Sunday, January 6, 2013

மக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...

மக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...



நீங்கள் சாலையில்  நடந்து போகிறீர்கள்...திடிரென  உங்கள் முன் ஒருவர் வந்து நடனமாடினால்  எப்படி இருக்கும்?உங்களை பார்த்து பாட்டு பாடுங்கள் என சொல்லி வம்பு இழுத்தால் டென்சன்  ஆகுவீர்களா இல்லையா?

நீங்கள் நடந்து போகும்போது  உங்களை பார்த்து இரண்டு பேர் சிரித்துகொண்டே  உங்களை கிண்டல் பண்ணினால்  எப்படி உணருவீர்கள்?

சாலையில்  போகும் உங்களிடம்  அட்ரெஸ்  கேட்பதுபோல  பேசிக்கொண்டு  உங்கள் மீது  பேனா  மை  கொட்டுவதுபோல  செய்தால் கோபம் வருமா வராதா?

பைக்கில் போகும் உங்களை  மூணு போலீஸ்காரர்கள்  நிற்க வைத்து  அதை இதை சொல்லி  வா காவல் நிலையத்துக்கு  என சொன்னால்  என்ன செய்வீர்கள்?

ஒரு பெண் உங்களிடம் வந்து அவசரமா   ஒரு போன்  பண்ணனும் என உங்கள் செல்போனை  வாங்கி கொண்டு திருப்பி  தராமல்  பேசுவதுபோல ஆக்டிங்  செய்து கொண்டு இருந்தால் ஓங்கி ஒரு இழுப்பு இழுப்பீர்களா இல்லை சும்மா விடுவீர்களா?

இத்தனையும்  தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது...கேண்டிட்  கேமரா ,வடை போச்சே  போன்ற நிகழ்சிகளின் போர்வையில்  ஏதாவது  ஒரு டிவி  காரன் நடத்தி கொண்டுதான் இருக்கிறான்....இப்ப சன் மியூசிக்கில்  வடை போச்சே அப்படின்னு  இந்த நிகழ்ச்சியை பண்றானுக...டி  ஆர்  பி  ரேட்டிங்கில்  அவர்களின் நிகழ்ச்சி மேலே செல்வதற்கு பொதுமக்கள்  பகடை காயாம் !

அட கன்றாவி  பயலுகளா!நீங்க நிகழ்ச்சி ஒளிபரப்பி   காசு  பார்ப்பதற்கு  சாலையில் ஆயிரம்  வேலைகளுடன்  கடந்து  போகும் பொது மக்கள்தானா  கிடைத்தார்கள்?

நேற்று அப்படிதான் ஒரு பைக்கை  நிற்பாட்டி போலீஸ்  உடையில்  மூன்று பேர்  இரண்டு அப்பாவிகளை  அதை இதை சொல்லி  மிரட்டுவதுபோல  கலாயித்து
கொண்டு இருந்தார்கள்...அப்புறம் அந்த நபர் அழுது  விடும் சூழ்நிலைக்கு  வந்த பின்னர்  நாங்க சன் மியூசிக் தான்..சும்மா நிகழ்சிக்காக  இப்படி பண்ணினோம் என்று சொல்கிறார்கள்....ஏண்டா  லூசு பயலுகளா  நிகழ்ச்சி என்ற போர்வையில் மக்களை முட்டாள்களாக்கி  நீங்க என்ன  வேணும்னாலும் பண்ணி பணம் பார்ப்பிங்க....நாங்க வாயை  மூடி கொண்டு போகணும்?

நம் முன் வந்து டான்ஸ்  ஆடுவது,சிரிப்பது, வம்பு இழுப்பது போன்றவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்....போலீஸ் உடையில்  எப்படி ஒருவன் வந்து நிகழ்ச்சி என்ற போர்வையில் மிரட்டலாம்?கலாயிக்கலாம் ? நிஜ போலீஸ் ,சும்மா போலீஸ் என பொது மக்கள் எப்படி அடையாளம் காண்பார்கள்?ஒருவேளை உண்மையான போலீஸ் நீங்கள் பைக்கில்  போகும்போது உங்களிடம் லைசென்ஸ்  கேட்டு நீங்கள் அதை டிவி போலீஸாக  இருக்குமோ என நினைத்து பதில் சொன்னால் அவர்கள் காண்டாகி பதம் பார்த்து விட மாட்டார்கள்?

இதற்கெல்லாம் வேறு யாரும் வந்து முடிவு கட்ட மாட்டார்கள்.. நாம்தான் பதிலடி கொடுக்கணும்....இதுபோல ஏதாவது என் முன் நடந்து என்னை கலாயித்து விட்டு  நாங்கள் சன் மியூசிக்  நிகழ்ச்சிக்காகத்தான்  இப்படி செய்தோம் என கூறினால் ஓங்கி நாலு அப்பு அப்பிடுவேன்...நாளை உங்களுக்கும் நடக்கலாம்...என்ன செய்ய  போகிறீர்கள் நண்பர்களே...?

இது சும்மா ஒரு நிகழ்ச்சிதானே  இதை ஏன் போயி  பெரிதுபடுத்திகிட்டு என கேட்பவர்களுக்கு .......நாளை  நீங்கள் ஏதோ மன கஷ்டத்தில்  ,அல்லது ஏதோ அவசரத்தில்,அல்லது மருத்துவமனைக்கு   போகும்போதும் கூட  உங்களை அவர்கள் இப்படி கலாயிக்கலாம் ...அப்ப  என்ன செய்வீர்கள்?

 மக்களை  கேனயனாக்கி  அதை டிவியில்  காட்டி அந்த  மக்களையே பார்க்கவைத்து அந்த TVக்காரன்    லாபம் பார்ப்பான் ....அதை நாம வேடிக்கை பார்த்துவிட்டு  டேக் இட் ஈசின்னு  எடுத்துகிட்டு போக முடியுமா?போங்கடா  நீங்களும் உங்க  கேனத்தனமான  நிகழ்ச்சியும்....!

No comments:

Post a Comment