Friday, March 8, 2013

அமெரிக்க உளவுத்துறை: தீவிரவாதிகள் ரகசியமாக பதுங்க அட்டகாசமான இடம்! Part 2 03


இரண்டாம் பக்க தொடர்ச்சி
முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஸிபல் எட்மண்ட்ஸ், “கடுமையான சட்டதிட்டங்களைக் கடந்துதான் எஃப்.பி.ஐ.யில் பணிபுரிய தடையில்லாச் சான்றிதழைப் பெற முடியும். ஆனால், தற்போது எஃப்.பி.ஐ. தீவிரவாதிகள் ஒளிந்து கொள்வதற்கான பாதுகாப்பான மறைவிடம் போல ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார்.
தனக்குத் தெரிந்தே இரண்டு பெண் மொழிபெயர்ப்பாளர்கள் பணியில் இணைந்த பிறகு, எஃப்.பி.ஐ.யின் திட்டங்களைத் தீவிரவாதிகளுக்குத் தெரிவித்து வந்தனர் என்கிறார் இவர்.
அதில் அரபு மொழி பெயர்ப்பாளரான ஒருவர் அல்-காய்தாவுக்கும், ஃபார்ஸி மொழி பெயர்ப்பாளரான மற்றொருவர் ஈரானுக்கும் தகவல்கள் அனுப்பி வந்துள்ளனர் என்பது அவர் தெரிவிக்கும் தகவல்.
எஃப்.பி.ஐ.யில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்த மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒருவர், விடுமுறைக்காகத் தனது தாயகத்துக்குச் சென்றிருந்தார். விடுமுறைக்குச் சென்றிருந்த இடத்தில் அவரது தாயகமான அந்த அரபு நாட்டின் உளவுத்துறை, இந்த நபர் தமது எதிரி நாட்டிலிருந்து பரிசுகளைப் பெற்று வந்ததோடு, அதனை மறைத்த குற்றத்துக்காக, அவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது!
இந்த அரபு நாட்டின் எதிரி நாடு அமெரிக்கா அல்ல. அப்படியானால் அமெரிக்காவிலிருந்து ரகசியங்கள் அந்த நாட்டுக்குச் சென்றிருக்கலாம்.
நடா நதிம் பிரௌட்டி விஷயத்திலும், ஒன்றுக்கு மேற்பட்ட அமெரிக்க உளவுத்துறைகள் கோட்டை விட்டிருந்தன.
இந்தப் பெண் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.யில் ஒரு மத்திய செயலதிகாரியாக வேலை செய்தவர். அந்த வேலை கிடைப்பதற்கான கல்வித் தகுதி அவருக்கு எப்படிக் கிடைத்தது என்றால், அவர் மற்றொரு உளவுத்துறையான எஃப்.பி.ஐ.யின் அகாடமியில் படித்துப் பட்டம் பெற்றவர்.
மொத்தத்தில் அமெரிக்காவின் இரு பிரதான உளவுத்துறைகளுக்கு ஊடாகவும் இவர் வந்திருக்கிறார்.  …அடுத்த பக்கம் வாருங்கள்

No comments:

Post a Comment