அமெரிக்க உளவுத்துறை: தீவிரவாதிகள் ரகசியமாக பதுங்க அட்டகாசமான இடம்! Part 2 02
முதலாம் பக்க தொடர்ச்சி
இதைத்தவிர மொழிபெயர்ப்பாளர்களைத் அவரசமாகத் தேடுவதற்காக உளவுத்துறைகள் தொடர்புகொண்ட ஒருவர் அப்துல் ரஹ்மான் அல்மொதி.
இவர் யாரென்றால் அப்போது வாஷிங்டனில் வசித்த, அங்குள்ள முஸ்லிம் மக்களிடையே பிரபலமான ஒரு மதத் தலைவர். இவரைத் தொடர்பு கொண்ட அமெரிக்க உளவுத்துறைகள், அரபு மற்றும் உருது மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்புச் செய்யக்கூடிய சிலரைத் தமக்கு அடையாளம் காட்டுமாறு கேட்டுக்கொண்டன.
அப்துல் ரஹ்மான் அல்மொதி கைகாட்டியவர்களுக்கு உளவுத்துறைகளில் வேலையும் கிடைத்தது.
அதுவரைக்கும் சரி. எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பின்னாட்களில் இதே அப்துல் ரஹ்மான் அல்மொதி, எஃப்.பி.ஐ.யிடம் அகப்பட்டுக் கொண்டார். அல்-காய்தா இயக்கத்துக்காக நிதிச்சேகரிப்பில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது.
அப்படியானால், அவரால் கைகாட்டப்பட்டு, உளவுத்துறைகளில் வேலையில் இணைக்கப்பட்டவர்கள், பணியில் இருந்தபோது என்னவெல்லாம் செய்திருப்பார்களோ? அவர்களில் எத்தனைபேர் இன்னமும் உளவுத்துறைப் பணிகளில் தொடர்கிறார்களோ?
இவையனைத்துக்கும் மேலாக, பல நாட்களாகத் தேங்கிக் கிடந்த அரபு மொழிப்பெயர்ப்பு வேலைகளை முடிக்க, எஃப்.பி.ஐயில் அந்த நாளைய இயக்குனர் ராபர்ட் முல்லர், சிலரை தானே நேரடியாகத் தொடர்பு கொண்டு பணியில் இணைத்துள்ளார்.
இவர்களில் பலரது பெயர்கள் தற்போது தொண்டு நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் பட்டியல்களிலும், அல்-காய்தாவுக்கு பண உதவிகள் செய்து அகப்பட்டவர்கள் பட்டியலிலும் இருக்கின்றன! …அடுத்த பக்கம் வாருங்கள்
No comments:
Post a Comment