இந்திய உளவு விமான ஆபரேஷன்! வானில் இருந்து ஏவுகணை ஏவப்போகும் நாள்!! 04
தற்போது, இந்திய ராணுவம் ‘ஏவுகணை ஏவாத’ உளவு விமான தாக்குதல்களுக்காக, சிறப்பு உளவு விமான தளங்களை இயக்குகின்றன. காஷ்மீர் எல்லை பகுதியில், நக்ரோத்தா, மனஸ்பால் பகுதிகளில் இவை உள்ளன. வடகிழக்கு எல்லையோரமாக, கும்பிக்ரம், லிலாபாரி ஆகிய இடங்களிலும் சமீப காலத்தில் சிறப்பு உளவு விமான தளங்கள் அமைக்கப்பட்டன. இவை அனைத்தும், இந்திய ராணுவத்தின் பட்டிலியன்களால் இயக்கப்படுகின்றன.
இந்திய கடற்படை வேறு செட்டப்பை வைத்திருக்கிறது.
கடற்படைக்காக தற்போதுள்ள சிறப்பு உளவு விமான தளங்களில் மூன்று தளங்களை பெரிதுபடுத்தும் திட்டங்கள் உள்ளன. அவை, கொச்சி (கேரளா), போர்பந்தர் (குஜராத்), உச்சிப்புளி (தமிழ்நாடு). இந்த தளங்கள், ஏவுகணை காவிச் செல்லக்கூடிய உளவு விமானங்களுக்கான தளங்களாக மாற்றப்படும் என்று தெரிகிறது.
கீழேயுள்ள போட்டோவில் இந்திய விமானப் படையின் கொச்சி (கேரளா) உளவு விமானத் தளத்தில், விமானம் இயக்கப்படுகிறது. அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
No comments:
Post a Comment