அமெரிக்க உளவுத்துறை: தீவிரவாதிகள் ரகசியமாக மறைந்து கொள்ள அட்டகாசமான இடம்! 03
இரண்டாம் பக்க தொடர்ச்சி
அவரது கணவர் எங்கே பணியில் இருந்தவர் என்பது கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்தது. கணவர் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டவர். பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுத்துறையில் (மிலிட்டரி இன்டலிஜன்ஸ்) முக்கிய பிரிவு ஒன்றில் பணிபுரிந்தவர்.
பாகிஸ்தான் ராணுவ உளவுப்பிரிவின் இந்த முக்கிய பிரிவு செய்த பிரதான பணி என்ன தெரியுமா?
பாகிஸ்தான் அரசுக்காக, அல்-காய்தா மற்றும் தலிபான் இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலமாகச் சில காரியங்களைச் செய்து முடிப்பது.
இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு ஒருகாலத்தில் ஆயுதங்களையும், சில ராணுவப் பயிற்சிகளையும் கொடுத்தது பாகிஸ்தானின் ராணுவ உளவுத்துறை. (இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், மேற்படி தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை ஆயுதங்களைச் சுயமாகவும் கொடுத்திருக்கிறது, அமெரிக்க உளவுத்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கவும் கொடுத்திருக்கிறது!)
தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்பட்டபோது அதை நடத்தி முடித்த உளவுத்துறைப் பிரிவில்தான் தஹ்ஸீனுடைய கணவர் பணியாற்றியிருந்தார். இதனால் அவருக்கு மேற்படி தீவிரவாத இயக்கங்களில் உயர்மட்டத் தலைவர்களுடன் நிச்சயம் தொடர்புகள் இருந்திருக்க வேண்டும்.
அது ஒரு பின்னணி. மற்றய பின்னணி, தஹ்ஸீன் அமெரிக்காவில் குடியேறுமுன் பாகிஸ்தானில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்திருக்கிறார். குறிப்பிட்ட அந்தத் தொண்டு நிறுவனம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இயங்கிவந்தது. Help Orphans and Widows (சுருக்கமாக HOW) என்ற பெயரில் இயங்கிய இந்தத் தொண்டு நிறுவனத்துக்கும் அல்-காய்தாவுக்கும் தொடர்புகள் இருந்தன என்பது அமெரிக்க உளவுத்துறையின் கண்டுபிடிப்பு.
முஸ்லிம்களின் பாரம்பரிய உடை அணியும் தஹ்ஸீன், அமெரிக்காவில் குடியேறியபின் மிசோரியிலிருக்கும் இஸ்லாமிய – அமெரிக்கத் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கிறார். இந்தத் தொண்டு நிறுவனம் பல நாடுகளில் பின்லேடனின் பல திட்டங்களுக்கு நிதியுதவி செய்துள்ளது என்பதும் அமெரிக்க உளவுத்துறையின் கண்டுபிடிப்பு.
குறிப்பிட்ட மிசோரி தொண்டு நிறுவனம், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில், அமெரிக்க நிதித்துறையால் ‘பிளாக் லிஸ்ட்’டில் வைக்கப்பட்டிருக்கிறது.
இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த கட்டிடம், சில சமயங்களில் தீவிரவாதிகளின் மறைவிடமாகவும் செயல்பட்டிருக்கலாம் என்று எஃப்.பி.ஐ. அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். …அடுத்த பக்கம் வாருங்கள்
No comments:
Post a Comment