Friday, March 8, 2013

ஐ.எஸ்.ஐ.-யின் விசாகபட்டினம் ஆபரேஷன் ஏன்? எல்லாம் ‘ரா’ செய்த ஒரு ‘விளையாட்டு’!


பாகிஸ்தான் உளவுத்துறை யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவை உளவு பார்ப்பது தொடர்பாக மத்திய உளவுத்துறை ‘ரா’, டில்லிக்கு உளவு அறிக்கை அனுப்பிய விவகாரம் தொடர்பாக இரு தினங்களுக்குமுன் விறுவிறுப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். (தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்யவும்)
அதில், பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ., விசாகபட்டினம் கடற்படைத் தளத்தை உளவு பார்க்கவே, முயற்சி செய்கிறது என்று எழுதியிருந்தோம். அது தொடர்பாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
பாகிஸ்தானியர்களுக்கு விசாகபட்டினத்தில் என்ன அவ்வளவு ஆர்வம்? அங்குள்ள இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டங்களை நோட்டமிடுவது என்பதே ரா தமது உளவு அறிக்கையில் கூறியுள்ள காரணம். அதையே நாமும் வெளியிட்டிருந்தோம்.
ஆனால், வெளிநாட்டு உளவுத்துறை வட்டாரங்களில் இது தொடர்பாக வேறு ஒரு பேச்சும் உண்டு. “இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணிக்கலாம் என்பதும் சாத்தியம்தான். ஆனால் அதல்ல இதிலுள்ள ரகசியம். இது வேறு விவகாரம். அதை ரா மறைக்கிறது. இந்த விவகாரம், பெரியது” என்கிறார்கள் அவர்கள்.
அவர்கள் குறிப்பிடும் விவகாரம், SLOC சென்டர். இதில் ரா சில வருடங்களாகவே புகுந்து விளையாடியது. அதை தாமதமாகவே பாகிஸ்தான் புரிந்து கொண்டது என்கிறார்கள்.
SLOC என்பதன் விரிவாக்கம் Sea Lines Of Communication. இது என்ன வென்றால் ஒரு நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ராணுவ முகாம்கள், ஆபரேஷன் சென்டர்கள் என்று வெவ்வேறாக பிரிபட்டு இருந்தாலும், அவை அனைத்தும், மையக் கட்டுப்பாட்டு கட்டளைத்தளம் ஒன்றின் உத்தரவின்படி காரியங்களைச் செய்வதுபோல, கடலிலும் கடற்படைக்கு ஒரு கட்டளைத்தளம் உண்டு.
குறிப்பிட்ட கடற்படையின் கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வெவ்வேறு கடற்பகுதிகளில் சஞ்சரித்து கொண்டிருக்கலாம், அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம்.
இவை அனைத்தையும், ஒரு மானசீக கட்டளைத் தளத்துடன் இணைக்கும் செயல்முறைதான், SLOC சென்டர்.
இந்திய கடற்படைக்கு SLOC சென்டர் இருப்பதுபோல, பாகிஸ்தான் கடற்படைக்கும் உள்ளது. கடந்த சுமார் 10 ஆண்டு காலமாக பாகிஸ்தானிய கடற்படையின் SLOC சென்டர் உத்தரவுகள், நகர்வுகள் எல்லாமே அவர்களை அறியாமலேயே ஒட்டுக் கேட்கப்பட்டன என்ற ஒரு உண்மை, கடந்த ஆண்டின் (2011) ஆரம்பத்தில்தான் பாகிஸ்தானுக்குத் தெரியவந்தது என்று சொல்கிறார்கள்.
ஒட்டுக்கேட்டது யாரென்று சொல்லவும் வேண்டுமா? சொல்கிறோம். அடுத்த பக்கம் வாருங்கள்…

No comments:

Post a Comment