அமெரிக்க உளவுத்துறை: தீவிரவாதிகள் ரகசியமாக பதுங்க அட்டகாசமான இடம்! Part 2
பாகம் 2
கடந்த பாகத்தை தவறவிட்டிருந்தால், கீழேயுள்ள லிங்கில் பார்க்கவும்
ஓய்வு பெற்ற எஃப்.பி.ஐ. அதிகாரி ஜோன் கோல், “தீவிரவாத இயக்கத்தினர்
அமெரிக்கப் பாதுகாப்புத் துறைகளையே குறி வைத்திருப்பது, அமெரிக்காவின்
பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. அமெரிக்க பாதுகாப்புத்
துறைகளுக்குள் ஊடுருவுவது தீவிரவாதிகளுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை.இவர்கள் அமெரிக்க உளவுத்துறைகளுக்குள் எங்கே, எப்படி ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை உளவுத்துறைகள் சீரியஸாகக் கண்காணிப்பதில்லை.
உதாரணமாக, எஃப்.பி.ஐ.-ல் பல அரேபிய மொழிப் பெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்களது பின்னணிகள் முழுமையாக ஆராயப்பட்டே பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்று சொல்வதற்கில்லை” என்கிறார்.
இவர் மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி குறிப்பிடுவதில் விஷயம் உண்டு.
செப்டெம்பர் 11-ம் தேதி தாக்குதலுக்கு பின்னரே அமெரிக்க உளவுத்துறைகள் அமெரிக்காவுக்குள் தீவிரவாதிகளைப் பற்றி உளவு பார்ப்பதில் மும்மரமாக இறங்கின. பல கைதுகள் நடந்தன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இப்படிக் கைப்பற்றப்பட்ட அநேக ஆவணங்கள் ஆங்கில மொழியில் இல்லை. அரபு அல்லது உருது மொழியில் இருந்தன.
உடனே எஃப்.பி.ஐ. உட்பட மற்றய அமெரிக்க உளவுத்துறைகளுக்கும் அரபு மொழிபெயர்ப்பாளர்கள் அவசர அவசரமாகத் தேவைப்பட்டனர்.
இப்படியான நேரத்தில் அமெரிக்க உளவுத்துறைகள் அமெரிக்காவில் டாக்ஸி செலுத்தும் அரபு மற்றும் உருது பேசத்தெரிந்த டாக்ஸி டிரைவர்கள் பலரைத்தான் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியில் அமர்த்திக் கொண்டது. மொழிபெயர்ப்பாளர்கள் அவசரத் தேவையாக இருந்ததால், இதில் பலரது பின்னணிகள் சரியாக ஆராயப்படாமலேயே பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். …அடுத்த பக்கம் வாருங்கள்
No comments:
Post a Comment