அமெரிக்க உளவுத்துறை: தீவிரவாதிகள் ரகசியமாக மறைந்து கொள்ள அட்டகாசமான இடம்! 04
மூன்றாம் பக்க தொடர்ச்சி
தஹ்ஸீன் அமெரிக்க அரசில் வேலைக்காக விண்ணப்பித்தபோது, தனது விண்ணப்பத்தில் தான் பாகிஸ்தானில் நடாத்திவந்த தொண்டு நிறுவனம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ‘விதவைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்காகவும் நடாத்தப்பட்ட அமைப்பு அது’ எனவும் விளக்கம் கொடுத்திருந்தார்.
“தஹ்ஸீன் நடத்தி வந்த (HOW) அமைப்பு ஒரு சேவை மனப்பான்மை உடைய உண்மையான தொண்டு நிறுவனம் என்று நாங்கள் நம்பியே அவருக்கு வேலை கொடுத்தோம்” என்று, பின்னர் விசாரணையின்போது இ.பி.ஏ.யால் கூறப்பட்டது.
இ.பி.ஏ.யில் அவருக்கு வருடத்துக்கு 90,000 டாலர் சம்பளத்துடன், 6 தடவைகள் போனஸ்கூட வழங்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் குடியேறிய பின்னரும் இவர் பல தடவைகள் பாகிஸ்தான் சென்று திரும்பியிருக்கிறார் (அமெரிக்காவில் அவர் கடைசியில் கைது செய்யப்பட்டதும், பாகிஸ்தான் செல்லும் பயணம் ஒன்றை அவர் மேற்கொள்ளவிருந்த நிலையில்தான்).
கைது செய்யப்படுவதற்குமுன் அவர் பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்றுவந்ததற்குக் காரணம், நோய்வாய்ப்பட்ட தனது உறவினர்கள் மற்றும் அநாதைக் குழந்தைகளைச் சந்திப்பதாக என்று கூறியதையும் இ.பி.ஏ. நம்பியிருக்கின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கான செலவுகளையும் இ.பி.ஏ. ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அதாவது, அவர் அமெரிக்க அரசின் செலவிலேயே பாகிஸ்தானுக்கு அவ்வப்போது பயணம் செய்திருக்கிறார்.
அவர்மீது சந்தேகம் ஏற்பட்டபின் எஃப்.பி.ஐ நடாத்திய ரகசிய விசாரணைகளில், அவர் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கு கூறிய காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று தெரியவந்ததாக பின்னர் விசாரணையில் கூறப்பட்டிருந்தது. …அடுத்த பக்கம் வாருங்கள்
No comments:
Post a Comment