அமெரிக்க உளவுத்துறை: தீவிரவாதிகள் ரகசியமாக மறைந்து கொள்ள அட்டகாசமான இடம்! 02
முதல் பக்க தொடர்ச்சி
ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த உளவாளி ஒருவர் அமெரிக்க உளவு அமைப்புகளான எஃப்.பி.ஐ. மற்றும் சி.ஐ.ஏ.யில் மிகவும் பொறுப்பான பதவிகளில் இடம்பிடித்துத் தீவிரவாதிகளுக்குத் தகவல் அனுப்பிவந்த விஷயமும் அம்பலமாகியிருக்கிறது.
அதேபோல அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்காவின் பாதுகாப்பு உள் விஷயங்களை அறியக்கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் (இ.பி.ஏ.) பணியில் சேர முடிந்துமிருக்கிறது.
அதுவும், அமெரிக்கர்களுக்கு பூச்சுற்றியது ஒரு பெண்!
வஹீதா தஹ்ஸீன் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்தான் முதன் முறையாக, அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைக் கையாளும் இலாகா ஒன்றில் பணிபுரிந்து கொண்டு ரகசியங்களை வெளியே கடத்தியிருந்தார் என்று தெரிவித்தது அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ.
இந்த வஹீதா தஹ்ஸீன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கூட அல்ல என்பது அடுத்த ஆச்சரியம். அமெரிக்காவில் வசித்தாலும் குடியுரிமை பெறுவதற்கு முன்னரே வாஷிங்டனில் இருக்கும் இ.பி.ஏ.வில் முக்கியப் பொறுப்பான விஷங்களை ஆய்வு செய்யும் துறையில் இவர் பணியில் சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறார்.
இவர்மீது எப்படிச் சந்தேகம் ஏற்பட்டது? அதற்குக் காரணம் தஹ்ஸீனுடைய அமெரிக்கக் குடியுரிமை விண்ணப்பம்தான்.
1998ல் தஹ்ஸீன் இ.பி.ஏ.யில் வேலைகேட்டு விண்ணப்பித்தபோது, அவரது விண்ணப்பம் பல அடுக்கு வடிகட்டல்களின் பின்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டு வேலை கொடுக்கப்பட்டது.
பொதுவாக இப்படியான சென்சிட்டிவ்வான வேலைகளுக்கான விண்ணப்பங்களில் விண்ணப்பதாரியின் கல்வித் தகுதி, மற்றும் வேலை அனுபவங்கள் மாத்திரம் பார்க்கப்படுவதில்லை. அதற்கும் ஒருபடி மேலேபோய், அவரது பின்னணி, குடும்பத்தினரின் பின்னணி, முன்னாள் தொடர்புகள் என்று பல விஷயங்களில் விண்ணப்பதாரியை வடிகட்டுவார்கள்.
ஆனால் இந்த வடிகட்டல்களிலும், இ.பி.ஏ. தஹ்ஸீனுடைய விண்ணப்பத்தில் முக்கியமான விடயம் ஒன்றைக் கவனிக்கத் தவறியிருக்கிறது. அது அவரது கணவரின் பின்னணி. …அடுத்த பக்கம் வாருங்கள்
No comments:
Post a Comment