அமெரிக்க உளவுத்துறை: தீவிரவாதிகள் ரகசியமாக பதுங்க அட்டகாசமான இடம்!
அமெரிக்க உளவுத்துறைகளுக்குள் பணியில் சேருவதென்றால், அது அவ்வளவு சுலபமல்ல. பணியில் சேர விண்ணப்பிக்கும் நபர் பற்றிய எத்தனையோ ஸ்கிரீனிங்குகள், பேக்ரவுண்ட் செக்குகள் என்று அந்த ஆளையே முழுமையாக உருவிப் பார்த்துவிட்டுத்தான் பணியில் சேர்த்துக் கொள்வார்கள். அந்தளவு கில்லாடிகள் அமெரிக்க உளவு அமைப்புகள்.
ஆனால், கில்லாடிக்குக் கில்லாடியாக, இந்த ஸ்கிரீனிங் எல்லாவற்றையும் கடந்து உளவுத்துறைக்குள் பணியில் சேர்ந்துவிடும் வெளியாட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்களில் சிலர், ஏதோ ஒரு காலத்தில் உளவுத்துறையிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள். வேறு சிலரோ, கடைசிவரை அகப்பட்டுக் கொள்ளாமல் காலத்தை ஓட்டிவிடுகிறார்கள்.
ஓருசிலர், உளவுத்துறையின் பணியிலிருந்து பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர்தான், அவர்கள் வெளியாட்களுக்காக உளவு பார்த்த விஷயமே தெரியவந்திருக்கிறது. அதற்குள் அவர்கள் உள்ளேயிருந்து அனுப்பவேண்டிய தகவல்கள் அனைத்தையும் அனுப்பி முடித்திருப்பார்கள்.
இவையெல்லாம் உளவுத்துறைகளுக்கு உள்ளே நடக்கும் உள்விவகாரங்கள்.
பொதுவாகவே, உளவுத்துறைகளுக்கு உள்ளே நடப்பவை சுவாரசியமானவை. பல சமயங்களில் இவை வெளியே வருவதில்லை. குறிப்பிட்ட சில சம்பவங்கள் வேறு வழியில்லாமல் வெளியே வரவேண்டிய கட்டாயத்தில், வெளியாகும்.
அமெரிக்காவின் சக்திவாய்ந்த உளவுத்துறைகளுக்குள் வெளியாட்கள் ஊடுருவுவதும், அந்த விஷயம் வெளியே வருவதும், நாம் மேலே குறிப்பிட்ட சுவாரசிய சம்பவங்களில் அடக்கம்.
உலகம் முழுவதிலும் கண்களையும் காதுகளையும் வைத்திருக்கும் அமெரிக்க உளவுத்துறைகளுக்குள் வெளியாட்களால் வெளியாட்களால் ஊடுருவ முடியுமா? இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? நடந்திருக்கிறதே! ...அடுத்த பக்கம் வாருங்கள்
No comments:
Post a Comment