அமெரிக்க உளவுத்துறை: தீவிரவாதிகள் ரகசியமாக பதுங்க அட்டகாசமான இடம்! Part 2 05
நான்காம் பக்க தொடர்ச்சி
“ஒரு சாதாரண கடற்படையில் இருக்கும் பாதுகாப்புக்கூட தேசிய பாதுகாப்பு அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் உளவு அமைப்புகளிடம் இல்லை” என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக வாஷிட்டன் போஸ்ட் எழுதியிருக்கிறது.
இவருக்கு முன்பே கில்லாடிகள் இருந்தனர்!
சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து அலுவல் பார்ப்பதுபோல, சி.ஐ.ஏ.யின் தலைமை செயலகத்துக்கு உள்ளேயே நுழைந்ததில் நடா நதிம் பிரௌட்டி ஒன்றும் முதல் நபர் அல்ல.
கமல் அப்துல் ஹஃபிஸ் எனும் சிறப்பு அதிகாரி ஒருவர், முஸ்லிம் தீவிரவாதிகள் பற்றி அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தமக்கிடையே விவாதித்துக் கொண்ட பேச்சுக்களைப் பதிவுசெய்து, சம்மந்தப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கே அனுப்பியிருக்கிறார்.
இதே போலத்தான், ஃப்ளோரிடாவில் பணியாற்றிய சமி அல்-அரியனும் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அகப்பட்டுக் கொண்டார்.
ஃப்ளோரிடா அலுவலகத்தில் அவருடன் கூடவே பணிபுரிந்த சக உளவு அதிகாரிகள் சமி அல்-அரியனை முட்டாள் என்று நினைத்திருந்தனர்.
ஆனால், அவர் அப்படியில்லை. மிகவும் புத்திசாலித்தனமாக செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்துள்ளார் என்பது பின்னர்தான் தெரியவந்தது.
அமெரிக்க உளவுத்துறைக்குள் வெளியாட்கள் ஊடுருவுவது அமெரிக்காவுக்குள் மாத்திரம்தான் நடந்தது என்றில்லை. அமெரிக்காவுக்கு வெளியே வெளிநாடுகளிலும் சில கில்லாடிகள் அமெரிக்க உளவுத்துறையினரின் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்கள்.
இதற்குப் பல உதாரணங்கள் இருந்தாலும், ஒரு உதாரணம், சவுதி அரேபியாவில் அப்துல் ஹாபிஸ் என்பவர் ஊடுருவியது.
சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் எஃப்.பி.ஐ. ஒரு ரகசிய அலுவலகத்தை வைத்திருந்தது. அமெரிக்காவில் இயங்கும் அல்-காய்தா ஆட்களின் சவுதித் தொடர்புகளை அறிவதற்காகத் திறக்கப்பட்ட அலுவலகம் அது. அதில்தான் அப்துல் ஹாபிஸ் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.
அரேபியப் பாணி தலையங்கி மற்றும் வெள்ளை நீளங்கி அணிந்தே அலுவலகம் வரும் இவர், ரகசிய உளவு வேலைகளுக்குச் செல்லும்போதுகூட இந்த உடையை மாற்றச் சம்மதிப்பதில்லை என்று இவரைப்பற்றிய முதலாவது குற்றச்சாட்டு அமெரிக்காவிலுள்ள எஃப்.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது. …அடுத்த பக்கம் வாருங்கள்
No comments:
Post a Comment