Friday, March 8, 2013

சி.ஐ.ஏ.வின் புதிய தலைவர் ஜான் பிரென்னன்! உளவு விமான தாக்குதலின் ‘வழிகாட்டி’!!

அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் அடுத்த தலைவர் உறுதிப்படுத்தப் பட்டுள்ளார். அமெரிக்க செனட், “சி.ஐ.ஏ.வின் அடுத்த தலைவர் ஜான் பிரென்னன்” என்பதை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது.
இவரை தலைவராக்குவதற்கு ஜனாதிபதி ஒபாமா முயற்சிப்பது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தோம். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு ஆரம்பத்தில் காணப்பட்டது. காரணம், பாகிஸ்தானிலும், சில ஆபிரிக்க நாடுகளிலும் அமெரிக்க உளவுத்துறை நடத்தும் உளவு விமானத் தாக்குதல் ஆபரேஷன்கள், இவரது மேற்பார்வையில்தான் நடந்தன.
அதில், பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதே, இவர்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அப்படியான ஒருவரை சி.ஐ.ஏ.வின் தலைவர் ஆக்க கூடாது என செனட்டில் எதிர்ப்பு குரல்கள் இருந்தன.
இருந்தபோதிலும், இவர் சி.ஐ.ஏ.வின் தலைவராவதா, இல்லையா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு அமெரிக்க செனட்டில் நேற்று நடைபெற்றபோது, 63-34 என்ற ஓட்டு வித்தியாசத்தில் சி.ஐ.ஏ.வின் தலைவராக்கப்பட்டுள்ளார் ஜான் பிரென்னன்.

No comments:

Post a Comment