Friday, March 8, 2013

அமெரிக்க உளவுத்துறை: தீவிரவாதிகள் ரகசியமாக பதுங்க அட்டகாசமான இடம்! Part 2 06


ஐந்தாம் பக்க தொடர்ச்சி
அடுத்த குற்றச்சாட்டாக, இவர் உளவு பார்க்கப் போவதாகக் கூறிவிட்டு மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்றிருக்கிறார் என்று தகவல் வந்து சேரவே, அங்கே என்னதான் நடக்கிறது என்று பார்த்துவர அதிகாரி ஒருவரை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தது எஃப்.பி.ஐ.
அங்கு சென்ற அதிகாரி, அலுவலகத்தில் இவரது டேபிளில், அல்-காய்தா குறித்த ரகசியத் தகவல்கள் கொண்ட ஃபைல்கள் பரப்பப்பட்டுக் கிடப்பதைக் கண்டார். இதனால் அவரது பின்னணியில் சந்தேகம் ஏற்பட்டபோதும், அவர் வேலையில் தொடர அனுமதிக்கப்பட்டார்.
அவருக்குக் கொடுக்கப்பட்ட அஸைன்மென்ட் ஒன்றுதான் மாற்றப்பட்டது.
அப்போதைய காலகட்டத்தில் எஃப்.பி.ஐ.யில் அரேபியர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் இருந்ததால், இவர்மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் விரும்பவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் அரசு அமைப்புகளில், ஒருவர்மீது, அவர் குறிப்பிட்ட ஒரு இனத்தவர் என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்போனால், சம்மந்தப்பட்டவர் நீதிமன்றத்துக்குப் போய், நடவடிக்கை எடுத்த அதிகாரியைச் சிக்கலில் மாட்டிவிட முடியும்.
பென்டகனின் முன்னாள் உளவு அதிகாரியான வில்லியம் காத்திராப் இதை ஒப்புக் கொள்கிறார். “இப்படி ஒருவரைப் பணியில் சேர்த்துவிட்டால், அதன்பின் அவரை வெளியேற்றுமுன் ஒருமுறைக்குப் பலமுறையாக யோசிக்க வேண்டியிருக்கிறது.
இதனால் அமெரிக்காவில் குடியிருக்கும் அரபு முஸ்லிம்களைப் பணியில் அமர்த்தும் முன்பே, அவர்களது விஷயத்தில் பாதுகாப்பு அமைப்புகள் அவரைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் இவர்.
“அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாகவோ, அதிகாரிகளாகவோ நேரடிப் பொறுப்புக்களைக் கொடுப்பது, பிரச்சினைகளை நாமே வரவழைப்பது போன்றது. சமீபத்தில் முஸ்லிம் எஃப்.பி.ஐ. அதிகாரி ஒருவர், தன் இனத்தைச் சேர்ந்த குற்றவாளியை ஒருவரை விசாரிக்க மறுத்திருக்கிறார். இதுவே ஆபத்துக்கள் காத்திருப்பதற்கான ஒரு சிறந்த உதாரணம்” என்கிறார் வில்லியம் காத்திராப்.
இன்றைய தேதியில், அமெரிக்க உளவுத்துறைகளுக்குள் தீவிரவாத தொடர்புடைய எத்தனை பேர் உள்ளார்கள் என்ற கணக்கு யாரிடமும் கிடையாது. ஏராளமாக இருப்பார்கள் என்ற சந்தேகம் மட்டுமே உள்ளது!
The End

No comments:

Post a Comment