இந்திய உளவு விமான ஆபரேஷன்! வானில் இருந்து ஏவுகணை ஏவப்போகும் நாள்!! 05
சுருக்கமாக சொன்னால், இந்தியா செய்ய விரும்புவதெல்லாம், உளவு விமானங்களை, சாதாரண உளவு பார்த்தலுக்கு இதுவரை பயன்படுத்தி வந்ததற்கு ஒருபடி மேலே போகவுள்ளது. உளவு விமானங்களால், ஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்ள போகிறது. அமெரிக்கா தற்போது, ஆப்கானிலும், பாகிஸ்தானிலும், ஆபிரிக்காவிலும் செய்வது இதைத்தான்.
இவ்வகை ‘தாக்குதல்’ உளவு விமானங்களை, UCAV (Unmanned Combat Air Vehicle) என்று அழைப்பார்கள். இன்றைய தேதிவரை பாகிஸ்தானிடம் UCAVகள் ஏதுமில்லை. அமெரிக்கா, ஆப்கானில் இருந்து முழுமையாக கிளம்பிச் செல்லும்போது, பாகிஸ்தானுக்கு சில UCAVகளை கொடுத்துவிட்டு சென்றால், ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதேநேரத்தில் சீனாவிடம் இவ்வகை உளவு விமானங்கள் உள்ளன. கீழேயுள்ள போட்டோவில் உள்ளது, சீனாவிடம் உள்ள UCAVகளில் ஒன்று.
நாளைக்கே சீனாவும், பாகிஸ்தானும் UCAVகளை வைத்திருக்கும்போது, எம்மிடம் இல்லாவிட்டால் அபாயமல்லவா? அதுதான் ரூ.1,200 கோடி உளவு விமானங்கள் வாங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment