அமெரிக்க உளவுத்துறை: தீவிரவாதிகள் ரகசியமாக பதுங்க அட்டகாசமான இடம்! Part 2 04
மூன்றாம் பக்க தொடர்ச்சி
பின்னர் இந்தப் பெண் அகப்பட்டு விசாரணை வளையத்துக்குள் வந்தபோது, இவர் எஃப்.பி.ஐ.யின் அகாடமியில் சேர்வதற்கே ஏமாற்று வழியில்தான் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றிருந்தார் என்று தெரியவந்தது. தனது அகாடமியில் அவரைச் சேர்த்துக்கொண்டபோது எஃப்.பி.ஐ. இதைக் கவனிக்காமல் முதலில் கோட்டைவிட்டிருந்தது.
எஃப்.பி.ஐ. அகாடமியிலிருந்து பட்டம்பெற்று, அந்தத் தகுதியில் சி.ஐ.ஏ.யில் பணியில் சேர்ந்த இந்தப் பெண், சி.ஐ.ஏ.யில் மூன்று வருடங்கள் மத்திய செயலதிகாரியாகப் பணியாற்றியது சி.ஐ.ஏ.யில் தலைமை செயலகம் உள்ள லாங்க்லியில்!
பணியில் இருந்தபோது இவர் என்ன செய்தார்? சி.ஐ.ஏ.யில் இருந்தபடியே, சி.ஐ.ஏ.யால் கிடைத்த உளவுபார்க்கும் வசதிகளை வைத்து எஃப்.பி.ஐ. மேற்கொண்ட விசாரணைகளை ரகசியமாகக் கவனித்து வந்தார் என்பது பின்னர் தெரியவந்தது.
தங்களது விவகாரங்களில் இவர் உளவுபார்ப்பதைத் தெரிந்துகொண்ட எஃப்.பி.ஐ. அதன் பின்னரே இவரது பின்னணி பற்றித் துருவியதில், அவர்களுக்கு அதிர்ச்சியான விபரங்கள் கிடைத்தன.
கிடைத்த விபரங்களின்படி அவருக்கு லெபனானில் ஹிஸ்பொல்லா அமைப்பில் குடும்ப உறவுகள் இருந்தன. அவர்களுடன் இவர் தொடர்பிலும் இருந்தார்.
விசாரணையின் முடிவில், நடா நதிம் பிரௌட்டி, தான் சி.ஐ.ஏ.யில் இருந்தபடி, எஃப்.பி.ஐ.யின் சில நடவடிக்கைகளை உளவு பார்த்ததை ஒப்புக் கொண்டார். அதேநேரத்தில் அவர் தான் பணியிலிருந்த சி.ஐ.ஏ.யில் இருந்தும் ஏதாவது தகவல்களை ஹிஸ்பொல்லா அமைப்புக்குக் கொடுத்தாரா என்ற விஷயத்தை சி.ஐ.ஏ.யால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நடா நதிம் பிரௌட்டி சி.ஐ.ஏ.யின் லாங்க்லி தலைமையகத்தில் பணிபுரிந்த பிரிவு என்ன தெரியுமா? வெளிநாடுகளில் ரகசிய உளவு ஆபரேஷன்களைத் திட்டமிடும் இலாகா! …அடுத்த பக்கம் வாருங்கள்
No comments:
Post a Comment