நேதாஜியின் மரணம்- வெடித்து கிளம்பும் புதிய உண்மைகள்!
இந்தியாவின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்து ஜப்பானுடன் கூட்டணி அமைத்து ஆங்கிலப்படைக்கு எதிராக இரண்டாம் உலகப்போரில் போரிட்டவர் சுபாஷ் சந்திர போஸ். இந்திய இளைஞர்களின் கதாநாயகனாக திகழ்பவர். ஆனால் அவரது மரணம் குறித்த சர்ச்சைகள், சந்தேகங்கள் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. ஒரு நாட்டின் வரலாறு பற்றி அறிய அந்த நாட்டு குடிமக்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் தேசியத் தலைவரான சுபாஷ் சந்திர போஸின் கடைசி நாட்களைப் பற்றிய மர்மத்தை மக்களுக்கு தெரிவிக்க எந்த இந்திய அரசும் உண்மையாக முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை.
இதுவரை நேதாஜி பற்றிய ரகசியத்தை அறிய இந்தியாவில் மூன்று கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக 1956 ஆம் ஆண்டு நேரு, ஷா நவாஸ் கமிட்டி-ஐ அமைத்தார். இரண்டாவதாக கோசலா கமிட்டி அமைக்கப்பட்டது. 1999 – ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு முகர்ஜி கமிஷன்-ஐ அமைத்தது. இந்த விசாரனை கமிஷன் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிM.K. முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கமிட்டி தனது அறிக்கையை8-11-2005 அன்று அப்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக சிவராஜ் பட்டீல் அவர்களிடம் அளித்தது. இந்திய பாராளுமன்றத்தில் 17-05-2006 அன்று அவ்வறிக்கை முன் வைக்கப்பட்டது. முதல் இரண்டு கமிஷன்களின் முடிவுகளுக்கு எதிராக முகர்ஜி கமிஷன் முடிவு இருந்தது அது நேதாஜி 18-08-1945 அன்று விமான விபத்தில் இறந்தார் என்ற வாதத்தை ஏற்கவில்லை. . நேதாஜி ரஷியா தப்பி செல்வதற்காகவே விமான விபத்து நடந்தது போல் நாடகம் நடத்தப்பட்டது என்று தெரிவித்தது. அதற்கு ஆதாரமாக, 14-08-1945 முதல் 20-09-1945 வரை தைவானில் விமான விபத்து நடந்ததாக ஆவணங்கள் ஏதும் தங்களிடம் இல்லை என்ற தைவான் அரசின் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டது.. அதே சமயத்தில் நேதாஜி ரஷியாவில் இருந்ததை உறுதிப்படுத்தவும் முடியவில்லை எனவும் கமிஷன் தெரிவித்தது. முகர்ஜி கமிஷன் அறிக்கையை காங்கரஸ் அரசு நிராகரித்தது. மேற்கண்ட மூன்று கமிஷன்களின் அறிக்கையுமே மக்களின் சந்தேகத்தை தீர்ப்பதற்கு பதிலாக மர்மத்தை அதிகரிக்கவே செய்கின்றன.
நேதாஜியின் மரணத்தை பற்றி பல புத்தகங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக சமர் குஹா எழுதிய Netaji: Dead or Alive? மற்றும் அனுஜ் தார் எழுதிய Back from Dead: Inside the Subhas Bose Mystery ஆகியவைகளை சொல்ல முடியும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள அனுஜ் தார் எழுதிய India's Biggest Cover-up என்ற புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்க புத்தகமாக கருதப்படுகிறது.
நேதாஜியின் மரணத்தை பற்றி பல புத்தகங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக சமர் குஹா எழுதிய Netaji: Dead or Alive? மற்றும் அனுஜ் தார் எழுதிய Back from Dead: Inside the Subhas Bose Mystery ஆகியவைகளை சொல்ல முடியும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள அனுஜ் தார் எழுதிய India's Biggest Cover-up என்ற புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்க புத்தகமாக கருதப்படுகிறது.
இப்புத்தகமானது 65 வருடங்களாக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் இந்திய ரகசிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை தருகிறது. நேதாஜி 1985 வரை உயிரோடு இருந்தார் என்பதற்கான ஆதாரமாக மிக ரகசிய (top secret) ஆவணங்களையும், புகைப்படங்களையும் தருகிறது.
கூடுதலாக தற்போது இந்திய ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜி வெளியுறவு அமைச்சராக இருந்தபோது நேதாஜி பற்றிய உண்மைகள் வெளிவருவதை தடுக்கும் அல்லது மூடி மறைக்கும் வகையில் செயல்பட்டார் என்றும் தெரிவிக்கிறது.
பிரணாப் முகர்ஜி வெளி உறவு அமைச்சராக இருந்த பொது நேதாஜி விமான விபத்தில் இறந்தார் என்ற வாதத்தை போதிய ஆதாரங்கள் இல்லாத போதும் தேவைக்கும் அதிகமாக ஆதரித்தார் என்று புத்தகத்தின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். அதற்கு ஆதாரமாக 1996 –ல் நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறார். 1996 –ல் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் தனது ரகசிய குறிப்புரையில், ரஷிய உளவு நிறுவனமான KGP –இன் ரகசிய ஆவணங்களில் நேதாஜி பற்றிய ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா? என்பதனை அறிய தேடுதல் நடவடிக்கை எடுக்கும்படி ரஷிய கூட்டமைப்பிடம் இந்திய அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு தெரிவித்தார். பிரணாப் முகர்ஜி அக்குறிப்புரையை படித்ததாகவும், அதன்பின் அப்போது வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த சல்மான் ஹைதரை அழைத்து குறிப்புரை எழுதிய இணை செயலாளரை சந்திக்கும்படி அறிவுறித்தினார் என்றும், அச்சந்திப்பிற்கு பின்னர் அதே இணை செயலாளர் ஆவணங்களை ரஷியா அரசிடம் கேட்பது இந்திய ரஷிய நல்லுறவை பாதிக்கும் என்று குறிப்புரை எழுதினார் என்றும் அனுஜ் தார் கூறுகிறார். மேலும், நேதாஜி தைவானில் விமான விபத்தில் இறந்தார் என்ற வாதத்தை ஆதரிக்கும் மிகப் பெரும் ஆதரவாளராக பிரணாப் முகர்ஜி இருக்கிறார் என்றும் கூறுகிறார்.
மேலும் நேதாஜி 1945 ஆம் ஆண்டு விமான விபத்துக்கு பின்னர் ரஷியாவில் காணப்பட்டார் என்றும், அதுபற்றி இந்திய அரசாங்கம் ரஷிய அரசிடம் விளக்கம் ஏதும் கோரவில்லை என்றும் கூறுகிறார்.
1994-ல் உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகத்திடம் ஜப்பானிய அரசாங்கம் முறையான இறப்பு சான்றிதழ் வழங்கி நேதாஜியின் இறப்பை உறுதி செய்துள்ளதா என் விளக்கம் கேட்டபோது வெளியுறவு அமைச்சகம் எதிர்மறையாகவே பதில் அளித்ததாகவும், ஏனென்றால் ஜப்பானின் ஆவணங்கள் வெளிப்படையாகவே போலியாக இருந்தது என்றும் நூலாசிரியர் தெரிவிக்கிறார்.
1945 விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்றால் அவர் எப்போது இறந்திருப்பார்? என்று அனுஜ் தாரிடம் கேட்ட போது பைசலாபாத் நகரில் அவர் இறந்திருக்கலாம் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன என்றும், ஆனால் இந்திய அரசு தனது உளவு நிறுவனங்களிடம் உள்ள மிக ரகசிய ஆவணங்களை வெளியிட்டால்தான் நேதாஜி பற்றிய மர்மங்களை முழுமையாக அவிழ்க்க முடியும் என்று தெரிவித்தார். ஆனால் பிரதமர் அலுவலகம் உட்பட இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர மறுத்துவிட்டன. அவ்வாறு ரகசிய ஆவணங்களை வெளியிட்டால் அது பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை பாதிக்கும் என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.
நேதாஜி உயிருடன் இருந்தால் அல்லது உயிருடன் இருந்திருந்தால் யாருக்கு பிரச்சினையாக இருந்திருக்கும்? இந்திய அரசாங்கங்கள் குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கம் ஏன் நேதாஜி பற்றிய உண்மையை மக்களுக்கு அறிவிக்க முயற்சிக்கவில்லை?. நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டார் என்ற வாதத்தை காங்கரஸ் தலைவர்கள் உரிய ஆதாரங்கள் இல்லாமல் வலியுறுத்துவது ஏன்?. நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடுவது பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை பாதிக்கும் என்றால், நேதாஜியின் மரணம் என்பது மிக பெரிய ரகசியங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்க முடியும். ஒருவேளை உங்கள் தாத்தா, பாட்டியிடம் கேட்டால் அந்த ரகசியங்களுக்கு விடை கிடைக்கலாம்.
No comments:
Post a Comment