B.P.O அடிமை .காம் பகுதி-3,அடிமைகளின் சொர்க்கம்
அடிமைகளின் சொர்க்கம்
டிசம்பர் மாதம் என்றாலே பீபிஓ கம்பெனிகளில் ஜாப் வரத்து வெகுவாக குறைந்து விடும்.கிறிஸ்துமஸ் முடியும் வரை அதிக ஜாப்கள் வராது. அந்த மாதம் கூட சரியான நேரத்துக்கு எங்களை வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள். பக்கத்து டீம் ஜாப் ஐ வாங்கி செய்ய சொல்வார்கள்.
இன்னைக்கும் பக்கத்து டீம் ஜாப் ஐ வாங்கி செய்யசொல்லிட்டானுங்க.மெதுவாக செய்ய ஆரம்பித்தேன் மணி பனிரெண்டுதான் ஆகுது .காலையில வந்த வுடனே டி.எல் கிட்டேசொன்னேன்”இன்னைக்கு பர்மிசன் வேணும்” பார்க்கலாம் ஜாப் வரத்தை பார்த்துட்டு சொல்லுறேன். கடந்த ரெண்டு மாசமா நான் பர்மிசனே போடவில்லை,இது தான் கடைசி வாரம் இப்போ போடலேன்னா 3 வது மாசம் ஆயிடும்.இன்னும் டி.எல் வரலை.அவரு பிரேக் போனாலே எப்படியும் 1 மணி நேரம் ஆயிடும். கதைஅடித்துக்கொண்டு இருந்தோம்.
நான் “எங்க தாத்தா ராஜராஜ சோழன்கிட்டே படைத்தளபதியா வேலைசெஞ்சாரு” கதை விட்டேன்.உடனே ஒருவ்வர் சொன்னார்”ந்£ங்க என்ன கம்யூனிட்டின்னு சொல்லுங்க உண்மையா பொய்யான்னு சொல்லுறேன்”.
மிகவும் சாதரணமாக மற்றவர்கள் இருந்தார்கள். “எனக்கு என்ன சாதின்னு தெரியாது ஆனா ஒண்ணுமட்டும் தெரியும் பாப்பான் தான் தான் நம்மையெல்லாம் வைப்பாட்டி மக்களா மாத்தினான்.என்னோட சாதிய நான் சொன்னேனா அவன் சொன்னது உண்மைன்னு ஆயிடும்” என்றேன்.அருகில் இருந்த சுரேஷ் “சும்மா அதையே சொல்லாதீங்க எந்த பாப்பான் உங்களை படிக்கவேண்டாமுன்னு சொன்னான்,திமிரெடுத்துப்போயி நீங்க படிக்கலேன்னா அதுக்கு அவனா பொறுப்பு அவன் பாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கான் அவனை புடிச்சு ஏன் நோண்டுறீங்கதிமுக ஆட்சியில முதலியாருங்க எல்லாம் எல்லாம் வளந்தாஙளே அப்புடி எந்த பாப்பான் பணக்காரனா இருக்கான்? என வெடித்தார். “அப்புடியா எல்லாம் முதலியாரு பணக்காரனாயிட்டான்னு சொல்லுறீங்களே எங்க ஊரில் பக்கம் கஞ்சி தொட்டி திறந்தப்ப கியூ வுல நின்னது முக்காவாசி அவுங்க தான் திமுக ஆட்சியில இருந்தப்ப கூட சிலபேர் பொறுக்கி தின்னுறுப்பான் அதுக்காக முதலியார் சமூகமே முன்னேரிடுச்சா என்ன?சுற்றி இருந்தவர்களை நோட்டம் விட்டேன் பாதிப்பேர் தன் கண்களில் எனக்கு ஆதரவாய் பார்வை பார்த்தனர். மற்றொரு பெண் ஊழியரோ “எங்க சாதியில கூட அப்ப்டி இருக்காங்கன்னு சொன்னா நான் கோபப்பட மாட்டேன் அப்படியும்கூட பன்னலாம்”சந்தடி சாக்கில் தான் ஆதிகக சாதி என்பதை எடுத்துவிட்டார். அதற்குள் மதிய உணவுக்கு சென்றோம்.
சாப்பிடு போது கூட கடுமையான விவாதம் நானும் சுரேஷ¤ம் பேச அருகிலிருந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
உங்களை எந்த வகையில முன்னேற்றத்தை தடுத்தாங்க? .”தமிழகத்தில எதனை கிராமத்தில ரெட்டை குவளை முறை இருக்குன்னு தெரியுமா.வயதான தலித்தை கூட் மேல்சாதிகாரன் பயன் வாடா போடான்னு கூப்பிட்டு பார்த்து இருக்கீங்களா?”
எல்லாம் பார்த்து இருக்கோம் அப்புறம் என்னா இதுக்கு அவன் அங்கே இருக்கான் வேற இடத்துக்கு போக வேண்டியது தானே ரசிகர் மன்றம் வைக்கின்றது யார் ? கள்ளச்சாராயம் குடிக்கிறது யார் ? தலித்துங்க தானே முதல்ல தன் முதுகுல இருக்குற அழுக்க துடைச்சுட்டு வரசொல்லுங்க என்னமோ தலித்து எல்லாம் யோக்கியம் மாதிரி பேசுறீங்க,உமா சங்கர் என்ன சாதின்னு தெரியுமா அவரு படிச்சு முன்னேறுல இவனுக எல்லாம் சோம்பேறி”என்றார்.சற்று நேரத்துக்கு முன் எனக்கு ஆதரவாய் இருந்த கண்கள் எல்லாம் இப்போது சுரேஷ் பக்கம் சாய்ந்திருந்தது. நான் தீர்க்கமாய் சொன்னேன் எல்லோரு ரசிக்குறாங்களே இளையராசா அவரு ஊருக்கே ராசான்னாலும் பண்ணைபுரத்துல அவரு சொந்தக்காரனுக்கு ரெண்டாவது டம்ளர் தான் அதை விடுங்க மேல்சாதி மேல்சாதி
ந்னு பீத்திக்கிறீங்களே உன்னை ஏன் கோயிலுக்குள்ள மூலஸ்தானத்துக்குள்ள விட மாட்டேங்குறான் கேட்டா அது அவன் சுத்தமானவன் சொல்லுவீங்க ஏன் நீ உன் குடும்பத்துல யாருமே சுத்தம் இல்லையா ? இவ்வலவு ஏன் ஐஐடியில மாடுமேய்க்குற பயலுக வந்தா படிப்போட தரம் குறையும்னு சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துனானுங்களே அப்பமட்டும் உங்களோட எல்லா வாயையும் மூடிக்குறீ…………. நேரம் ரொம்ப ஆகிவிட்டது .கைகள் காய்ந்திருந்தது.
மீண்டும் வந்து வேலையை தொடர்ந்தேன் டி.எல் பக்கத்து டீமிலிருந்து வாங்கி நிறய ஜாப் கொடுத்தார்.எல்லாம் முடித்தேன்.கைகள் வேலை செய்தாலும் மனமோ சரியா பதில் சொன்னோமா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றது.என்ன செய்யலாம் ஆபிஸ் விட்டவுடனே சுரேஷ் கிட்ட நிறய பேசனும் அவன் எப்படி யெல்லாம் கேள்விகேப்பாருன்னு மனதுக்குள்ளயே யோசித்து பதிலும் சொல்லிப்பார்த்தேன். இந்த யோசனையில் பர்மிஸன் கேட்டதை மறந்து போனேன்.மணி 4.30 ஆனது கிட்டதட்ட இது 6 து முறை சரியான நேரத்துக்கு கிளம்புவது. திரும்பி பார்த்தேன் சுரேஷ் சென்று கொண்டிருந்தார்.ஓடிப்போய் அவரோடு நடக்க ஆரம்பித்துவிட்டேன்.எதேச்சையை அவரின் கையை பார்த்தேன் கையில் கேடயம் வாள் மற்றும் தனியாக மீன் பச்சை குத்த்ப்பட்டு இருந்தது.இந்த சின்னத்தை எங்கேயோ பார்த்த நினைவு, அவர் ஆரம்பித்தார்” நானெல்லாம் எங்க சாதிக்காக எத்தனை கேஸ் விழுந்திருக்குன்னு தெரியுமா தஞ்சாவூரில ஒருத்தனை ஓட வீட்டு குத்துனேன் எதுவும் வேண்டாமுன்னு விட்டுட்டு வந்துட்டேன்
எனக்கு பி சிகளை கண்டாவே புடிக்காது.எங்க ஊர் தஞ்சாவூர் மன்னாகுடி அடுத்த கிராமம் பிசிங்க அடிச்சா திருப்பி அடிதான்.சுத்தி 108 கிராமம் இருக்குது எங்க ஊர் மாதிரி எங்கேயும் இல்லை நான் ஸ்டேட் கபடி பிளேயர் பக்கது ஊரில எங்க டீம் போனாலே பைனலில பிராடு பண்ணி தோக்கடிச்சுருவானுங்க தான் ஆதிக்க சாதியிடம் எப்படியெல்லாம் அடிப்பட்டதை விவரித்தார். கிண்டி ரயில்வே ஸ்டேசனில் உட்கார்ந்த படி பேசிக்கொண்டிருந்தோம்.என்ன தான் தீர்வு என்றேன் . நான் வரலை மற்றவனும் வரவேண்டியது தானே எல்லோரும் படித்தா சாதி ஒழிஞ்சுடும்” சொல்லிவிட்டு நேரமாச்சு என்ற படி கிளம்பினார்.
நான் யோசித்தேன்”ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து இப்படி அம்மக்களுக்கே எதிராக பேச வைப்பது எது? ஒருவேளை அவர் அதிகமாய் பாதிக்கப்பட்டதால் இப்படி பேசுறாரோ.மறு நாள் காலையில் டீ பிரேக்கின்போது மீண்டும் ஆரம்பித்தது சுரேஷ் பேச ஆரம்பித்தார்”என்ன விவசாயம் பண்ணுறாங்க மாடர்ன் உலகத்துல அமெரிக்காவுல எப்படி முன்னேறுறானு பாக்குறத விட்டுட்டு இன்னும் நிலத்தை புடிச்சு தொங்குறானுங்க என ஆரம்பித்து நேத்து போல் தாழ்த்தப்பட்டோர் மீது சேற்றை வாரி இறைத்தார்.
நானும் பதிலுக்கு பேசினேன் பிறகுதான் புரிந்தது இவன் பாதிக்கப்பட்டதால் பேசவில்லை அடிமைப்புத்தி அவனை பேச வைக்கின்றது
நாலு பேர் இருக்கும் போது தன்னை மேல்சாதியாக காட்டிக்கொள்வது தனியே என்னிடம் பேசும் போது தலித்தாக காட்டிக்கொள்வது என தன் பச்சோந்தி தனத்தை காட்டிக்கொண்டு இருந்தான். இவனின் தேவை எல்லம் தன்னை மற்றவர்கள் ரசிக்கவேண்டும் என்பது தான்.
நான் வெறுத்துப்போனேன் இப்படியும் ஒரு மனிதனா? பிரேக் முடிந்து வரும் போது நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள் “New year celebration contest ” நடனம் பாட்டு என சகல கலைகளும் அடங்கியிருந்தன. டி.எல் சொன்னார் எல்லாத்துலேயும் கலந்துக்கோங்க.என்னோட டீம் -ல் இது சம்பந்தமாக பேச ஆரம்பித்துவிட்டேன். நை ஷிப்ட்க்கும் ஓடிக்கும் அலவன்ஸ் தரதில்ல போட்டி வக்குறானுங்களாம் போட்டி.என் டீமிலிருந்த பெண்ணை கேட்டேன்” நீங்க கலந்துக்க போறீங்களா” ” நல்லா டேன்ஸ் பண்ணுவேன் ஆணா வேண்டாம்” என்றார்.
மூன்று நாட்கள் போனது நடன போட்டிக்கு இன்சாஜ் இருவர் மணிக்கொருதரம் வந்து சொல்லிக்கொண்டே இருந்தனர் அப்பென்ணிடம்”கலந்துக்கோங்க”.கடைசியாய் விபி வந்தார் என்ன கேர்ள்ஸ் யாரும் கல்ச்சுரல் புரோகிராம்ஸ்ல கலந்துக்கவே இல்லீயா ஏன்? எல்லாம் பேர் கொடுத்துருங்க சரியா ?சொன்னவுடனே பணிபுரியும் பெண்களில் பாதிபேர் பேரை கொடுத்தார்கள் என் டீமிலிருக்கும் பெண் உட்பட. மாலை 6 மணி ஆனது திடீரென நிறைய ஜாப் வந்திருந்தது செய்து கொண்டிருந்தோம்.ஒருவர் லைட்டாக என்னிடம் கேட்டார்” நீங்க இந்த புரோகிராம் பத்தி என்ன நினைக்குறீங்க?”
மெதுவாய் சொன்னேன் ” சொறி நாய்கள் ஆடுகின்றன வெறி நாய்கள் வேடிக்கை பார்க்கப்போகின்றன” அவ்வளவுதான் ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் ” எப்படி சொல்லலாம் ,இதை ஏன் ஒரு எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ் ஆக நினைக்ககூடாது,டேன்ஸ் ஆடுற எல்லாரும் கீழ்த்தரமானவங்களா? அந்தப்பெண் சொன்னார்” நடனத்திறமை எங்கிட்ட இருக்கு இதை எப்படி கேவலமா சொல்லலாம் என்றார் மூக்கு விடைத்தபடி.
” அதாவதுங்க நீங்க எங்க வேணும்னாலும் ஆடலாம் இங்கே எதுக்கு ஆடறீங்க உண்மையாலுமே நடனத்து மேல அவ்வளவு பற்று அப்படீன்னா நான் சொல்லுற இடத்துல மக்கள் பிரச்சினைக்காக ஆடறிங்களா. நீங்க சொல்லுற எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ் அப்படீங்குறது இப்ப எதுக்கு பயன் படுதுன்னு சொல்லுங்க மற்றவரிடமிருந்து தன்னை வித்யாசப்படுத்தி காட்டறதுக்குதானே.அதுக்கு பல வழிமுறை இருக்கு எந்த வழியா தன்னை வெளிப்படுத்துறீங்க என்பதுதான் முக்கியம்.நான் சொல்லுற இடத்துல மக்கள் பிரச்சினைக்காக ஆடறிங்கன்னா யாரும் உங்களை கேலிப்பொருளா பார்க்க மாட்டாங்க ஒருவேளை போலீசு அடிகூட கிடைக்கலாம் நீங்க் தயாரா.ஆனா இங்க எப்படி? ஓடி பார்த்தா பணம் கிடையாது, நைட் ஷிப்ட்ல food கிடையாது தினமும் ஓ.டி ஓ.டி ன்னு நம்மள ஓடவச்சுட்டானே அதுக்கு ஆடறீங்களா அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு?ஸ்கூல்,காலேஜ்ல ஆடறதுக்கும் ஆபீஸ் ல ஆடறதுக்கும் வித்யாசம் இருக்கு நீ நேரடியா பாதிக்கப்படுறயா இல்லையா? இதுக்கு எல்லாம் சம்மதம் சொல்லி தான் ஆடறீங்களா. அப்படித்தான் மத்தவங்களுக்காக என்னை எல்லோரும் ரசிக்கணும்கறதுக்காக ஆடுவேன்னு சொல்லுங்க அதை விட்டுட்ட்டு நடனத்திறமை அது இதுன்னு கதை அளக்காதீங்க.ஆனா ஒண்ணு இங்க நீங்க ஆடறது மூலமா தொழிலாளியான நீங்க கேள்வி கேட்குற உரிமையைஇழந்து அடிமையா மாறுவீங்க என்பது மட்டும் நிச்சயம்.”
ஒரு வாரம் கழிந்தது function க்கு நாளும் இடமும் குறித்துவிட்டார்கள்,ஆரம்பத்தில் போககூடாது என நினைத்த நான் கோமாளிகள்
என்னதான் செய்கிறார்கள் என்பதற்காகவே சென்றேன். நான் போவதற்கு பல நேரம் முன்னே நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டார்கள், நான் போகும் போது சுரேஷ் ஆடிக்கொண்டு இருந்தார்.அடுத்து அந்தபெண் கும்பலாக ஆடியது.ஜோக் என்று சொன்ன படி எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். நான் உம்மனாமூஞ்சியாகவே இருந்தேன்.இறுதியாக பேசிய பிரசிடெண்ட்”அடுத்த வருசம் நிறய ஜாப் வரும் எல்லோரும் அதிகமா ஓடி பார்க்கவேண்டிவரும் இந்த function ஒரு புத்துணர்வு தான் இந்த வருசம் வேலை செஞ்ச மாதிரி அடுத்த வருசம் 10 மடங்கு வேலை செய்யனும் சரியா லெட்ஸ் என்ஜாயென்றார்” வுடனே விசில் பறக்க அடுத்த பாட்டு ஆரம்பித்துவிட்டது.அவன் வெளிப்படையாகத்தான் சொல்கிறான்.இவர்கள் தான் தொழிலாளி என்பதை மறந்து அடிமைகளாய் வரிசையில் நிற்கிறார்கள்.அதற்குமேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை அவசராவசரமாய் வெளியேறினேன்.ய்யரு என்னை கவனிக்கவில்லை.அடிமைப்போதையில் ஆடிக்கொண்டிருப்போரால் எதையும் கவனிக்க முடியாது ஆண்டானின் கட்டளையை தவிர
No comments:
Post a Comment