் பயன்படுத்த உள்ளன என தெரியவருகிறது. இந்திய பாதுகாப்புக்கு இவை புதியவை.
இதுவரை காலமும் இந்தியா உளவு விமானங்களை பயன்படுத்திய போதிலும், அவை தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய உளவு விமானங்கள் அல்ல. வானில் இருந்து உளவு பார்த்து, தரைக்கு தகவல்களை அனுப்பும் அளவுக்குதான் அவற்றின் செயல்திறன்.
எதிரி இலக்குகள் மீது ஏவுகணைகளை ஏவுவதற்கு, தற்போது இந்தியாவில் உள்ள உளவு விமானங்களை விட பெரிய, செயல்திறன் அதிகமான உளவு விமானங்கள் தேவை.
கீழேயுள்ள போட்டோவில் உள்ளது, தற்போது இந்திய ராணுவ பாவனையில் உள்ள உளவு விமானம். பெங்களூருவில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, முதலாவது வெற்றிகரமான சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோ இது.
இந்த இந்திய தயாரிப்பு உளவு விமானம், 75 கிலோ எடையுள்ள உளவு பார்க்கும் கேமராக்கள் மற்றும் சாதனங்களை எடுத்துக்கொண்டு, 25,000 அடி உயரத்தில், 12-15 மணி நேரம் பறக்ககூடியவை. பார்த்துவிட்டு, அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
indian-uav-20130206-1

No comments:

Post a Comment